spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிஆவடியில் பரபரப்பு! வருவாய் துறையினரால் 100 கோடி ரூபாய் நிலம் சீல்!

ஆவடியில் பரபரப்பு! வருவாய் துறையினரால் 100 கோடி ரூபாய் நிலம் சீல்!

-

- Advertisement -

ஆவடியில் காவல்துறை இரண்டு பட்டாலியன் நடத்தி வந்த சைக்கிள் ஸ்டேண்ட் (CYCLE STAND), கேண்டினை வருவாய் துறையினர் சீல் வைக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஆவடியில் பரபரப்பு! வருவாய் துறையினரால் 100 கோடி ரூபாய் நிலம் சீல்! ஆவடி பேருந்து நிலையம் அருகே கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் காவல்துறை 2 பட்டாலியன் சார்பில் பரணி சைக்கிள் ஸ்டேண்ட், பரணி கேண்டின் நடத்தி வந்தனர். வருவாய் துறைக்கு சொந்தமான சுமார் 97 செண்ட் நிலத்தை காவல்துறையினர் கமர்சியலுக்கு (வருவாய் நோக்கத்திற்கு)பயன்படுத்தி வந்ததாக புகார் எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையில் வருவாய் துறையின் சார்பில் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையில் ஆவடி வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் வந்து சீல் வைக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

கடந்த 30 ஆண்டு காலமாக காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்த சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை வருவாய் துறையினர் மீட்டு சீல் வைக்க வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் காவல்துறையினரை சீல் வைக்க விடாமல் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

30,000க்கும் மேற்பட்ட ஐடி ஊழியர்கள் பாதிப்பு… டி.சி.எஸ் நிர்வாகத்தை எதிர்த்து போராட்டம்

we-r-hiring

MUST READ