spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநிறைவேற்றியதோ 13% வாக்குறுதி… 90% வாக்குறுதி நிறைவேற்றியதாக தம்பட்டம் போடும் திமுக – அன்புமணி விமர்சனம்

நிறைவேற்றியதோ 13% வாக்குறுதி… 90% வாக்குறுதி நிறைவேற்றியதாக தம்பட்டம் போடும் திமுக – அன்புமணி விமர்சனம்

-

- Advertisement -

சென்னை, தியாகராயர் நகரில் திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டு, நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் ‘‘விடியல் எங்கே?’’ என்ற தலைப்பில் பாமக சார்பாக தொகுக்கப்பட்ட ஆவணங்களை பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டார். திமுக ஆட்சிக்கு வந்து 50 மாதங்களில் 13% வாக்குறுதியைத்தான் நிறைவேற்றி உள்ளது.நிறைவேற்றியதோ 13% வாக்குறுதி… 90% வாக்குறுதி நிறைவேற்றியதாக தம்பட்டம் போடும் திமுக – அன்புமணி விமர்சனம்சென்னை, தியாகராயர் நகரில் உள்ள தனியார் விடுதியில் திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டு, நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் ‘‘விடியல் எங்கே?’’ என்ற தலைப்பில் பாமக சார்பாக தொகுக்கப்பட்ட ஆவணங்களை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் வெங்கடேஷ்வரன், மயிலம் சிவக்குமார், சதாசிவம், பாமக வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக சார்பாக திமுகவின் தோல்வியை ஆதாரப்பூர்வமாக ஆதாரமாக ஆவணம் வெளியிட்டுள்ளோம். திமுகவின் பொய் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளோம். திமுகவின் வார்த்தைகள், வாக்குறுதிகளைத்தான் இங்கு ஆவணமாக வெளியிட்டுள்ளோம். இதுபோன்று தமிழ்நாடு இந்தியாவின் வளர்ச்சிக்காக 47 ஆவணங்களை வெளியிட்டுள்ளோம். குறுகிய காலத்தில் இவ்வளவு ஆவணங்களை வெளியிட்ட கட்சி பாமக.

we-r-hiring

கல்வி, சமூகநீதி, நிழல் நிதியறிக்கை என ஏராளமான ஆவணங்களை வெளியிட்டுள்ளோம். மற்ற கட்சிகள் எல்லாம் மேடைகளில் திமுகவின் பொய் வாக்குறுதிகள் குறித்து பேசும்போது நாங்கள் ஆவணமாக வெளியிட்டுள்ளோம். தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் இதனை பார்க்க வேண்டும். தமிழ்நாடு மக்கள் திமுகவுக்கு பெரிய வாய்ப்பை வழங்கி உள்ளனர். கடந்த 3 தேர்தல்களில் திமுகவுக்கு மக்கள் வெற்றியை வழங்கியதற்கு மாற்றாக திமுக பொய் பித்தலாட்டம் நிர்வாக சீர்கேடுகளைத்தான் திமுக வழங்கி உள்ளது.

திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் 66 வாக்குறுதிகள் முழுமையாகவும், 66 வாக்குறுதிகள் அரைகுறையாகவும், 373 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. 98% விழுக்காடு வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக கோயபல்ஸ் போன்று முதலமைச்சர் கூறுகிறார். 89% வாக்குறுதிகளை முதலமைச்சர் நிறைவேற்றவில்லை. 13% வாக்குறுதிகளைத்தான் திமுக நிறைவேற்றி உள்ளது. திமுக அரசு தோல்வியடைந்துவிட்டது. ஆள்வதற்கும், நிர்வாகம் செய்வதற்கும் தகுதியற்றது திமுக.

லோக் ஆயுக்தாவிற்கு தற்போதுதான் ஓய்வுபெற்ற நீதிபதியை தலைவராக போட்டுள்ளனர். கர்நாடகாவில் லோக் ஆயுக்தா வலுவாக உள்ளது. தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா செயல்படுத்தப்படுவதே இல்லை. சேவை உரிமை சட்டம் இருந்தால் உங்களுடன் ஸ்டாலின் போன்றவை தேவையே இல்லை. முதலமைச்சர் 5 முறையாக வெளிநாடு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணங்களில் எவ்வளவு கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் எவ்வளவு முதலீடு பெறப்பட்டுள்ளது வேலைவாய்ப்புகள் எவ்வளவு பெறப்பட்டுள்ளன என்பது குறித்தான விவரங்களையாது தமிழ்நாடு அரசு தெரிவிக்க வேண்டும். உழவர்களுக்கு அளித்த 56 வாக்குறுதிகளில் 8 வாக்குறுதிகள்தான் நிறைவேற்றப்பட்டது.

