spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரை“பண வாசம்”- சம்பாத்தியமும் உடைமைகளும் - குரு மித்ரேஷிவா

“பண வாசம்”- சம்பாத்தியமும் உடைமைகளும் – குரு மித்ரேஷிவா

-

- Advertisement -

குரு மித்ரேஷிவா“பண வாசம்”- சம்பாத்தியமும் உடைமைகளும் - குரு மித்ரேஷிவா

கேள்வி: குரு, நிறைய சம்பாதிக்கிறேன். ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கில் வருமானம் வருகிறது. ஆனால், சொத்து மட்டும் சேர்க்கவே முடியவில்லை. என்னைவிட குறைவாக, மாதம் இருபதாயிரம், முப்பதாயிரம் மட்டுமே சம்பாதிப்பவர்கள் எல்லாம்கூட வீடு, நகை, பங்களா என நிறைய சொத்து சேர்த்துக் கொண்டே போகிறார்களே, இது எப்படி குரு? நான் என்ன தவறு செய்கிறேன்?

we-r-hiring

பணத்தைச் சம்பாதிப்பது. சம்பாதித்த பணத்தைக் கொண்டு சொத்து சேர்ப்பது. இந்த இரண்டும் வெவ்வெறு விதமான திறமைகள்.

நீங்கள் ஏதோ ஒரு வேலை செய்கிறீர்கள், வேலையில் மிகத் திறமையானவராக இருக்கிறீர்கள். தொழில் வளர்கிறது. முதலாளி நிறைய சம்பளம் தருகிறார். உங்களுக்கு நிறைய வருமானம் வருகிறது. பணத்தை சம்பாதிப்பது ஒரு கலை என்றால் சம்பாதித்த பணத்தை எப்படி சொத்தாக மாற்றுவது என்பது மற்றொரு கலை. இரண்டில் ஒன்றுதான் தெரியும் என்பது பாதி கிணறு தாண்டிய கதைதான்.

இந்த இரண்டுமே இரண்டு விதமான விஷயங்கள். செல்வம் ஒருவர் வாழ்வில் சேரவேண்டும் என்றால் அதற்கு நிறைய கோட்பாடுகள் இருக்கின்றன.

இது ஒரு மனநிலை. செல்வத்திற்கும் வங்கியில் சேமித்திருக்கும் பணத்திற்கும் சம்பந்தமில்லை. அது உங்கள் மனம் சம்பந்தப்பட்ட விஷயம். நீங்கள் பெரிய பணக்காரர் ஆகவேண்டும், நிறைய சொத்து உங்களுக்கு வேண்டும் என்றால் முதலில் உங்கள் மனம் சரியான நிலைக்கு வரவேண்டும். ‘A wealthy mind will have tremendous wealth. A poor mind will not have any wealth.’ . ‘Rich man’s mind, Poor man’s mind’  என்று ஆங்கிலதில் ஒரு பரவலான கூற்று உண்டு. முட்களின் மத்தியில் இருக்கும் அழகிய ரோஜாவைப் பார்ப்பது பணக்காரரின் மனம் என்றால் ரோஜாவை சுற்றி இத்தனை முட்கள் இருக்கிறதே என்று நினைப்பது ஏழையின் மனம். இது தான் வித்தியாசம்.“பண வாசம்”- சம்பாத்தியமும் உடைமைகளும் - குரு மித்ரேஷிவாமனம் உயர்ந்த சிந்தனைகளுடன் மிகுந்த சக்தி வாய்ந்ததாக இருக்கவேண்டும். அப்படி இருந்தால்தான் செல்வம் வரும், சொத்து சேரும்.

இதில் முக்கியமாக கவனிக்கவேண்டிய மற்றொரு விஷயம் முதலில் சொத்து என்பது என்னவென்றே பலருக்குத் தெரியவில்லை. சொத்து என்பது உங்களுக்குள் இருக்கக்கூடிய ஒரு பிராண சக்தியின் ஓட்டம். அதாவது, நீங்கள் என்ன சேவை கொடுக்கப்போகிறீர்களோ, எதைச் செய்யப் பிறந்திருக்கிறீர்களோ அதுதான் உங்களின் உண்மையான சொத்து

பணம் மிதமிஞ்சி வருகிறது. அதை எப்படிச் சொத்தாக மாற்றுவது? உங்கள் வருமானம் குறைவாக இருந்தாலும் வரக்கூடிய வருமானத்தையே சொத்தாக மாற்றலாம்.

