- Advertisement -
போக்குவரத்து விதி மீறிய 11 வாகனங்கள் பறிமுதல்
சென்னையில் விதிகளை மீறி அதிவேகமாக இரு சக்கர வாகனங்களை ஓட்டிச் சென்ற இளைஞர்களின் 11 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னையில் இளைஞர்கள் சிலர் விதிகளை மீறி இருசக்கர வாகன பந்தயத்தில் ஈடுபட போவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் போக்குவரத்து காவலர்கள் வாகன சோதனை நடத்தி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
நள்ளிரவு 1:30 மணி அளவில் அண்ணா சாலையில் இளைஞர்கள் சிலர் அதிக சிசி திறன் கொண்ட இருசக்கர வாகனங்களில் கூட்டாக அதிவேகத்தில் பயணம் செய்தனர்.
சாலையில் அடுத்தடுத்து அதி வேகமாக சென்ற வாகனங்களால் அச்சமடைந்த சிலர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தலைக்கவசம் அணியாமல் விதிகளை மீறி சென்ற புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.