spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைவிஜய், பாஜக கூட்டணில சேரணும்! அதுதான் இப்ப நடந்துட்டு இருக்கு! உடைத்து பேசிய ஜெகதீஸ்வரன்!

விஜய், பாஜக கூட்டணில சேரணும்! அதுதான் இப்ப நடந்துட்டு இருக்கு! உடைத்து பேசிய ஜெகதீஸ்வரன்!

-

- Advertisement -

எதிர்க்கட்சி தலைவர்கள் பேசுவதை பார்க்கிறபோது சிபிஐ விசாரணையை காட்டி மிரட்டி விஜயை பாஜக – அதிமுக கூட்டணிக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக சந்தேகம் எழுகிறது என்று தவெக முன்னாள் நிர்வாகி  ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

கரூரில் த.வெ.க. கூட்ட நெரிசல் மரணங்கள் தொடர்பாக அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி ஜெகதீஸ்வரன் பிரபல தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பேசியதாவது:-கரூரில் தவெக கூட்டத்திற்கு சரியான இடம் தரவில்லை என்று சொல்கிறார்கள். தர்க்க ரீதியாக பார்த்தோம் என்றால் அதிமுக என்கிற தமிழ்நாட்டை பல்லாண்டு காலம் ஆண்ட கட்சி அந்த இடத்தை கேட்கிறார்கள். அந்த கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அங்குதான் பிரச்சாரம் மேற்கொண்டார்.  ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் எடப்பாடியின் கூட்டத்திற்கு 146 போலீசாரை அனுப்பியதாகவும், ஆனால் விஜய் கூட்டத்திற்கு 500 போலீசாரை அனுப்பியதாகவும் சொல்கிறார். தவெக தரப்பில் 2 இடங்கள் கேட்கப்பட்டிருக்கிறது.

காவல்துறை உழவர் சந்தை பகுதியில் அனுமதி கொடுத்திருந்தால் உயிரிழப்புகள் இன்னும் அதிகமாகி இருக்கும் என்று பொதுமக்களே சொல்கிறார்கள். மற்றொரு இடமான லைட்ஹவுஸ் ரவுண்டானா அருகே அமராவதி பாலம் அமைந்துள்ளது. ஏதேனும் அசம்பாவிதம் ஆகிவிடும் என்பதால் அங்கே அனுமதி தரவில்லை. மின்சாரத்தை துண்டிக்க சொல்லி தங்களிடம் கேட்கப்பட்ட போதும் நாங்கள் கட் செய்யவில்லை. அதேவேளையில், மின்கம்பங்கள் அருகே தொங்கிக் கொண்டிருந்தார்கள் என்றால், அங்கு மின்சாரத்தை துண்டித்துவிட்டு அவர்களையும் கீழே இறக்கி கொண்டிருந்தோம் என்கிறார்கள்.

திகரூர் கூட்டநெரிசல் விவகாரத்தில் காவல்துறையினர் கோட்டைவிட்டார்களா? என்றால் எனக்கு தெரிந்து அப்படி நடைபெறவில்லை. திருச்சியில் ஒரு பெரிய ரோடு ஷோ நடத்தினார்கள். மரக்கடையில் ஒரு பெரிய கூட்டத்தை காண்பித்துவிட்டார்கள். அடுத்தபடியாக திருவாரூர், நாகையில் பெரிய அளவிலான கூட்டத்தை காண்பிக்க முடியவில்லை. அடுத்தபடியாக அவர்கள் கரூர் கூட்டத்தில் நிறைய கூட்டம் வேண்டும் என்று நினைக்கிறார்கள். எனவே தாமதமாக தொடங்கி, தாமதமாக சென்றால் கூட்டம் கூடிக்கொண்டே இருக்கும் என்று நினைத்தனர்.

ஏற்கனவே விஜயை பார்க்க வேண்டும் என்று ஒரு கூட்டம் நிற்கிறது. மற்றொரு கூட்டம் உள்ளே வந்துகொண்டே இருக்கிறது. ஒருவேளை காவல்துறை இதனை கவனித்து விஜயின் கூட்டத்திற்கு அனுமதியை ரத்து செய்திருக்க வேண்டும். அப்படி செய்தாலும் தன்னை பார்த்து முதலமைச்சர் பயந்துவிட்டார் என்று சொல்லுவார்.  30 நிபந்தனைகள் போட்டாலும், ஒன்றைகூட பின்பற்ற மாட்டோம் என்று சொல்கிறார். ஆனால் இல்லாத நிபந்தனைகளை மக்களிடம் வெறியேற்றுகிற விதமாக சொல்கிறார். மாலை 5 மணியில் இருந்து காவல்துறையினர் சீக்கிரம் வர சொன்னார்கள். ஆனால் விஜய் வரவில்லை.

இன்றைக்கு எடப்பாடி, அண்ணாமலை போன்றவர்கள் பேசுவதை பார்க்கும்போது, என்டிஏ கூட்டணிக்கு உள்ளே விஜயை கொண்டுவர முடிவு எடுத்துவிட்டார்கள் என்று தான் தோன்றுகிறது. அண்ணாமலை அதை தொடங்கி வைப்பார். எடப்பாடி அதை தொடருவார். தமிழிசை, நயினார், அன்புமணி என அனைவரும் அதை தொடருவார்கள். விஜயை கையை முறுக்கியோ எப்படியோ என்டிஏ-க்குள்ளே கொண்டு வந்துவிடுவார்கள். விஜய் கூட்டணிக்கு வந்துவிடுவார் என்கிற நம்பிக்கையில் எடப்பாடி மீண்டும் தவறு செய்கிறார். இன்றைக்கு விஜய் பயந்துகொண்டு வீட்டிற்குள் உட்கார்ந்து இருக்கிறார். இது சரியான தருணம். சிபிஐ விசாரணையில் இருந்து தப்பித்துக்கொள்ள வேண்டும் என்றால் என்டிஏ கூட்டணிக்குள்ளே வாங்க. அஜித்குமார் மரண விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு ஏன் போனீர்கள். உங்களுக்கும் பாஜகவுக்கும் மறைமுக கூட்டணியா என விஜய் கேட்டார். அப்படி இருக்கையில் நீங்கள் ஏன் சிபிஐ விசாரணை கோருகிறீர்கள்.

உண்மையிலே தவெக ஒரு அரசியல் கட்சியாக இருந்திருந்தால் விஜயை தவிர்த்த மற்றவர்கள் எல்லாம் போனை அணைத்துவிட்டு ஏன் போய் பதுங்குகிறார்கள். விஜயையோ அல்லது தவெக நிர்வாகிகளையோ அந்த ஊர் மக்கள் அடித்துவிடுவார்களா? உதவி செய்யத்தனே வந்தீர்கள் என்று அந்த மக்கள் வரவேற்க தான்  செய்வார்கள். தவறு செய்துவிட்டதால் தான் அவர்களுக்கு பயம் வருகிறது. ஆனால் இந்த தவறை மறைப்பதற்கான வேலைகள் தொடங்கும்.  நீங்கள் வழக்கு தொடராவிட்டாலும் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கும். நீதிமன்றம் பல கேள்விகளை கேட்க காத்திருக்கிறது. அருணா ஜெகதீசன் ஆணையம் பல உண்மைகளை வெளிக்கொண்டு வரும். அப்போது எல்லோருக்கும் உண்மை என்ன என்பது தெரியும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