spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைதமிழகம் வரும் மோடி! ஓபிஎஸ் அப்பாயின்ட்மென்ட் ஏன் தெரியுமா? ரவீந்திரன் துரைசாமி நேர்காணல்!

தமிழகம் வரும் மோடி! ஓபிஎஸ் அப்பாயின்ட்மென்ட் ஏன் தெரியுமா? ரவீந்திரன் துரைசாமி நேர்காணல்!

-

- Advertisement -

முந்தை காலங்களில் தொகுதி பங்கீடு தொடர்பான பிரச்சினை காரணமாகவே அதிமுக – பாஜக கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. இம்முறை அதில் பிரச்சினை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் பாஜக தீவிரமாக உள்ளதாக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.

we-r-hiring

பிரதமர் மோடி இன்று தமிழகம் வரும் நிலையில், அதிமுக – பாஜக கூட்டணியில் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:-  பிரதமர் மோடி தமிழக வருகை ஒரு வழக்கமான வருகையாகவே நான் பார்க்கிறேன். 2021ல் மோடிஜியின் அரசியலில் சசிகலா வர முடியாது என்று நாங்கள் சொன்னோம். அதேபோல், இதுவரை அவர் வரவில்லை. அண்ணாமலை, டிடிவி தினகரனிடம் பேச்சுவார்த்தை நடத்தி பாஜக அணியில் சேர்த்தார். அதற்கு காரணம் எடப்பாடிக்கு எதிராக தினகரன் இல்லாமல் ஒரு அணியை அமைக்க முடியாது என்பதால்தான். காங்கிரசின் பிடிக்குள் திமுக போய்விடக் கூடாது என்பதுதான் தமிழ்நாட்டில் மோடியின் முதல் இலக்காகும்.

அதன் அடிப்படையில் தான் இந்தியா- பாகிஸ்தான் போர் தொடர்பாக வெளி நாடுகளுக்கு விளக்கம் அளிக்க சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில், ஸ்டாலின் பிரதிநிதியான கனிமொழியை தான் அனுப்பினார். ஒரு குழுவுக்கு தலைமை ஏற்று கனிமொழியை அனுப்பினார். ஆனால் அதிமுக எம்.பி. தம்பிதுரையை குழுவில் ஒரு உறுப்பினராக அனுப்பி வைத்தார். மத்திய அமைச்சரவையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ராஜ்நாத் சிங்கை, அனுப்பி கலைஞர் நினைவு நாணயத்தை வெளியிட்டார். கலைஞர் நினைவிடத்திற்கும் ராஜ்நாத் சிங் சென்றார். திமுக உடன் சேர்ந்து காங்கிரஸ் 9 எம்.பி-க்கள் வந்துவிட்டது என்பது மோடிக்கும், எங்களுக்கும் கவலையாகும். ஆனால் சிறுபான்மையினர் வாக்குகளுக்காக ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

ஸ்டாலின் பாஜக கூட்டணிக்குள் வரவில்லை என்பதால் அடுத்தபடியாக எடப்பாடி பழனிசாமி முக்கியமானவர். 20 சதவீத வாக்குகளை வைத்துள்ளார். அவரிடம் சீட் ஒதுக்கீட்டை சரியாக வாங்கிவிட வேண்டும். அதற்கு மோடி ஆதரவாளர்கள் சீமானை ஒரு ஆப்ஷனாக பயன்படுத்தினார்கள். எடப்பாடி தான் இலக்கு. ஆனால் 8 சதவீதம் வாக்குகள் வைத்திருந்த சீமானை ஒரு வாய்ப்பாக ஆடிட்டர் குருமூர்த்தி பயன்படுத்தினார். பெரியார் குறித்து சீமான் அவதூறு கருத்துக்களை தெரிவித்த பின்னர் துக்ளக் இதழில் சீமான் குறித்து செய்திகளை வெளியிட்டு வந்தார். அவரை என்டிஏவின் ஒரு முதலமைச்சர் வேட்பாளராக ஆடிட்டர் குருமூர்த்தி பயன்படுத்தினார். அதேபோல் அண்ணாமலையும், சீமானை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தினார். அதற்கு காரணம் இடங்கள் ஒதுக்குவதில் எடப்பாடி பழனிசாமியிடம் ஏமாந்துவிடக் கூடாது என்பதுதான்.

தொகுதிகளை ஒதுக்கும் விவகாரத்தில் தான் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி முறிந்தது. மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்த எடப்பாடி பழனிசாமி, இடங்கள் ஒதுக்கும் விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் விலகினார். தற்போதும் அதிமுக – பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடுதான் பிரச்சினையாக உள்ளது. அந்த தொகுதி பங்கீடுதான் கூட்டணி ஆட்சி வேண்டுமா? வேண்டாமா? என்று சொல்கிறது. வெற்றி பெற்றால்தானே கூட்டணி ஆட்சி?. தமிழ்நாடு அரசியல் சூழல் மோடிக்கு தெரியாதா? இம்முறை 10 சதவீத வாக்குகள் குறையாத அளவுக்கு இடங்கள் வாங்கினால்தான், 2029ல் எடப்பாடி குறைக்காமல் இருப்பார். அண்ணாமலை எடுத்த 11.4 சதவீத வாக்குகளுக்கான இடங்களை வாங்குவதுதான் பாஜகவின் நோக்கமாகும்

.

