சாலையில் சென்ற இருசக்கர வாகனம் திருமாவளவனின் கார் மோதியதாக கூறி நடந்த சம்பவத்தால் பரபரப்பு; வாகன ஓட்டி மீது விசிகவினர் தாக்குதல்; போலீசார் விசாரணை. திட்டமிட்டு திருமாவளவன் கார் மீது அடையாளம் தெரியாத நபர் பைக் மோதி தாக்க முயன்றதாக விசிக காவல் நிலையத்தில் புகார்.சென்னை உயர்நீதிமன்ற ஆவின் நுழைவு வாயிலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வழக்கறிஞர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். உச்சநீதிமன்ற நீதிபதி அவமரியாதை செய்யப்பட்டதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு விட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் எம்பியுமான திருமாவளவன் காரில் புறப்பட்ட போது, அங்கு சென்று கொண்டிருந்த பைக் மீது மோதியதாக கூறப்படுகிறது. அப்போது ஏன் பைக் மீது மோதினீர்கள் என வாகன ஓட்டி திருமாவளவன் சென்ற காரை நோக்கி நடந்து சென்றார்.
இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தால் பைக் ஓட்டி வந்தவரை விசிகவினர், வழக்கறிஞர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீசார் அந்த நபரை பார் கவுன்சிலுக்கு அழைத்து சென்றனர். இதனால் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக கூறி விசிக வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின் சாலை மறியலை கைவிட்டனர். மேலும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பைக் ஓட்டி வந்த நபர் ராஜிவ் காந்தி என்பதும் இவரை எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக விசிக வழக்கறிஞர் அணியை சேர்ந்த பார்வேந்தன் எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விசிக தலைவர் திருமாவளவன் காரில் சென்ற போது அடையாளம் தெரியாத நபர் வேண்டுமென்றே திட்டமிட்டு பைக்கை கொண்டு, கார் மீது மோதி திருமாவளவனை தாக்க முயன்றதாகவும், தான் காரில் இருந்து இறங்கி தடுத்து நிறுத்தியதாகவும், இதனால் திட்டமிட்டு தாக்க முற்பட்ட அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்துள்ளார். உள் நோக்கத்துடன் நடந்ததா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
வேகமாக பரவும் டெங்கு!! மூன்று மாவட்டத்திற்கு சிவப்பு நிற எச்சரிக்கை!!