spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா3 மாதத்திற்குள் துணைவேந்தர் நியமனத்தை முடிக்க வேண்டும்…உச்ச நீதிமன்றம் அதிரடி

3 மாதத்திற்குள் துணைவேந்தர் நியமனத்தை முடிக்க வேண்டும்…உச்ச நீதிமன்றம் அதிரடி

-

- Advertisement -

அப்துல் கலாம் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவை உச்ச நீதிமன்றமே அமைத்து 3 மாதத்திற்குள் நியமனங்களை முடிக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.3 மாதத்திற்குள் துணைவேந்தர் நியமனத்தை முடிக்க வேண்டும்…உச்ச நீதிமன்றம் அதிரடிகேரள மாநிலத்தில் உள்ள அப்துல் கலாம் பல்கலைக்கழகத்திற்கு தற்காலிக துணைவேந்தரை நியமித்த கேரள மாநில ஆளுநரின் ஆணையை ரத்து செய்த கேரள மாநில உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஆளுநர் தொடர்ந்த வழக்கும், இதேபோல் முனைவர் சிவப்பிரசாத் என்பவரை தற்காலிக துணைவேந்தராக ஆளுநர் நியமித்த அறிவிப்பாணையை எதிர்த்து கேரள அரசு தொடர்ந்த வழக்கு இன்றும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. முன்னதாக கடந்த 13 ஆம் தேதியை வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் நீதிபதிகள் ஜே.பி பார்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்ற போது கேரள மாநில ஆளுநர் மற்றும் அரசு துணைவேந்தர் பெயர்களை பரிந்துரைக்குமாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் வழக்கில் இன்று விசாரணை நடைபெற்ற போது, கேரளா ஆளுநர் மற்றும் அரசு இடையே நிகழ்ந்த மோதல் காரணமாக துணைவேந்தர்களை நியமிக்க உச்சநீதிமன்றம் தேடுதல் குழுவை அமைப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் 3 மாதத்தில் இதற்கான விண்ணப்பங்களை பெற்று நியமனத்தை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். குறிப்பாக கேரள மாநில அரசு தரப்பில் இருந்து 10 உறுப்பினர்கள் பெயர் கொண்ட பட்டியலும், அதேபோல் ஆளுநர் தரப்பிலிருந்தும் தேடுதல் குழுவில் இடம் பெற வேண்டிய தகுதியான நபர்கள் குறித்த பெயர்கள் உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்டிருந்தது.

we-r-hiring

இந்தப் பட்டியலின் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி சுதான்சு துலியா தலைவராக செயல்படுவார் என்றும் அவர் இரண்டு வாரத்தில் தேடுதல் குழுவில் இடம் பெற வேண்டிய நபர்கள் குறித்த பெயர்களை முடிவு செய்வார் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் தேடுதல் குழுவிற்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்ட பிறகு, விளம்பரங்கள் வெளியிட்டு 4 வாரத்துக்குள் துணைவேந்ததற்கான விண்ணப்பங்கள் பெற வேண்டும். பின்னர் 3 மாதத்திற்குள் நியமனங்களை முடிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வருகின்ற தேர்தலில் வன்னிய சமுதாயம் எடப்பாடிக்கு எதிராக செயல்படும் – விருதாம்பிகை

MUST READ