இருபதாயிரம் சம்பளம் வரும்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? ஒரு சாதாரண மாருதி கார் வாங்குவீர்கள். அதற்கு மாதம் ஒரு ஐயாயிரம் தவணை கட்டுவீர்கள். வருமானம் கூடும். அறுபதாயிரம் எழுபதாயிரம் என்று வரத் தொடங்கும். அப்போது மாருதி காரை விற்றுவிட்டு பதினைந்து லட்சத்தில் ஒரு கார் வாங்குவீர்கள். இப்போது மாதம் ஐயாயிரம் தவணை செலுத்திய இடத்தில், மாதம் இருபதாயிரம் செலுத்துவீர்கள்.

எவ்வளவு வருமானம் வருகிறதோ அதற்கு இணையாக சொத்து வாங்குகிறீர்கள். ஆனால், ஒன்றை கவனிக்க மறந்துவிடுகிறீர்கள்.

கார் வாங்கும்போது உங்களுக்கு ஒரு சொத்து வருவது என்னவோ உண்மைதான். ஆனால், அந்தச் சொத்து மூலமாக உங்கள் பணம் வெளியில் செல்கிறது. ஒரு முறை மட்டுமல்ல, அன்றாடம். வாரம்தோறும். மாதம் தோறும். எரிபொருள், பராமரிப்பு என்று தொடர்ச்சியாக. இது ஒரு நிலை.

“பண வாசம்”- சம்பாத்தியமும் உடைமைகளும் - குரு மித்ரேஷிவா

மற்றொரு நிலை என்னவென்றால், ஒரு வீடு வாங்கலாமா என்று நினைப்பீர்கள், நினைத்தவுடனே, ஆஹா! இரண்டு கோடிக்கு வீடு வாங்குவதா? அந்தப் பணத்தை தொழிலில் முதலீடு செய்தால் மாதம் மூன்று நான்கு லட் சம் வருமானம் கிடைக்குமே என்று கணக்குப் போடுவீர்கள். இங்குதான் தவறு நடக்கிறது. சொத்துக்களால் வருமானம் வராது என்று நினைக்கிறீர்கள்.

யதார்த்தத்தில் இது உண்மையல்ல. சொத்துக்களும் வருமானத்தைத் தரக்கூடியது. ‘The more you try to accumulate wealth which can generate more wealth.’

ஒரு சொத்து வாங்கும்போது அந்தச் சொத்தும் ஒரு வருமானத்தைக் கொடுக்கக்கூடியதா என்று பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் சொத்துக்கள் அனைத்தும் மேற்கொண்டு சொத்தை உருவாக்கக்கூடிய நிலையில் இருக்கவேண்டும். அவ்வளவுதான்.

அந்தக் காலத்தில் செட்டியார் கணக்கு என்று சொல்வார்கள், கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

வட இந்தியாவின் மார்வாடி சமுதாயத்தைப் போல தமிழ் நாட்டில் நாட்டுக்கோட்டை செட்டியார் சமுதாயம் இருக்கிறது. அவர்களிடம் நிறைய சொத்து இருக்கும். அவர்களால் மட்டும் எப்படி நிறைய சொத்து சம்பாதிக்க முடிகிறது? கொஞ்சம் கவனித்துப் பார்த்தாலே போதும் அந்தச் சூத்திரம் உங்களுக்குப் புரிந்துவிடும்.

மிக எளிதான சூத்திரம். அவர்கள் எந்தச் சொத்து வாங்கினாலும் அந்தச் சொத்திலிருந்து 6% வட்டி கிடைக்குமா என்று கணக்குப் பார்த்துதான் வாங்குவார்கள். 6% என்பது அரை சதவீத வட்டி

ஒரு செட்டியார் சொத்து வாங்கினால் சும்மா வாங்கமாட் டார். ஐம்பது லட்ச ரூபாய்க்கு ஒரு சிறிய வீடு வாங்கலாம் என்று முடிவு எடுத்தால், அதிலிருந்து குறைந்தபட்சம் 6% வருமானம் கிடைக்குமா என்று பார்ப்பார். அப்படி வருமானம் வரக்கூடிய சொத்துக்களைத்தான் வாங்குவார்.

