திருவள்ளூர் அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை வண்டை பிடித்து விழுங்கி மூச்சுக் குழாயில் வண்டு கடித்து குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் கார்த்திக் இவர் திருவள்ளூர் அடுத்த தாமரைப்பாக்கம் சக்தி நகர் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மூன்று வயதில் ருதியாசன் என்ற மகளும் ஒரு வயதில் குகஸ்ரீ என்ற மகளும் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது குழந்தை எதிர்பாராத விதமாக தரையில் இருந்த வண்டை எடுத்து விழுங்கியுள்ளார். பின்னர் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டு இருந்துள்ளது, இதனால் பெற்றோர்கள் தாமரைப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
குழந்தையை மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை வரும் வழியிலே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
தொடக்கத்தில் குழந்தை முறுக்கு சாப்பிட்டதால் தொண்டையில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என பெற்றோர்கள் கருதிய நிலையில் குழந்தை பிரேத பரிசோதனை செய்த போது அவரின் மூச்சுக் குழாயில் வண்டு கடித்திருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
அதனைத் தொடர்ந்து குழந்தை உடல் பிரேத பரிசோதனை முடிந்து பெற்றவர்களிடம் மருத்துவர்கள் ஒப்படைத்தனர், வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தரையில் இருந்த வண்டு எடுத்து விழுங்கி மூச்சுக்குழாயில் வண்டு கடித்து குழந்தை பலியானது தாமரைபாக்கத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தல்,ஐ.ஏ.எஸ்,ஐ.பி.எஸ் தேர்வுகளில் சாதி பெயர் தடை செய்ய வேண்டிய அவசியம்