spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஅதிமுக - தவெக சேர்ந்தாலும் திமுகதான்! எடப்பாடியை சீண்டிப் பார்க்கும் பாஜக! பத்திரிகையாளர் மணி நேர்காணல்!

அதிமுக – தவெக சேர்ந்தாலும் திமுகதான்! எடப்பாடியை சீண்டிப் பார்க்கும் பாஜக! பத்திரிகையாளர் மணி நேர்காணல்!

-

- Advertisement -

திமுக கூட்டணியில் மதிமுகவை தவிர்த்து அனைத்துக்கட்சிகளும் உறுதியாக உள்ளன. அதனால் 2026-லும் மு.க.ஸ்டாலின் தொடர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.


கூட்டணி ஆட்சி தொடர்பாக அதிமுக – பாஜக இடையே மோதல் வலுத்து வருவது குறித்தும், தவெக உடன் அதிமுக கூட்டணி அமைப்பதற்காக சாத்தியக்கூறுகள் குறித்தும் மூத்த பத்திரிகையாளர் மணி பிரபல யூடியுப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:-  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் முதற்கட்ட சுற்று பயணத்தில் கூடிய மக்களை பார்த்தால் ஓரளவு அதிமுகவுக்கு பலன் அளித்துள்ளதாகவே தெரிகிறது. ஆனால் அவரது பேச்சில் தான் முதலில் கோட்டை விட்டார். இந்து சமய அறநிலையத் துறை தொடர்பான அவரது பேச்சு கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. பின்னர் அவர் சுதாரித்துக் கொண்டார். அந்த சுற்றுபயணத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன. ஆனால் இந்த பிரச்சாரங்களால் மட்டும் அதிமுகவால் வெற்றி பெற முடியாது. அவர்களுக்கு கூட்டணி தேவை. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் தான் ஆட்சியில் இருக்கும் கட்சியை வீட்டிற்கு அனுப்ப முடியும் என்று பிரனாய் ராய் சொல்கிறார்.

we-r-hiring

தமிழ்நாட்டில் பாஜக உடன் கூட்டணி சேர்ந்தது அதிமுகவுக்கு சேதத்தை ஏற்படுத்தலாம். பாஜக இல்லாமல் ஒன்றுபட்ட அதிமுகவும், சிறிய கட்சிகள் இணைந்தாலே இன்றைக்கு திமுகவை வீட்டிற்கு அனுப்ப முடியும். திமுகவின் கூட்டணி கட்சிகளின் வாக்கு பலத்தை பார்த்தோம் என்றால் அது பெரிய அளவில் கிடையாது. 2 இடதுசாரி கட்சிகள் சேர்ந்தே 1.5 சதவீத வாக்குகள் தான் உள்ளன. விசிக ஒரு சதவீதத்திற்கு குறைவான வாக்குகளை கொண்ட கட்சி. காங்கிரஸ் கட்சி 4 சதவீதம். சீமானின் வாக்கு சதவீதம் இதைவிட அதிகமாகும். அப்போது திமுகவின் வாக்கு பலம் என்று பேசுவது ஒருவித கற்பனையாக கூட இருக்கலாம். திமுக கூட்டணியின் வாக்கு சதவீதத்தில் சொற்ப அளவிலாவது சரிவு இருக்கும். அதை கூட்டணி கட்சிகளால் நிரப்பிட முடியாது.

ஓபிஎஸ், தினகரன் ஆகியோரை இணைத்துக்கொண்டு ஒன்றுபட்ட அதிமுக உருவாகி, அதனுடன் சிறிய கட்சிகளை சேர்த்தோம் என்றால் ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு வெற்றி பெற்றதை போன்று பெறலாம். அப்போது விஜய் பேக்டர், சீமான் பேக்டர் போன்றவற்றை மீறி அதிமுக வெற்றி பெறும். தேர்தலுக்கு கடைசி 3-4 வாராங்களில் விஜய், சீமான் போன்ற யாரும் களத்தில் இருக்க மாட்டார்கள் என்று தான் தோன்றுகிறது. 1992, 1996களில் வாழப்பாடி ராமமூர்த்தி – சுப்பிரமணிய சுவாமி போன்றவர்கள் ஜெயலலிதாவுக்கு எதிராக எவ்வளவோ பேசினார்கள். ஆனால் கடைசியில் கலைஞர் வாக்குகளை அறுவடை செய்தார். அதேபோல் விஜய், சீமான் பேக்டர் இருக்கும். தேர்தல் நாள் நெருங்கும்போது இவர்கள் களத்தில் இருப்பார்களா? என்பது மில்லியன் டாலர் கேள்வியாகும்.

