spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிமகளிர் உரிமைத் தொகை பெற குவிந்த பெண்களை பார்த்து அதிர்ச்சியடைந்த அமைச்சர்!

மகளிர் உரிமைத் தொகை பெற குவிந்த பெண்களை பார்த்து அதிர்ச்சியடைந்த அமைச்சர்!

-

- Advertisement -

“உங்களுடன் ஸ்டாலின்”  திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்ததை தொடர்ந்து, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ்நலத்துறை அமைச்சர் நாசர் ஆவடி அடுத்த மிட்டணமல்லியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்தாா்.மகளிர் உரிமைத் தொகை பெற குவிந்த பெண்களை பார்த்து அதிர்ச்சியடைந்த அமைச்சர்!மக்களின் குறைகளை அவர்களது இருப்பிடத்துக்கே சென்று தீர்த்து வைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடத்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்தார்.மகளிர் உரிமைத் தொகை பெற குவிந்த பெண்களை பார்த்து அதிர்ச்சியடைந்த அமைச்சர்!

இத்திட்டத்தை சிதம்பரத்தில் முதல்வர் இன்று தொடங்கி வைத்த நிலையில், ஆவடி அடுத்த மிட்டணமல்லி பகுதியில் நடைபெற்ற முகாமில் சிறுபான்மை நலத்துறை அமைச்சருமான சா.மு.நாசர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஆகியோர் கலந்து கொண்டு முதலமைச்சர் தொடங்கி வைத்த திட்டத்தை காணொளி வாயிலாக பார்வையிட்டு முகாமினை தொடங்கி வைத்தனர்.மகளிர் உரிமைத் தொகை பெற குவிந்த பெண்களை பார்த்து அதிர்ச்சியடைந்த அமைச்சர்!இந்த முகாமில் வருவாய்த்துறை, மின்சார துறை, மருத்துவ துறை என பல்வேறு அரசு துறைகள் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர். இதில் 1000க்கும் மேற்பட்ட பெண்கள் மகளிர் உரிமைத் தொகை பெற ஆர்வம் காட்டி மனுக்களை பூர்த்தி செய்து விண்ணப்பித்தனர். கூட்டத்தைப் பார்த்து அதிர்ச்சடைந்த நாசர், இவ்வளவு பேரும் மகளிர் உரிமைக்காக பெற வந்தீர்களா என கேட்டார். விண்ணப்பித்த அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை கிடைக்கும் முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என அமைச்சர் தெரிவித்தார்.

மிகப்பெரிய செல்வாக்கு பெற்றத் தலைவர் தான் காமராஜர்-கனிமொழி புகழாரம்‌

we-r-hiring

 

MUST READ