spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைராகுல்காந்தி கைது! வெடித்த டெல்லி போராட்டம்! தேர்தல் ஆணையம் அடவாடி! பத்திரிகையாளர் மணி பேட்டி!

ராகுல்காந்தி கைது! வெடித்த டெல்லி போராட்டம்! தேர்தல் ஆணையம் அடவாடி! பத்திரிகையாளர் மணி பேட்டி!

-

- Advertisement -

2024 மக்களவைத் தேர்தல் மோசடியை விட எஸ்.ஐ.ஆர். விவகாரம் மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். இந்தியா கூட்டணி கட்சிகள் எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் கவனம் செலுத்தி, எதிர்வரும் 5 மாநில சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.

we-r-hiring

டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சிகள் நடத்திய பேரணி குறித்தும், எஸ்.ஐ.ஆர். மற்றும் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் மணி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையத்தை நோக்கி இந்தியா கூட்டணி கட்சிகள் பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், தேர்தல் ஆணையம் துணையோடு பாஜக வாக்குகளை திருடியது உள்ளிட்டவற்றுக்கு கண்டனம் தெரிவித்து, அவர்கள் இதனை மேற்கொண்டுள்ளனர். ஜனநாயகத்தை காப்பாற்ற எதிர்க்கட்சிகளுக்கு வேறு வழியில்லை. கர்நாடகா மத்திய மக்களவை தொகுதியில் நடைபெற்ற தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக ராகுல்காந்தி செய்தியாளர்களிடம் பேசியபோது, இந்த விவகாரத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்கிற கேள்வி எழுந்தது?

இன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியா கூட்டணியும் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக போராட தொடங்கியுள்ளது. இது மிகவும் முக்கியமான முன்னேற்றமாகும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட 300 எம்.பி.க்களுக்கு பேரணி செல்ல கூட உரிமை இல்லை என்றால் நாடு முழு அளவில் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்வதாக தோன்றுகிறது. தேர்தல் ஆணையம் தற்போதாவது இறங்கி வந்து நிலைமையை தெளிவுபடுத்த வேண்டும். எஸ்.ஐ.ஆரில் 3 லட்சம் பேரின் வீட்டு முகவரி பூஜியம் என்று இருப்பதாக சொல்கிறார்கள். இப்படிபட்ட மோசமான தேர்தல் ஆணையம் நாட்டின் வரலாற்றில் இருந்ததே கிடையாது.

வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை கேட்கிறார்கள். அதில் ஆதார், ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டையை ஏற்க மறுக்கிறார்கள். அதேவேளையில் வீட்டின் முகவரியை பூஜியம் என்று சொல்பவர்களை வாக்காளராக சேர்க்கிறீர்கள். எஸ்.ஐ.ஆரில், முஸ்லீம்கள், தலித்துகள், ஏழைகளின் வாக்குகள் நீக்கப்படுவதை காட்டிலும், பாஜகவுக்கு வாக்களிப்பவர்களாக கருதப்படுபவர்கள் போலி வாக்காளர்களாக சேர்க்கப்படுகின்றனர். இதை தொடர இந்திய ஜனநாயகம் அனுமதிக்கக்கூடாது. பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ள வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், நீக்கப்பட்டவர்களின் பட்டியலையும், அவர்கள் எதற்காக நீக்கப்பட்டனர் என்கிற காரணத்தையும் சொல்ல சொல்கிறார். ஆனால் தேர்தல் ஆணையம் அதனை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்கிறது.

வாக்காளர்களின் குடியுரிமையை தீர்மானிக்கின்ற அமைப்பு தேர்தல் ஆணையம் கிடையாது. அதையும் மீறி தேர்தல் ஆணையம் செய்து கொண்டிருக்கிறது. 3 லட்சம் பேரின் வீட்டு எண் 0 என்றால், அவர்களை எப்படி வாக்காளர் பட்டியலில் சேர்க்கிறார்கள்? தேர்தல் ஆணையம், பாஜகவின் கூலிப்படையாக மாறிவிட்டது. ஒரு அரசமைப்பு நிறுவனத்தை மோடி அரசு எப்படி கட்டுப்படுத்தும் என்பதுபோன்ற அயோக்கியத்தனமான கேள்விகளுக்கு நாம் இடம் தரக்கூடாது.

தேர்தல் களம் சூடுபிடிக்கிறது... முதற்கட்ட பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்!