அப்போது எடப்பாடி பழனிசாமி மெகா கூட்டணியை கட்டமைக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்றைக்கு அதை அமைக்க முடியவில்லை. எடப்பாடி பழனிசாமி முதலில் கம்யூனிஸ்ட்களை அட்டாக் செய்து பேசிய நிலையில், தற்போது அவர்களை கூட்டணிக்கு வாங்க என அழைப்பு விடுக்கிறார். இது பாஜகவுக்கு அவர் விடுக்கும் எச்சரிக்கையாகும். கூட்டணி ஆட்சி என்று தங்களை தொடர்ந்து அவமதிப்பு செய்தால், தங்களுடன் கூட்டணி வைக்க வேறு கட்சிகளும் உள்ளன என்று எச்சரிக்கை விடுக்கும் விதமாக தான் அவர் இதனை செய்துள்ளார்.

அதிமுகவுக்கு கூட்டணி ஆட்சி என்பதில் வேறுபாடு இருந்தால் அமித்ஷாவிடம் பேசலாம் என்று அண்ணாமலை சொல்கிறார். அதிமுக கூட்டணி அரசின் அமைச்சரவையில் பாஜக இடம்பெறும் என்று அமித்ஷா 3 முறை தெளிவாக சொல்லிவிட்டார். அவரது பேச்சுக்கு, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைவரும் சப்பைக்கட்டு கட்டிக்கொண்டிருக்கிறார்கள். அண்ணாமலை சொல்வது நூறு சதவீதம் உண்மையாகும். அதிமுக ஏன் பின்வாங்குகிறது?. இதை ஒப்புக்கொள்ள மறுக்கிறது? என அண்ணாமலை எழுப்பும் கேள்வி சரியானதுதான். அதிமுகவுக்கு நெருக்கடி முற்றுகிறது. அடுத்த முறை அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வரும்போது என்டிஏ கூட்டணி ஆட்சி அமையும். அமைச்சரவையில் பாஜக இடம்பெறும் என்று சொன்னார் என்றால் அதிமுக என்ன செய்யும்?

எடப்பாடி பழனிசாமி பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி, விஜய் கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என்று எண்ணுகிறார். ஆனால் அது அவ்வளவு சுலபமான முடிவா? என்பதுதான் என்னுடைய கேள்வி. தனியாக நின்றால் தோற்றுவிடுவோம். அதிமுக உடன் கூட்டணி வைத்தால் விஜயகாந்த் போல வெற்றி பெற்றுவிடலாம் என நினைக்கிறார். விஜய் தனியாக நின்றால், பலரது வெற்றி தோல்விகளை மாற்றிவிடுவார். ஆனால் அவரால் வெற்றி பெற முடியாது. அதே வேளையில் அதிமுக – தவெக கூட்டணி வந்தால், ஆட்சி மாற்றம் உறுதியாக ஏற்படும். ஆனால் அதிமுக – பாஜக கூட்டணி என்றால் திமுகவுக்கு சாதகம் தான்.

விஜய்க்கு அரசியலில் செயல்படும் திறன் இருக்கிறது...... பார்வதி நாயர் பேச்சு!

அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களின் பேச்சு என்பது அதிமுகவை பலவீனமடைய செய்கிறது. அவர்களின் நோக்கம் தெளிவாக தெரிகிறது. அதிமுக தான் அவர்களின் இலக்கு. திமுக அல்ல. கூட்டணி அறிவிப்பின்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டணி என்று சொன்ன அமித்ஷா, தினமலர் பேட்டியில், அதிமுகவில் இருந்து ஒருவர் முதலமைச்சர் என்கிறார். அப்போது அவர் எடப்பாடியின் தலைமைக்கு சவால் விடுக்கிறார். அண்ணாமலை தற்போது ஆக்ரோஷமாக பேச தொடங்கவிட்டார். அதிமுக – பாஜக கூட்டணி தொடர்ந்து, அதற்கு அண்ணாமலை பிரச்சாரம் செய்தார் என்றால் திமுக கூட்டணியின் வெற்றி உறுதியாகிவிட்டது. ஸ்டாலினே, மற்ற கூட்டணி கட்சித் தலைவர்களோ பெரிதாக மெனக்கெட தேவையில்லை. திமுக கூட்டணியின் வெற்றியை அண்ணாமலை உறுதிபடுத்துவார். அந்த வேலையை அவர் அமோகமாக செய்துகொண்டிருக்கிறார்.

