spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைசெவுளில் வைத்த சுப்ரீம் கோர்ட்! மண்டியிட்ட தேர்தல் ஆணையம்! ராகுலுக்கு கிடைத்த முதல் வெற்றி!

செவுளில் வைத்த சுப்ரீம் கோர்ட்! மண்டியிட்ட தேர்தல் ஆணையம்! ராகுலுக்கு கிடைத்த முதல் வெற்றி!

-

- Advertisement -

பீகாரில் எஸ்.ஐ.ஆர் முறையில் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களை 4 நாட்களில் வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதாகவும், ஆதாரை ஒரு ஆவணமாக ஏற்றுக்கொள்ள அறிவுறுத்தி உள்ளதாகவும் ஊடகவியலாளர் ஹசீப் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் நடவடிக்கையில் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள புதிய உத்தரவு தொடர்பாக ஊடகவியலாளர் ஹசீப் முகமது பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- பீகாரில் SIR மூலம் நீக்கப்பட்ட சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் பட்டியலை கொடுக்குமாறு எதிர்க்கட்சிகள் கேட்டன. தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. 8 கோடி வாக்காளர்களில் இறந்தவர்கள், போலியானவர்களை கண்டறிந்து நீக்க வேண்டும் என்பதற்கு எளிமையான வழிகள் உள்ளது. ஆனால் 8 கோடி பேரையும் இந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் என்பதற்கு சான்று கொடுங்கள் என்று சொல்கிறார். அப்படி நிரூபிக்க கொடுக்கப்பட்ட கால அவகாசம் ஒரு மாதத்திற்கும் குறைவு ஆகும். இந்த வ கால அவகாசத்திற்குள் வாக்காளர் என்பதை நிரூபிப்பதற்கான விண்ணப்பத்தை தேர்தல் ஆணையத்தில் எல்லோராலும் பதிவு செய்ய முடியாது. தினசரி கூலி வேலை செய்கிற மக்களால், பூத் அதிகாரிகளை சந்தித்து விண்ணப்பிக்க முடியாது.

அடுத்தபடியாக வாக்காளர் என்பதை நிரூபிக்க ஆதார், ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் 11 ஆவணங்களை அறிவித்துள்ளனர். இதில் ஏதாவது ஒன்றை தர வேண்டும் என கூறியது. ஆனால் 8 கோடி பேரில் பலரால் அவர்கள் சொல்லும் ஆவணங்களை தர முடியாது என்பதுதான் உண்மையாகும். இப்படி சொல்வதன் மூலம் கணிசமான வாக்காளர்களை நீக்கம் செய்வதற்கான வேலைகளை செய்கிறீர்கள் என்று தேர்தல் ஆணையத்திற்கு எதிராக மிகக்கடுமையாக போராட்டங்கள் நடைபெற்றன. அது தொடர்பான வழக்குதான் உச்சநீதிமன்றத்திற்கு சென்றது. தொடக்கத்திலேயே நீதிமன்றம் இடைக்கால தடை வழங்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் உச்சநீதிமன்றம் SIR நடவடிக்கைகளை தொடர அனுமதித்தது.

இந்த சூழலில் தான் ராகுல்காந்தி, தேர்தல் ஆணையம் செய்த முறைகேடுகளை வெளியிட்டார். வாக்காளர் பட்டியலில் இவ்வளவு மோசடிகள் உள்ளபோது SIR மூலம் என்னவென்ன எல்லாம் செய்யப் போகிறார்கள் என்கிற சந்தேகம் ஏற்பட்டது. வழக்கும் தொடர்ந்து கொண்டிருந்தது. மற்றொருபுறம் SIR நடவடிக்கைகளும் தொடர்ந்தன. அதேபோல், SIR வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதில் எவ்வளவு பேர் நீக்கப்பட்டார்கள் என்கிற எந்த விவரமும் வழங்கப்படவில்லை. விண்ணப்பித்தவர்களில் பலருக்கு தங்களுடைய விண்ணப்பம் ஏற்கப்பட்டதா என்பது கூட தெரியாது.

காரணமாக பட்டியல் சமூகத்தை சேர்ந்த ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்கள்தான், இணையதளத்தை அணுகுகிறார்கள் என்கிற விவரம் வெளியாகியுள்ளது. விடுபட்ட 65 லட்சம் பேரின் விவரங்களை வெளியிடுவதில் தேர்தல் ஆணையத்திற்கு என்ன பிரச்சினை என்பதுதான் எதிர்க்கட்சிகளின் கேள்வியாகும். நீக்கப்பட்ட 65 லட்சம் பேரில் 22 லட்சம் பேர் இறந்துவிட்டதாகவும், சிலர் வெளியூருக்கு சென்றுவிட்டதாகவும் சொன்னார்கள். இந்த காரணங்களுக்காக தான் நீக்கப்பட்டதாக விளக்கம் அளித்தனர். இந்நிலையில், யோகேந்திர யாதவ் இறந்துபோனவர்களில் இருவரை நீதிமன்றத்தில் நேரில் நிறுத்தினார். அப்போது உயிரோடு இருக்கக்கூடியவர்களை, இறந்துவிட்டதாக நீக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் களம் சூடுபிடிக்கிறது... முதற்கட்ட பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்!