இன்றைக்கு மோடி அரசு நினைத்தால் தேர்தல் ஆணையத்தை தங்கள் வழிக்கு கொண்டு வர முடியும். இது ஒரு வெட்கம் இல்லாத தேர்தல் ஆணையமாகும். வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது சந்தேகம் இருந்தாலும், அதை யாராலும் நிரூபிக்க முடியவில்லை. ஆனால் வாக்காளர் பட்டியலில் நடைபெற்றுள்ள மோசடி வெளிப்படையாக தெரிகிறது. அதில் ஏதோ மிகப்பெரிய அளவில் தவறாக உள்ளது என்பது தெரிகிறது. ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுகள் மற்றும் எஸ்.ஐ.ஆரில் உள்ள சிக்கல்களை பார்க்கும்போது நிச்சயமாக ஏதோ ஒன்று மிகவும் தவறாக உள்ளது. பாஜகவை தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த நடவடிக்கையை ஆதரிக்கும்போது, இது வெற்று அரசியல் குற்றச்சாட்டாக இருக்க முடியாது. ஆனால் எதிர்க்கட்சிகள் 2024 மக்களவை தேர்தல் முழுமையாக மோசடி நடைபெற்றுள்ளதாக கூறுவதை ஏற்க முடியவில்லை.

அப்படி செய்தன் வாயிலாக எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் இருந்து மோடி அரசை, எதிக்கட்சிகள் காப்பாற்றுகின்றன. அப்படி செய்வதால் எஸ்.ஐ.ஆர் விவகாரத்தை தவறவிட்டு விடுவார்கள். பீகாரில் தவறு நடைபெறுவது என்பது உண்மை. அதை நாடு முழுவதும் அமல்படுத்தப் பார்க்கிறார்கள். இந்த சூழலில் 2024 மக்களவை தேர்தல் மோசடி விவகாரத்தை கையில் எடுப்பது சரியாக இருக்காது. எதிர்க்கட்சிகள் அதை விடுத்து எஸ்.ஐ.ஆர். மற்றும் அடுத்து வருகிற 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் கவனம் செலுத்திட வேண்டும். அதுதான் ஒரே வழி. எல்லாவற்றையும் போட்டு கிளப்பினால், பாஜக தப்பிவிடும்.

எஸ்.ஐ.ஆர் நடைமுறையை நாடு முழுவதும் அமல்படுத்தப்போவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. தமிழ்நாட்டிற்கு தற்போது மகாதேவ்புரா தேர்தலோ, 2024 மக்களவை தேர்தலோ முக்கியமில்லை.  எஸ்.ஐ.ஆர். தமிழ்நாட்டிற்கு வரும்போது என்ன செய்ய வேண்டியது என்பதுதான் முக்கியமான பிரச்சினையாகும். ஏற்கனவே திமுக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்தில், ஆதார் மற்றும் குடும்ப அட்டையை குடியுரிமைக்கான ஆதாரமாக ஏற்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதற்கு தேர்தல் ஆணையம் பதில் அளிக்க மறுத்துவிட்டது. அடுத்து தமிழ்நாடு, மேற்குவங்க மாநிலங்கள் என்ன செய்யப் போகிறது? வங்கதேசத்தில் இருந்து வந்தவர்கள் கோடிக்கணக்கில் மேற்குவங்கத்தில் உள்ளனர். தற்போது மேற்குவங்கம் மற்றும் அசாம் மாநிலங்களுக்கு எஸ்.ஐ.ஆர் அடிப்படையில் வாக்காளர் திருத்தம் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்திட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டிற்கு அவர்கள் அனுப்பாமல் உள்ளனர்.

எஸ்.ஐ.ஆர். தமிழ்நாட்டிற்கு வரும்போது திமுகவுக்கு கூடுதல் பிரச்சினை என்பது வெளிமாநில தொழிலாளர்கள்தான். அவர்களை தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சேர்த்தால், அதை சட்டரீதியாக திமுகவால் தடுக்க முடியாது. தமிழ்நாடு, மேற்குவங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் ஒரே நேரத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் எஸ்.ஐ.ஆர் கண்டிப்பாக வரும். தேர்தல் ஆணையம் தவறான நோக்கத்தோடு தான் செயல்படுகிறது. மோடி அரசின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் மாறிவிட்டது. இந்திய தேர்தல் ஆணையமாக இருந்ததை, மத்திய அரசின் தேர்தல் ஆணையமாக மோடி மாற்றிவிட்டார். இது மிகவும் ஆபத்தான விஷயமாகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