புழல் சிறையில் கொலை வழக்கில் கைதான விசாரணை கைதி சிறை அறையில் தலையை சுவரில் மோதி, டிப் லைட்டை உடைத்து வயிற்றில் குத்தி தற்கொலை முயற்சி. ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.சென்னை வில்லிவாக்கம் பாரதி தெருவை சேர்ந்தவர் கணேஷ் (27), இவரை கடந்த 10.08.2025 அன்று டிபிசத்திரம் போலீஸார் ரவுடி புல்கான் ராஜ்குமார் கொலை வழக்கில் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். புழல் சிறை இரண்டில் விசாரணை கைதிகள் அறையில் அடைக்கப்பட்ட கைதி கணேஷ் நேற்று மதியம் திடீரென அறையில் உள்ள சுவரில் தலையை மோதியும், அங்கிருந்த டிப் லைட்டை பிடிங்கி உடைத்து வயிற்றில் குத்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உடனே சக கைதிகள் கூச்சலிட்டனா். அடுத்து அங்கு வந்த சிறை காவலர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த விசாரணை கைதி கணேஷை மீட்டு சிகிச்சைக்காக சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் கணேஷ்க்கு சிகிச்சை அளித்து வரும் நிலையில் இந்த சம்பவம் குறித்து சிறை ஜெயிலர் கவி பாரதி புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் புழல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதைவிட கம்பிகளை மாற்றுவது தொடர்பாக மின்சாரத்துறையுடன் ஆலோசனை – மேயர் பிரியா
