spot_imgspot_img
Homeசெய்திகள்மாவட்டம்தண்டராம்பட்டில் பேருந்து நிலையம் இல்லை…வெயிலிலும்,மழையிலும்  பயணிகள் அவதி

தண்டராம்பட்டில் பேருந்து நிலையம் இல்லை…வெயிலிலும்,மழையிலும்  பயணிகள் அவதி

-

- Advertisement -

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு தாலுகாவில் முறையான பேருந்து நிலையம் இல்லாததால், பொதுமக்கள் மற்றும் பயணிகள் சாலையோரங்களில் ஆபத்தான சூழலில் பேருந்துக்காகக் காத்திருக்க வேண்டிய அவல நிலை நீடிக்கிறது.தண்டராம்பட்டில் பேருந்து நிலையம் இல்லை…வெயிலிலும்,மழையிலும்  பயணிகள் அவதி

​சுமார் 47 ஊராட்சிகளையும், 200-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களையும் தன்னகத்தே கொண்ட தண்டராம்பட்டு தாலுகாவில், அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த தாலுகா தலைநகரிலேயே பேருந்து நிலையம் இல்லாதது அப்பகுதி மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

அத்தியாவசியத் தேவைகளுக்காகவும், பள்ளி, கல்லூரி, வேலை போன்றவற்றிற்காகவும் திருவண்ணாமலை, செங்கம், தானிப்பாடி போன்ற பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய மக்கள், சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள பழைய மற்றும் பாதுகாப்பற்ற நிழற்குடையில் காத்திருக்க வேண்டியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அந்த ராட்சச நிழற்குடையில், பேருந்துக்காகக் காத்திருக்கும் பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் நோயாளிகள் அமர்வதற்கோ, ஓய்வெடுப்பதற்கோ எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால் அனைவரும் வெகு நேரம் நின்றபடியே காத்திருக்க வேண்டியுள்ளது.தண்டராம்பட்டில் பேருந்து நிலையம் இல்லை…வெயிலிலும்,மழையிலும்  பயணிகள் அவதி

போதிய பேருந்து வசதிகள் இல்லாததாலும், பேருந்து நிலையம் இல்லாததாலும், பேருந்துகள் சாலையிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றும்போது, மற்ற வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும், சாலையோரம் காத்திருப்பது பயணிகளுக்கும் விபத்து அபாயத்தை அதிகரிக்கிறது.

​பல பகுதிகளில் அதிநவீன நிழற்கூடங்கள் கட்டப்பட்டு வரும் நிலையில், தாலுகா தலைமை இடமாக உள்ள தண்டராம்பட்டில் ஒரு பேருந்து நிலையம் கூட இல்லாமல் இருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

​தண்டராம்பட்டு தாலுகா மக்களின் அன்றாட சிரமங்களைப் போக்கவும், பயணப் பாதுகாப்பை உறுதி செய்யவும், தமிழக அரசு உடனடியாக தண்டராம்பட்டு பகுதியில் புதிய மற்றும் நவீன பேருந்து நிலையம் ஒன்றை அமைத்துத் தர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் நீண்டகால மற்றும் அவசரக் கோரிக்கையாகும்.

அதிமுகவில் இருந்து நீக்கியது தொடர்பாக வழக்கு தொடர்வேன் – செங்கோட்டையன்..

MUST READ