சென்னையில் மின்வாரியத்தில் வேலை எனக் கூறி ஏமாற்றிய இளைஞர் கடத்தல் செய்யப்பட்டாா். விஏஓ உள்பட நான்கு பெயர் கைது செய்யப்பட்டனா்.தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த விக்னேஷ் என்பவா் அரசு வேலை பெற பல்வேறு வகையில் முயற்சி செய்து கொண்டிருந்தார். இயேசு பாதம் என்பவா் அவரது நண்பா்கள் மூலம் அறிமுகமானாா். நண்பர்கள் மூலம் அறிமுகமான இயேசு பாதத்திடம் அரசு வேலை வாங்கித் தர கோரி ரூபாய் 7 லட்சம் பணத்தை விக்னேஷ் கொடுத்துள்ளார்.
மேலும், ரூபாய் 7 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்ட இயேசு பாதம் அரசு வேலை வாங்கி தராமல் விக்னேஷை ஏமாற்றியுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ் இயேசு பாதத்தை கடத்தியுள்ளாா். இயேசு பாதத்தை கடத்தியதோடு மட்டுமல்லாமல், விக்னேஷ் அவரது மனைவியிடம் ரூபாய் 7 லட்சத்தை திருப்பித் தருமாறு கூறி மிரட்டியுள்ளார். இதனையடுத்து இயேசு பாதம் மனைவி அளித்த புகாரின் பெயரில் கடத்தலில் ஈடுபட்ட திருவண்ணாமலையைச் சோ்ந்த விக்னேஷ், கண்டமங்கலம் வி ஏ ஓ ஜெயவேல் மற்றும் சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் விகாஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
ரூ.20 கோடி செலுத்தினால் தான் விசாரணை – உச்சநீதிமன்றம் அதிரடி
