spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைடெல்லியில் செங்கோட்டையன்! இபிஎஸ்-ஐ தூக்குறது உறுதி! அமித்ஷாவின் ஆடுபுலி ஆடடம்!

டெல்லியில் செங்கோட்டையன்! இபிஎஸ்-ஐ தூக்குறது உறுதி! அமித்ஷாவின் ஆடுபுலி ஆடடம்!

-

- Advertisement -

ராமேஸ்வரம் வந்த பிரதமர் மோடியை, செங்கோட்டையன் ரகசியமாக சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

we-r-hiring

செங்கோட்டையன் டெல்லி பயணம் மற்றும் அவரது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:- செங்கோட்டையன் ஹரித்துவார் செல்வதாக கூறிவிட்டு டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.  செங்கோட்டையன் ஒரு மூத்த அரசியல்வாதி. எல்லோரும் ஒரு டிராக்கில் சென்றார்கள் என்றால், அவர் ஒரு டிராக்கில் செல்வார். செங்கோட்டையன், பிரதமர் மோடியை சந்தித்தது பத்திரிகையாளர்கள் உள்பட யாருக்கும் தெரியாது. ராமேஸ்வரம் கோயிலில் இந்த சந்திப்பு நடைபெற்றது. செங்கோட்டையன் தொடக்கம் முதலே அமைதியாக தான் இருப்பார். ஆனால் வேறு வடிவங்களில் கணக்குகளை போட்டுக் கொண்டே இருப்பார். செங்கோட்டையனுக்கு கிட்டத்தட்ட 80 வயதாகி விட்டது. அவர் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்கிறபோது, மோடியே ஷாக் ஆகிவிட்டார்.

மதுரை, தூத்துக்குடி, திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்களிலும், ஓட்டல்களிலும் பிரதமரை சந்திக்க மறுத்த செங்கோட்டையன், அவர் ராமேஸ்வரம் கோவில் சென்றதை அறிந்து அங்கு சந்திக்க முடிவு செய்தார். அதன்படி பிரதமர் மோடி வருகைக்கு முன்னதாகவே, ராமேஸ்வரம் கோயிலுக்குள் சென்றவர், பிரதமர் மோடி வந்ததும் அவரை வரவேற்று பேசி முடித்துள்ளார். பிரதமர் மோடி கோயில் பிரகாரத்தை சுற்றி வருகிற போதே பேசி முடித்துவிட்டார்கள். பின்னர் பிரதமர் புறப்பட்டு சென்றதும், பத்திரிகையாளர்களும் புறப்பட்டனர். அதன் பிறகு செங்கோட்டையன் கோயிலில் இருந்து கார் மூலம் புறப்பட்டு சென்றுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி ஒரு அரசியல் ஞானி. அரசியலில் அவருக்கு குரு செங்கோட்டையன். அவர் ஹரித்துவார் போய்விட்டு வந்ததும், எடப்பாடி தெறித்து ஓடுகிறாரா? இல்லையா ? என்று பாருங்கள். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள செங்கோட்டையன் அடுத்து என்ன செய்வார்? என்று எல்லோரும் எதிர்பார்ப்புடன் இருப்பார்கள். அப்போது அவர் டெல்லி செல்கிறார் என்கிறபோது, அவர் யாரை சந்திக்க செல்கிறார்? என்று கேள்வி எழும். ஆனால் செங்கோட்டையன் நேராக டெல்லியில் இறங்கி ஹரித்துவாருக்கு ஒரு காரை பிடிப்பார். நேராக போய் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, அவர் பாட்டிற்கு திரும்ப போகிறார். ஆனால் அவர் ஹரித்துவார் போய்விட்டு திரும்பும் வரை எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு பரபரப்பு அடங்காது. அவர் தமிழகம் திரும்பிய உடன் மீண்டும் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்துவார்.

மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையன் முன்பாக எடப்பாடி பழனிசாமியால் நிற்க முடியாது என்பது அவர் ஹரித்துவாரில் இருந்து திரும்பியதும் என்ன நடக்கிறது என்று பாருங்கள். எடப்பாடி பழனிசாமியை எதிர்ப்பதற்கான திட்டத்தை செங்கோட்டையனுக்கு வழங்கப்போவது பாஜக தான். முதலில் அதிமுக பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து எடப்பாடியை விரட்டி அடிங்கள். மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்லி அனுப்புவார்கள். எடப்பாடி பழனிசாமியின் அரசியல் ஞானத்தைவிட 10 மடங்கு மதிநுட்பம் கொண்டவர் செங்கோட்டையன். அவர், எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்களை பார்த்தவர். ஜெயலலிதாவின் கடும் கோபத்திற்கு ஆளாகி, தப்பி வந்தவர். அவர் அனைத்து அரசியல்களையும் பார்த்தவர். திரும்பி வந்ததும் அவர் என்ன செய்கிறார் என்று மட்டும் பாருங்கள்.

இந்நிலையில், நேற்று கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை அழிக்க வேண்டும் என்று பலர் நினைத்துக் கொண்டிருப்பதாகவும், ஆனால் அது ஒருநாளும் நடக்காது. தொண்டர்கள் படையோடு நாங்கள் அதை தவிடு பொடியாக்குவோம் என்று தெரிவித்துள்ளார். ரூ.250 கொடுத்து கூட்டும் கூட்டத்தை வைத்துக்கொண்டு அவர் எப்படி அவர் தவிடு பொடியாக்குவார். மதுரையில் எடப்பாடி யார் என்றே தெரியாது, பணம் கொடுத்தால் வருகிறோம் என்று மக்கள் தெரிவித்துள்ளனர். மதுரையில் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. கடந்த 2 நாட்களில் கிட்டத்தட்ட மூன்று முறை அவருடைய காரை வழிமறிக்க முயன்றுள்ளனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய வாகனத்தில் கல் மாதிரி உட்கார்ந்து இருக்கிறார். எடப்பாடி பழனிசாமியின் அரசியல் அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டது. அவ்வளவுதான், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