இறுதியாக தற்போது நீக்கப்பட்டவர்களின் பட்டியலை வெளியிடுவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் அதை எப்படி தரப் போகிறார்கள் என்பது தான் கேள்வியாகும். ராகுல்காந்தியிடம், மகாதேவபுரா தொகுதி வாக்காளர் விவரங்களை அச்சிட்ட காகிதத்தில் வழங்கியது போன்று, ஸ்கேன் செய்து தேர்தல் ஆணையம் கொடுக்க முயன்றது. ஆனால் கட்சிகள் அதை ஏற்க மறுத்துவிட்டதால், வேறு வழியின்றி டிஜிட்டல் முறையில் வழங்க முன்வந்தது. பெயர், எபிக் நெம்பர், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் ஆகியவற்றை வழங்கிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதை 48 மணி நேரத்தில் வழங்கிவிடுவதாக தேர்தல் ஆணையம் தரப்பில் சொல்லப்பட்ட நிலையில், வரும் செவ்வாய் கிழமைக்குள் தாக்கல் செய்ய நீதிபதிகள் அவகாசம் வழங்கியுள்ளனர்.  வழக்கின் விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளனர்.

இந்நிலையில், 65 லட்சம் பேரில் குறைந்தபட்சம் 20 லட்சம் பேரிடமாவது அனைத்து ஆவணங்களும் இருந்திருக்கும். அவர்கள் மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்தார்கள் என்றால் அவர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க கால அவகாசம் உள்ளதா? என்பது கேள்விக்குறியாகும். வாக்குப்பதிவு தொடங்கும் வரை இந்த நடவடிக்கைகள் தொடரும் என்பதை எதிர்தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இதற்கு முன்பு தேர்தல் ஆணையம் ஆதார் கார்டை அடையாள அட்டையாக ஏற்க மறுத்த நிலையில், தற்போது ஆதாரை ஒரு அடையாளமாக ஏற்றக்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதற்கு முன்பாக தேர்தல் ஆணையம் எதை மூடி மறைக்க வேண்டும் என்று நினைத்ததோ, அதை எல்லாம் உச்சநீதிமன்றம் திறந்துவிட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் 65 லட்சம் பேரை நீக்குவதால் அவர்களுக்கு என்ன லாபம் என்று எல்லோரும் கேட்கலாம்.  அதில் பலர் பாஜக வாக்காளர்களாக இருக்கலாமே என்று கூட தோன்றலாம். அதற்கு தி இந்து நாளிதழில் வெளியான கட்டுரையை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். விடுபட்ட நபர்களில் பெரும்பாலன இஸ்லாமியர்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் பாஜகவுக்கு வாக்களிக்க போவதில்லை. அதேபோல், பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ளதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. இன்றைக்கு பாஜகவை பொருத்தவரை பீகாரில் இஸ்லாமியர்களும், பட்டியல் சமுதாயத்தினரும் தங்களுடைய வாக்காளர் இல்லை என்று பாஜகவே உணர்ந்திருக்கிறது. அதன் அடிப்படையில் பாஜகவின் விருப்பத்திற்காக தேர்தல் ஆணையம் இவர்களை பட்டியலில் இருந்து நீக்குகிறதா? என்கிற கேள்வி எழுகிறது. அதன் அடிப்படையில்தான் இந்த வழக்கும் நடைபெறுகிறது.

தி இந்துவில் வெளியான கட்டுரைக்கு ஆதாரம் சேர்த்திடும் விதமாக யோகேந்திர யாதவ்,  அஜித் அன்ஜும் ஆகியோர் தங்களுடைய யூடியூப் சேனலில் பேசியுள்ளனர். அதில் தர்பங்கா தொகுதியில் நீக்கப்பட்டவர்களின் விவரம் வெளியாகியுள்ளது. பஹதூர்பூர் என்ற இடத்தில் வாக்குச்சாவடி முகவர் பரிந்துரைக்கவில்லை என்று 47ஆயிரம் பேரை குறிப்பிடுகிறார்கள். பிஎல்ஓ பரிந்துரைக்காதவர்களின் பட்டியல் ஒவ்வொரு தொகுதியிலும் 10-12 சதவீதம் பேரை அவர்கள் பரிந்துரைக்கவில்லை. இந்த தொகுதிகளில் 54 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள் உள்ளனர். 65 லட்சம் பேர் நீக்கப்பட இருந்தனர். குறைந்தபட்சம்  அது தடுக்கப்படும். இது பீகாரோடு நிற்கப்போவது இல்லை. இந்த முன்னுதாரணத்தை வைத்து தமிழ்நாடு புரிந்துகொள்ள வேண்டும். கடந்த தேர்தலில் தமிழ்நாட்டில் இதுபோன்ற முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு உள்ளதாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயம் தெரிவித்துள்ளார். அதனால் இதை நாம் கூர்மையாக கவனிக்க வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