கம்யூனிஸ்ட்டுகளுக்கும், விசிகவுக்கும் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அழைப்பு என்பது பாஜகவுக்கு விடுக்கப்பட்டிருக்கும் சிறிய அளவிலான எச்சரிக்கையாகும். அமித்ஷாவிடம் இருந்து மீண்டும் ஒருமுறை கூட்டணி ஆட்சி என்கிற வார்த்தை வந்தால், அதன் பிறகு அதிமுக கூட்டணி தொடருவது பிரச்சினையாகும். அதை உணர்ந்துதான் எடப்பாடி பழனிசாமி இந்த அழைப்பை விடுத்துள்ளார். அதேவேளையில் திமுக கூட்டணியில் மதிமுகவை தவிர்த்து, அனைத்துக் கட்சிகளும் தொடரும்.

அண்ணாமலை கூட்டணி உடைகிறது! விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க - அ.ம.மு.க. தனித்து போட்டி

அதிமுக உடன் விஜய் கூட்டணிக்கு செல்வதற்கு பிரகாசமான வாய்ப்புகள் இருக்கின்றது. நான் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று சொல்கிற விஜய், தனியாக போட்டியிட்டால் தன்னால் வெற்றி பெற முடியாது என்பதை தெளிவாக தெரிந்து வைத்துள்ளார். அப்படி தனித்து போட்டியிட்டால் அவரே வெற்றி பெற முடியாது. அவர் ஒருவர் வெற்றி பெற்று எந்த பயனும் கிடையாது. ஒருவேளை 4 முனை போட்டியில் திமுக வெற்றி பெற்றால், அடுத்த 5 ஆண்டுகள் விஜய் திமுகவை எதிர்க்க வேண்டும். அதன் பாதிப்புகள் என்ன என்று அவருக்கு தெரியும். அவர் அதிமுக கூட்டணியை விரும்புகிறார். ஆனால் பாஜக இருக்கும் வரை அவர் போக முடியாது. பாஜக ஒரு கட்டத்திற்கு மேல் எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம் கொடுத்தால், அவர் கூட்டணியில் இருந்து வெளியேறிவிடுவார். அப்படி செல்வதில் உள்ள சிக்கல் என்ன என்றால் அதை அமித்ஷா வேடிக்கை பார்ப்பாரா? அல்லது அதிமுகவை பிளப்பாரா? வேலுமணி, மோகன் பகவத்துடன் இருக்கிறார்.

2026 தேர்தல்! ஆட்சி அமைக்கப் போவது யார்?

அதிமுக – பாஜக கூட்டணி ஜெல் ஆகவில்லை என்பதை தாண்டி தற்போது மோசமான நிலையில் உள்ளது. இவர்கள் அமைதியாக இருந்தால் 4 மாதங்களில் அரசுக்கு எதிரான அலை அதிகமாகி இருக்கும். கூட்டணி ஜெல் ஆகி இருக்கும். எடப்பாடியின் தலைமையை ஒவ்வொரு நாளும் பாஜகவினர் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். உள்ளுக்குள் இருந்துகொண்டே அதிமுகவை அழிக்கிறார்கள்.  2026 சட்டமன்றத் தேர்தலில் 4 முனை போட்டியோ அல்லது மூன்று முனை போட்டியோ நிலவினால் திமுகவுக்கு தான் சாதமாக உள்ளன. அதிமுக – தவெக கூட்டணிக்கு வாய்ப்புகள் இருக்கலாம். ஆனால் திமுகவின் கைகள் தான் ஓங்கியுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் கொள்கை கூட்டணியாக உள்ளனர். கூட்டணியில் இருந்து மதிமுக வெளியே போனால் திமுகவுக்கு எந்தவித இழப்பும் கிடையாது. தமிழக வரலாற்றிலேயே மு.க.ஸ்டாலின் தான் அதிர்ஷ்டமான முதலமைச்சர். அந்த அதிர்ஷ்டம் அவருக்கு 2026லும் தொடர்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