spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்விஜயின் அரசியல் பக்குவம் அவ்வளவுதான் – கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்

விஜயின் அரசியல் பக்குவம் அவ்வளவுதான் – கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்

-

- Advertisement -

கரூர் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்ட கருத்துகளை கடுமையாக விமர்சித்துள்ளார் கே.பாலகிருஷ்ணன்.விஜயின் அரசியல் பக்குவம் அவ்வளவுதான் – கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்

மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பில் பேசியிருப்பதாவது, ”மொத்த சம்பவத்திற்கும் இந்த மரணத்திற்கும் தாங்களே காரணமாகிவிட்டு கொஞ்சம் கூட பொறுப்பேற்காமல் ஏதோ சதி நடந்தது என்று கூறுவது மோசமான அரசியல் நாகரிகமே இல்லாத செயல். மீண்டும் சென்றால் அசம்பாவிதம் நடக்கும் என்றால் இதைவிட என்ன அசம்பாவிதம் நடந்து விடப்போகிறது என கேள்வி எழுப்பினாா்.

we-r-hiring

முதலமைச்சர் உடனடியாக நேரில் சென்றார்,  அமைச்சர்களை அனுப்பி இருக்கின்றார், நிவாரணம் கொடுத்திருக்கிறார் அஞ்சலி செலுத்தி இருக்கின்றார். எல்லா கட்சித் தலைவர்களும் ஆதங்கத்தோடு பணியாற்றிக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு நன்றி சொல்ல மனது இல்லாவிட்டால் கூட முதலமைச்சரின் மீது பழிவாங்குவதாக குற்றம் சாட்டுவது என்ன நியாயம்.

வழக்கே போடக்கூடாது கைது செய்யக் கூடாது என்றால் சம்பவத்தை அப்படியே விட்டு விடலாமா??

நீங்களே நாளைக்கு பொறுப்புக்கு வருவீர்கள் என வைத்துக்கொண்டால் இதுபோன்று நடந்தால் விட்டு விடுவீர்களா ? இறந்தவர்களின் உயிர்களுக்கு யார் பொறுப்பேற்பது?  சட்ட நடவடிக்கை குறை கூறுவது என்ன நாகரீகம், என்ன அரசியல் இது என சாடியுள்ளாா்.

இவ்வளவு நடந்த பிறகும் முதலமைச்சருடன் சண்டை போடுவது போல விஜய் பேசுவது, தமிழ்நாட்டு அரசியலில் விஜய் மட்டுமல்ல,  அதிமுக பாஜகவே இயக்கியிருப்பது அவர்களின் குரலாகவே இவரை பார்க்க முடிகிறது.

இதுபோன்ற அரசியல் அநாகரீகத்தை  மக்கள் ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டார்கள்.  ஒரு துயரமான சம்பவம் நடந்துவிட்டபோது,  சவால் விடும் நேரமா இது?.

முதலமைச்சர் மிகுந்த பண்போடு பேசி இருக்கிறார் முதலமைச்சரின் பண்பு எப்படி இருக்கிறது? அந்த முதலமைச்சரிடம் என்னை வேண்டுமானால் கைது செய்யுங்கள்,  நிர்வாகிகளை கைது செய்யாதீர்கள் என்று சொல்வது, இரங்கல் தெரிவிக்கும் நேரத்தில் அரசுக்கு சவால் விடுவதென்றால் உங்கள் அரசியல் பக்குவம் அவ்வளவுதான் என்றும் விமர்சித்துள்ளாா்.

இது முழுக்க அரசியல் நோக்கத்தோட தயாரிக்கப்பட்ட காணொளி என்றும் சிபிஐ விசாரித்த எல்லா வழக்கிலும் நியாயம் கிடைத்து விட்டதா? என்றும் கேள்வி எழுப்பிய அவர் சிபிஐ விசாரணை வேண்டும் என கேட்பது பாஜகவின் ஆதரவை பெறுவதற்கு முயற்சிதான் என்று பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளாா்.

தனுஷின் ‘இட்லி கடை’ படத்திற்கு வந்த சிக்கல்…. அதிருப்தியில் படக்குழு!

MUST READ