spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைநிர்மல்குமாரை சிதைத்த நோட்டீஸ்! ஆதவ்க்கு 24 மணி நேரம் கெடு! மகிழ்நன் நேர்காணல்!

நிர்மல்குமாரை சிதைத்த நோட்டீஸ்! ஆதவ்க்கு 24 மணி நேரம் கெடு! மகிழ்நன் நேர்காணல்!

-

- Advertisement -

பாஜக கூட்டநெரிசலில் இறந்துபோன கரூர் மக்களுக்காக இந்த விவகாரத்திற்கு வரவில்லை. மாறாக உயிரோடு இருக்கும் விஜய் பிடிக்கவே அவர்கள் வந்துள்ளனர் என்று பத்திரிகையாளர் மகிழ்நன்  தெரிவித்துள்ளார்.

we-r-hiring

கரூர் கூட்டநெரிசல் மரணங்கள் குறித்த விஜயின் வீடியோ பதிவு குறித்து பிரபல பத்திரிகையாளர் மகிழ்நன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- விஜய் தன்னுடைய வீடியோவில் கரூரில் மட்டும் ஏன் மக்கள் மயங்கி விழுந்தார்கள் என்று கேட்பது பொய். விக்கிரவாண்டியில் இருந்தே அது தொடங்கிவிட்டது. கருரில் மட்டும் ஏன் இறப்பு நடக்கிறது என்று கேட்கிறார். அதுவும் பொய். அதற்கு முன்னதாகவே இறப்புகள் நடைபெற்றுள்ளன. எனவே கரூரில் மட்டும் என்று விஜய் சொல்வது பச்சை பொய். ஏன் தன்னுடைய கூட்டத்தில் மட்டும் நடக்கிறது என்றுதான் விஜய் கேட்டிருக்க வேண்டும். இதே கேள்வியை பத்திரிகையாளர்களை சந்தித்து அவர் கேட்டிருந்தார் என்றால்? அவர்களே பதில் சொல்லி இருப்பார்கள். அதனால் தான் விஜய் தனி அறையில் அமர்ந்து வீடியோ பேசியுள்ளார்.

அந்த வீடியோவில் தனக்கு எதிராக சதி நடப்பதாகவும், முதலமைச்சர் பழிவாங்குவதாகவும் விஜய் புகார் தெரிவித்துள்ளார். அப்படி பழி வாங்காமல் இருக்க வேண்டும் என்றால் நியாயமாக 41 பேர் இறந்ததை மறைத்திருக்க வேண்டும். அல்லது விஜயினுடைய கூட்டத்தில் இறப்புகள் நடைபெறாமல், அவருடைய வழக்கறிஞர் சொல்வதை போல இறப்பு எண்ணிகையை குறைத்து அவர்கள் எல்லாம் வேறு எங்கோ இறந்துபோனவர்கள் என்று தமிழ்நாடு முதலமைச்சர் சொல்லி இருக்க வேண்டும். அப்படி சொல்லாததைதான் இவர்கள் துரோகம் என்று சொல்கிறார்களா? என தெரியவில்லை.

எது சதி? விஜய் 12 மணிக்கு கரூருக்கு வருவதாக சொல்லிவிட்டு, 7 மணிக்கு வந்ததுதான் சதி. அப்படி தாமதமாக வந்தது இல்லாமல், அவர் வாகனத்துடன் 5 ஆயிரம் பேரை கூட்டி வந்துள்ளார். காவல்துறையினர் அங்கே செல்ல வேண்டாம் என்று தடுத்தபோதும், விஜய் அங்கே சென்றதால் தான் மக்கள் நெருக்கடிக்கு உள்ளாகினர். குறைந்தபட்சம் விஜய்க்கோ, அவருடைய கட்சியினருக்கோ பொறுப்பு இருந்திருந்தால், தவறு நடந்துவிட்டது. அதற்கு நாங்கள் பொறுப்பேற்றுக் கொண்டு தவறை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கிறோம். இது நாங்கள் திட்டமிட்டு செய்த கொலை அல்ல. கூட்டத்திற்கு வந்த இளைஞர்களை ஒழுங்குபடுத்துவது எங்களுடைய பொறுப்பு. இது யார் செய்த சதியும் அல்ல. நம்மிடம் கட்சி கட்டமைப்பு இல்லை. அதை சரிசெய்வதற்கான வேலையை செய்துவிட்டு வருகிறோம் என்று சொல்லி இருக்க வேண்டும்.