இது ஒரு கோட்பாடு. இந்தக் கோட்பாட்டைக் கடைபிடித்து சொத்து வாங்கும்போது. ஐம்பது லட்சம் செலவு செய்து வாங்கிய சொத்திலிருந்து மாதாமாதம் ஒரு வருமானம் வந்துகொண்டே இருக்கும். அந்த வருமானங்களை வைத்து, இன்னொரு சொத்து வாங்குவார்கள். அதுவும் 6% வட்டி கொடுக்கும். இப்படி வாங்கக்கூடிய ஒவ்வொரு சொத்தும் மேலும் வருமானத்தைத் தரும் போது சொத்துக்கள் பெருகிக்கொண்டே போகும். நாம் உறங்கும்போதும் நம்முடைய பணம் நமக்காக நடக்க வேண்டும் என்பதுதான் சொத்துக்களைப் பெருக்கும் தாரக மந்திரம்.“பண வாசம்”- சம்பாத்தியமும் உடைமைகளும் - குரு மித்ரேஷிவா

சொத்து சேர்ப்பதில் முக்கியமான பல கோட்பாடுகள் இருக்கின்றன. இதை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும்.

1) பணம் சம்பாதிப்பது எப்படி? சம்பாதித்த பணத்தைச் சொத்தாக மாற்றி, அதிலிருந்து மீண்டும் எப்படி வருமானம் உருவாக்குவது? இந்த இரண்டு கலையையும் கற்றவர்களால்தான் சொத்து சேர்க்க முடியும்.

2) சிலருக்கு நிறைய சொத்துக்கள் இருக்கும். ஆனால். வருமானமே இருக்காது. நிறைய பேருக்கு வருமானம் இருக்கும். ஆனால், சொத்துக்கள் இருக்காது. இரண்டுமே பிரச்சினைதான். இப்படிப்பட்டவர்கள் ஓடிக் கொண்டே இருக்கவேண்டும். ஆள் நின்றுவிட்டால் வருமானமும் நின்றுவிடும்.

3) சிலருக்கு பணம் நிறைய இருக்கும். ஆனால், நேரம் இருக்காது. அதனால் சம்பாதித்த பணத்தை அனுபவிக்க முடியாமல் போய்விடும். பணத்தினால் உருவாக வேண்டிய இன்பத்திற்குப் பதிலாக துன்பமே எஞ்சும்.

4) பணம் சம்பாதித்தால் மட்டும் போதாது. அதை முறையாக உபயோகிக்க வேண்டும். அதாவது ‘Application of funds’ என்று சொல்வார்கள். சரியான இடத்தில் சரியான முறைப்படி செய்யவேண்டும்.

5) இதில் மனநிலை என்பது மிக முக்கியமானது. உங்களுடைய சிந்தனைகளின் செயல்முறை என்ன? உணர்வுகள் என்ன? இதையும் கவனிக்க வேண்டும். சொத்து சேர்ப்பதற்கும் உணர்வுகளுக்கும் என்ன சம்பந்தம்?

உங்களுடைய எண்ணம், சொல், செயல், சுவாசம் மற்றும் இந்தப் பிரபஞ்சம் – இவை எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. இந்தத் தொடர்பு சரியாக இருந்து, அதற்கான திறமையும் உங்களுக்கு வந்துவிட்டது என்றால் எல்லாமே கிடைக்கும்.

இந்த இரண்டு விஷயத்தைப் புரிந்துகொண்டால், கொஞ்சம் பணம் இருந்தாலும் போதும் மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை நீங்கள் உருவாக்கிவிடலாம்.

“பண வாசம்”- கஷ்டப்படுவதில் டிகிரி வாங்குவது எப்படி? – குரு மித்ரேஷிவா

MUST READ