மூன்று மணி நேரத்திற்கு மேலாக திறக்கப்படாத ரயில்வே கேட் ரயில் மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் ஏராளமான மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பல்வேறு இடங்களில், ரயில்வே கேட் மட்டுமே இருக்கிறது பல இடங்களில், மேம்பாலங்கள் இல்லாததால் காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
அந்த வகையில் மேம்பாலம் இல்லாத இடமாக திரிசூலம் ரயில்வே கேட் பகுதி இருக்கிறது. தினமும் பீக் hours என சொல்லக்கூடிய நேரங்களில், ஏராளமான பொதுமக்கள் திரிசூலம் ரயில் கேட்டை கடந்து செல்வது வழக்கமாக இருக்கிறது.

இந்தநிலையில் கடந்த இரண்டு மணி நேரத்திற்கு திரிசூலம் ரயில்வே கேட் மூடப்பட்ட பிறகு திறக்கப்படாமல் இருப்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். இதனால் பேருந்துகள் கூட ரயில்வே கேட்டை கடந்து செல்ல முடியாது சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே கேட் ஊழியரிடம் பலமுறை கேட்டும் எந்தவித பதிலும் சொல்லாததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து ஊழியரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திக்கு வால் பிடிப்பது தான் திராவிட மாடல் அரசின் கொள்கையா?-அன்புமணி கேள்வி