மற்றொருபுறம் இந்த விவகாரத்தில் பாஜக இறங்கியுள்ளதற்கு அவர்களுக்கு பெரிய அளவிலான உள்நோக்கம் உள்ளது. அவர்கள் இறந்துபோன கரூர் மக்களுக்காக வரவில்லை. உயிரோடு இருக்கும் விஜய், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவை பிடிக்க வந்துள்ளனர். தற்போது விஜய்க்கு எதிராக வலுவான கேஸ் கிடைத்துள்ளது. அமித்ஷா, விஜய் என்டிஏ கூட்டணிக்கு வந்துவிட்டால் சிபிஐ வைத்து வழக்கை பார்த்துக் கொள்ளலாம் என்பாராம். எடப்பாடி பழனிசாமிக்கு பலமான கட்சி கட்டமைக்கும் போதோ, பாஜக அவர்களை ஆட்டிப்படைக்கிறது. அப்போது எந்தவித கட்டமைப்பும் இல்லாத தவெக என்னவாகும்? விஜய்க்கு கரிஷ்மா உள்ளபோதே வாக்குகளை அறுவடை செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதை அம்பலப்படுத்துகிற வேலையை கரூர் சம்பவம் செய்துவிட்டது.

கரூர் சம்பவத்தில் தங்களை கைதுசெய்ய வேண்டாம். தங்களின் கௌரவம் போய் விடும். விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவதாக நிர்மல்குமார் போன்றவர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போன்றவர்கள் கைது நடவடிக்கையை தடுக்க முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்ய உள்ளனர். ஆனால் உண்மையில் நடந்தது என்ன என்றால்? புஸ்ஸி ஆனந்த் தனக்கு ஜாமின் கிடைத்தால் போதும் என்று நினைப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

ஆதவ் அர்ஜுனை எப்படியாவது மாட்டிவிட்டு, அவரை சிறைக்கு அனுப்பிட வேண்டும் என்று கட்சிக்குள்ளே வேலைகள் நடைபெறுவதாகவும், அதற்கு பதிலடியாக ஆதவ் அர்ஜுன் தன்னுடைய ஆட்களை வைத்து போட்டு பார்த்துவிடலாம் என்று நினைப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசியலில் இதற்கு முன்பாக எந்த அரசியல் கட்சியும் கைதாவதற்கு பயந்தது கிடையாது. கைது நடவடிக்கையையே அரசியல் செய்வதற்கான ஒரு வாய்ப்பாக பார்ப்பார்கள்.

மக்கள் சாக கிடந்தபோது, ஒருபுறம் விஜய் பாட்டு பாடிக் கொண்டிருந்தார். தனது ரசிகர்களின் துயரம் கூட விஜயின் காதுகளுக்கு விழவில்லை. உண்மையில் மயக்கத்தில் இருந்து கீழே இருந்த மக்கள் அல்ல. விஜய்க்கு வேறு ஒரு மயக்கம் இருந்தது. அந்த மயக்கம் யாரை உருவாக்கும்? விஜயே தன்னை குறித்த ஒரு மயக்கத்தில் தான் இருக்கிறார். தற்போது சி.எம். சார் என்னை பழிவாங்குங்கள் என்று சொல்கிறார். அப்படி விஜய் அரசியலில் என்ன சாதித்து விட்டார்? அவர் தெருவில் இறங்கி போராடவில்லை. ஒரு மேடை போட்டு 4 கூட்டத்தில் பங்கேற்று இருக்கிறீர்கள். உடனே என்னை பழிவாங்குங்கள் என்று சினிமா பாணியில் சொல்வது கொஞ்சம் கூட முதிர்ச்சி அற்ற தன்மையாகும்.

1972ல் கட்சி தொடங்கிய பிறகு எம்ஜிஆர், திமுக ரவுடிகளை வைத்து தன்னை முடக்கப் பார்ப்பதாக சொன்னார். ஆனால் ஜேப்பியார், உடையார், ஆட்டோ சங்கர் வரை எம்ஜிஆரிடம் தான் இருந்தார்கள். ஆனால் திமுக ரவுடிகளை வைத்துக் கொண்டிருப்பதாக சொன்னார்கள். ஜெயலலிதா 2001 தேர்தலில் வெற்றி பெற்றார். அதற்கு முன்பு கலைஞரின் ஆட்சி பெரிய விமர்சனங்கள் இன்றி நல்லாட்சி என்று சொல்லப்பட்டது. ஆனால், ஜெயலலிதா வெற்றி பெற்றதற்கு காரணம் பரிதாப உணர்ச்சியாகும். தன்னுடை மனுக்கள் ரத்து செய்யப்படுகிறது. தங்களை தகுதி நீக்கம் செய்துவிட்டார்கள். இதற்கு கலைஞர்தான் காரணம் என்றார்கள். தற்போது பார்த்தோம் என்றால் இவர்கள் பேசுகிற சதி கோட்பாடும் அப்படியானது தான். ஆட்சிக்கு வர வேண்டும். வெறி ஏற்ற வேண்டும். மக்கள் மத்தியில் பொய் பரப்ப வேண்டும்.

கரூர் கூட்டநெரிசல் மரணம் குறித்த அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணையில் உண்மை வெளிவரும். அதுவரை நாங்கள் அமைதியாக இருப்போம் என்று விஜய் சொல்லவில்லை. குறைந்தபட்சம் விசாரணையை முடுக்கிவிட வேண்டும்.  நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்றாவது விஜய் சொல்லி இருக்க வேண்டும். ஆனால், சிபிஐக்கு போக  வேண்டும் என்று கேட்கிறார். இவர் சிபிஐ விசாரணை கேட்பதும், அண்ணாமலை மைக்கேல்பட்டி விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்டதும் ஒன்றுதான் என்று தோன்றுகிறது. கருர் கூட்டநெரிசல் வழக்கு சிபிஐக்கு சென்றால் விசாரணைக்கு காலம் தாழ்த்திவிட்டு உள்ளுரில் நேரேஷனை கட்டமைக்க தங்களுடைய ஏவல் ஆட்களை வைத்து பாஜகவினர் வேலை பார்ப்பார்கள். அதை செய்வதற்கு விஜய் , பாஜகவிடம் நேரம் கேட்கிறார். அவர்கள் கூட்டணிக்கு வா என்று கேட்போடுவார்கள். இந்த ஆட்டத்தில் விஜய் கேட்டிற்குள் செல்வதை தவிர வேறு வாய்ப்புகள் இல்லை. விஜயகாந்துக்கும் எந்தவித கொள்கையும் கிடையாது. அவரும் பாஜக உடன் கூட்டணி வைத்தார்.

அப்படி விஜய், பாஜக உடன் கூட்டணி வைத்தாலும் மக்கள் அதிர்ச்சி கொள்ளப் போவது இல்லை. விஜய் தன்னோடு பெருங்கூட்டத்தை இழுத்து வருவார் என்று நினைக்கிறார்கள். இந்த இறப்பை எதிர்பார்த்து காத்திருந்தவர்கள் பாஜகவினர். விஜய்கூட்டத்திற்கு வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அரவக்குறிச்சியில் இருந்து வந்தார்கள். அது அண்ணாமலையின் தொகுதியாகும். அண்ணாமலை தன்னுடைய பதவி போனதற்கு பிறகு கருரில் விஜய் நடத்துகிற ஒரு கூட்டத்தை வைத்து உள்ளுரில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தி, அதன் வழியாக தன் மீது ஒளி வெளிச்சம் பாய்ச்சுதற்கு முயற்சி மேற்கொண்டிருப்பாரோ என்கிற ஒரு வழியில் ஏன் யாரும் யோசிப்பது இல்லை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

MUST READ