spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசாதியப் பெயர்கள் நீக்குவது குறித்து சமூக நீதியை அரசு கடைபிடிப்பது பாராட்டத்தக்கது - நீதிபதிகள் கருத்து

சாதியப் பெயர்கள் நீக்குவது குறித்து சமூக நீதியை அரசு கடைபிடிப்பது பாராட்டத்தக்கது – நீதிபதிகள் கருத்து

-

- Advertisement -

சாலைகள் தெருக்களில் சாதியப் பெயர்களை மாற்றுவது குறித்த இறுதி முடிவு எதுவும் எடுக்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு வழங்கியுள்ளது.சாதியப் பெயர்கள் நீக்குவது குறித்து சமூக நீதியை அரசு கடைபிடிப்பது பாராட்டத்தக்கது- நீதிபதிகள் கருத்து.தமிழக முதலமைச்சர் அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலைகளுக்கு வைக்கப்பட்டுள்ள சாதிப் பெயர்களை நீக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, கிராமங்கள், குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலைகளுக்கு உள்ள சாதிப் பெயர்களை நீக்க அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஆதி திராவிடர் காலனி, ஹரிஜன் குடியிருப்பு, வண்ணான்குளம் போன்ற சாதிப்பெயர்களை நீக்குதல், புதிய பெயரிடும் பணிகளை நவம்பர் 19-ம் தேதிக்குள் முடிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மதுரை சேர்ந்த பரமசிவம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளை தாக்கல் செய்த மனுவில் இதில் நடைமுறையில் பல பிரச்சனைகள் உள்ளது. எனவே இந்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் அனிதாசுமந், குமாரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தமிழக அரசின் இந்த திடீர் உத்தரவு குழப்பம் ஏற்படும் ஆதார் அடையாள அட்டை வாகன பதிவு சான்று அடையாள அட்டைகள் பாஸ்போர்ட் பெயர் மாற்றம் செய்வதில் சிக்கல் ஏற்படும் இதை கருத்தில் கொள்ளாமல் தமிழக அரசு இந்த அறிவிப்பு பானை வெளியிட்டுள்ளது. எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார். அப்பொழுது நீதிபதிகள் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் இவ்வாறு செய்தால் மக்கள் எவ்வாறு முகவரி மாற்றம் செய்வார்கள் என கேள்வி எழுப்பினார்கள். அப்பொழுது அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அஜ்மல் கான் ஆஜராகி, மனுதாரர் மனு செய்வதில் உள்நோக்கம் உள்ளது. இந்தியாவில் டெல்லி உத்திர பிரதேஷ் போன்ற மாநிலங்களில் தெருக்கள் பெயர் மாற்றப்பட்டுள்ளது. மாநில தலைநகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது. அப்போதெல்லாம் வராத குழப்பம் இப்பொழுது எப்படி வந்துவிடப் போகிறது. அங்கு போய் மனுதாரர் தடை கோரி மனு தாக்கல் செய்யவில்லை. ஆனால் சாதிய பாகுபாடு இருக்கக் கூடாது என்று தமிழ்நாடு அரசு கொள்கை ரீதியான முடிவெடுத்து அறிவித்து இருப்பதற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.

we-r-hiring

மேலும் இந்த அறிவிப்பாணையின் செயல்படுத்துவது குறித்து செயல்முறைகள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. சாதிகள் பெயர் உள்ள பகுதியில் மக்கள் கருத்து கேட்க வேண்டும். சாதி பெயர் இருக்கும் இடத்தில் எவ்வித பிரச்சனையும் இல்லை என்றால் அதனை நீக்க வேண்டியது இல்லை என்றும் மாவட்ட நிர்வாகம் இதில் எவ்வித இறுதி முடிவும் எடுக்க முடியாது என்று வாதிட்டார். அப்பொழுது நீதிபதிகள் சாதி பெயர்கள் நீக்குவது குறித்து மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது. அதே நேரத்தில் இதற்கான என்ன வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தெளிவுப்படுத்தவில்லை . எனவே இது குறித்து பதில் மனு தாக்கல் செய்யுங்கள். அதுவரை சாதிய பெயர்கள் மாற்றுவது குறித்து மக்கள் கருத்து கேட்பது ஆய்வு நடத்துவது செய்து கொள்ளலாம். இறுதி முடிவு எதுவும் எடுக்க வேண்டாம் என மனு குறித்து தமிழக அரசு தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

மின்னல் தாக்கி 4 பெண்கள் பலி…இழப்பீடு வழங்க கோரி சீமான் கோரிக்கை…

MUST READ