நொய்யல் ஆறு கூவத்தைவிட மோசமாக உள்ளது. இதுகுறித்து ஒன்றுமே தெரியாமல் பேசுகிறார்கள். திமுகவிற்கு இதுகுறித்து பேசவே தகுதி கிடையாது. மீனவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் ஒரு வாக்குறுதி கூட நிறைவேற்றப்படவில்லை. மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட 33 வாக்குறுதிகளில் 6 தான் நிறைவேற்றப்பட்டது. கல்விக்கடன், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்கிற  வாக்குறுதியை நிறைவேற்றவிடவில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஒரு மருத்துவக் கல்லூரி கூட தொடங்கவில்லை. ஒரு மாவட்டத்தை கூட புதிதாக உருவாக்கபடவில்லை. 1.30 கோடி இளைஞர்கள் வேலை இல்லாமல் உள்ளனர். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யும் நடைமுறையே இல்லை.

பெண்கள் பாதுகாப்பு பெண்கள் முன்னேற்றம் தொடர்பாக அளிக்கப்பட்ட 22 வாக்குறுதிகளில் 14 நிறைவேற்றப்படவில்லை. பெண்களுக்கு 1000 அளித்தால் போதுமா? சமூகநீதிக்கும் திமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அண்ணா, பெரியார், கலைஞர் பெயரை கூட கூறுவதற்கு ஸ்டாலினுக்கு தகுதி இல்லை. சமூகநீதி குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசவே கூடாது. பிற மாநிலங்களில் பழைய ஓய்வூதியம் அளிக்கப்படும் போது தமிழ்நாட்டில் ஏன் அளிக்க முடியவில்லை. மிகப்பெரிய அளவில் மோசடி. ஆசிரியர்கள் அவதிப்பட்டுக் கொண்டு உள்ளனர். ஆசிரியர்கள்தான் திமுகவுக்கு அதிகளவில் வாக்களித்தனர்.நிறைவேற்றியதோ 13% வாக்குறுதி… 90% வாக்குறுதி நிறைவேற்றியதாக தம்பட்டம் போடும் திமுக – அன்புமணி விமர்சனம்வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவே இல்லை. சென்னை மக்கள் ஒரு படகை வாங்கி கொள்ள வேண்டியதுதான். உயிரை தற்காத்துக் கொள்வதோடு வாகனங்களை மேம்பாலங்களில் நிறுத்திக் கொள்ள வேண்டியதுதான். 100 நாட்கள் சட்டப்பேரவை கூட்டம் நடத்தப்படும் எனக் கூறி அதனை நிறைவேற்றவே இல்லை. நிர்வாக ரீதியாக ஒரு மாவட்டத்தை கூட பிரிக்கவில்லை. திருவண்ணாமலை பெரிய மாவட்டமாக உள்ள நிலையில் அதனைப் பிரிக்கலாம். ஆனால் அங்கு உள்ள குறுநில மன்னரான எ.வ.வேலு அதனை செயல்படுத்தவிடமாட்டார். பேனாவுக்கு காட்டும் அக்கறையை மக்களுக்கு காட்டாமாட்டார்கள். பேனாவுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றால் டெல்லிக்கு சென்று அனுமதி பெற்று வந்துவிடுவார்கள்.

திமுக ஆட்சிக்கு வந்து 50 மாதங்களில் 13% வாக்குறுதியைத்தான் நிறைவேற்றி உள்ளது. முதலமைச்சர் இனிமேல் 90% நிறைவேற்றிவிட்டதாக கூறக்கூடாது. தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக இதனை கூறுகிறேன். அதிகாரமில்லை என முதலமைச்சர் பொய் கூறுகிறார். சித்தாரமையாவிடம் சமூகநீதி என்றால் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் தமிழ்நாடு அரசு. முதலமைச்சர் ஏன் அச்சப்படுகிறார்? சமூகநீதியை விட்டுவிட்டு முக்கியமான பிரச்சினையை பற்றி பேசாமல் உங்களுடன் ஸ்டாலின் என படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். அரசுக்கு அழுத்தமளித்து ஏதாவது அறிவித்தால் நல்லதுதான். இதுகுறித்து முதலமைச்சர், துணை முதலமைச்சர் யாருடன் வேண்டுமானலும் விவாதிக்க தயார் எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய பாமக வழக்கறிஞர் பாலு, திமுக கூட்டணிக் கட்சிகள் உள்ளிட்ட தமிழ்நாட்டின் கட்சி அலுவலகங்களுக்கு இந்த ஆவணத்தை அனுப்புகின்றோம். இதனை பொது விவாதமாக முன்னெடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

ஜோதிநகர் ஜாத்திரை…பெற்றோர் கண்டித்தால் கல்லுாரி மாணவி தற்கொலை

MUST READ