தமிழ்நாடு தேர்தல் விவகாரங்களை அமித்ஷா கவனித்தாலும், பிரதமர் மோடி அதில் தலையிடுவார். ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுகவில் சசிகலாதான் வருவார் என்று எல்லோரும் சொன்னார்கள். ஆனால், நான் அது நடக்காது என்று சொன்னேன். தற்போதும் நாம் சொன்னது நடந்தது என்பதால்தான் எடப்பாடி பழனிசாமி நம்மை கண்டு பதறுகிறார். மிதுன் பழனிசாமி பதறுகிறார். எடப்பாடி பழனிசாமி, மோடியை ஏமாற்றிவிட்டு சென்றிடக்கூடாது என்று நாமும் பதற்றப்படுகிறோம். எடப்பாடி பழனிசாமிக்கோ, சீமானை முதலமைச்சர் வேட்பாளர் என்று சொல்லிவிடுவார்கள் என்கிற பயம் இருக்கிறது. அதனால் தான் பாஜகவையும், எங்களையும் பிரிக்க சதி செய்கிறார்கள் என்று சொல்கிறார். உண்மையில் அதிமுக – பாஜக கூட்டணியை பிரிக்கும் நோக்கம் எங்களுக்கு கிடையாது. அன்றைக்கே பாஜகவுக்கு உரிய இடங்களை கொடுத்திருந்தால் அண்ணாமலை தெளிவாக இருந்திருப்பார்.

ஒரு தொண்டனாக பாஜகவிற்கு உழைக்க தயாா்: அண்ணாமலை அறிவிப்பு!

இன்றைக்கு அண்ணாமலையை பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டீர்கள். ஆனால் அவர் இன்றைக்கு ஒரு ஃபோர்ஸ். எடப்பாடி பழனிசாமியின் கணிப்பின் படி அண்ணாமலைக்கு 2024 குறைந்தபட்சம் 5 சதவீத வாக்குகள் உள்ளன. அப்போது பாஜக சீமானுடன் கூட்டணி வைத்தால் பல இடங்களில் அதிமுக 3வது இடத்திற்கு போய்விடும். அந்த அச்சம் காரணமாக தான் பாஜக உடன் கூட்டணி வைத்தார். இன்றைக்கு பாஜகவின் பேர வலிமையை அதிகரித்து இருக்கிறோம். எடப்பாடி பழனிசாமி, அதிமுகவையும், பாஜகவையும் பிரிக்க முயற்சிக்கிறார்கள் என்று சொல்கிறார். இந்த பயம் தான் எங்களுக்கு கிடைத்த வெற்றியாகும். தற்போது நாங்கள் எதிர்பார்ப்பது பலத்திற்கு ஏற்ப பாஜகவுக்கு இடம் தர வேண்டும் என்பதுதான். ஓபிஎஸ் விவகாரத்தில் அவர் மீது எல்லோருக்கும் சிம்பதி வருகிறது. அதிமுகவில் இரட்டை தலைமையாக பெரிய இடத்தில் இருந்தார். மோடியின் வேண்டுகோளை ஏற்றுதான் ஓபிஎஸ் துணை முதலமைச்சர் ஆகினார். காலசூழ்நிலை காரணமாக அவருக்கான செல்வாக்கு வளையம் ஒரு சதவீதம்  என்கிறபோது, அவருக்கு பின்னடைவு இருக்கத்தான் செய்கிறது. இதற்கும் பல நுணுக்கமான காரணங்கள் உண்டு.

அரசியலில் பலம் என்பது முக்கியமாகும். அந்த பலம் ஸ்டாலினிடம் இருக்கிறது. அவர் கொடுத்தது எல்லாம் எம்.பி. போஸ்ட் என்று காங்கிரஸ் அனுபவிக்கிறார்கள். அடுத்தபடியாக 20 சதவீத வாக்குகள் எடப்பாடி பழனிசாமியிடம் உள்ளது. அவர் ஏமாற்றிவிடக் கூடாது என்பதற்காக சீமானை காண்பித்து மிரட்டுகிறோம். சசிகலா விவகாரத்தில் நாம் வெற்றி பெற்றதால், இந்த விஷயத்திலும் வெற்றி பெற்று விடுவோம் என்று எடப்பாடியும், மிதுன் பழனிசாமியும் பதறுகிறார்கள். தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருக்கின்றன. அதற்கு பிறகுதான் தன்னுடைய முடிவை அறிவிப்பேன் என்று சொல்லிவிட்டார். அதேபோல், சீமானும் 8 மாதங்களுக்கு பிறகு தன்னுடைய முடிவை அறிவிப்பாக எடப்பாடிக்கு செக் வைத்துவிட்டார். எடப்பாடி பழனிசாமி, பாஜகவை சரியாக கையாளவில்லை என்றால், பாஜக சீமானை வைத்து மாற்று ஏற்பாடை செய்துவிடும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