spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைதேமுதிக பொது செயலாளர் பிரேமலதா தாயார் மறைவிற்கு முதல்வர் நேரில் அஞ்சலி….

தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா தாயார் மறைவிற்கு முதல்வர் நேரில் அஞ்சலி….

-

- Advertisement -

தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்.கே.சதீஷின் தாயார் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினாா்.தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா தாயார் மறைவிற்கு முதல்வர் நேரில் அஞ்சலி….தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் எல்கே சுதீஷின் தாயார் அம்சவேணி வயது மூப்பு காரணமாக இன்று காலை காலமானார் அவருக்கு வயது 83. சென்னை ரெட்ஹில்ஸில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். இதனையடுத்து அவரது உடல் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள எல் கே சதீஷ் வீட்டில் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

கட்சியின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டத்திற்கு தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் பொருளாளர் எல்கே சுதீஷ் தர்மபுரி சென்றிருந்த நிலையில், தங்களது தாயின் மரண செய்தியை கேட்டு உடனடியாக சென்னை திரும்பினர். மறைந்த தனது தாயின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்கே சுதீஷ் தேம்பி அழுதனர். தொடர்ந்து திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் பிரேமலதாவின் தாயாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கரூர் சம்பவத்தால் மன கஷ்டத்தில் உள்ளோம் – இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி

we-r-hiring

MUST READ