spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா30 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை – இலங்கை நீதிமன்றம்

30 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை – இலங்கை நீதிமன்றம்

-

- Advertisement -

இலங்கை சிறையில் உள்ள 30 ராமேஸ்வரம் மீனவர்களை நிபந்தனையுடன் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.30 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை – இலங்கை நீதிமன்றம்ராமேஸ்வரம் மீன்பிடி துறையிலிருந்து கடந்த அக்டோபர் 30-ல் கச்சா தீவு அருகே மீன்பிடி கடலுக்கு சென்று மீன்பிடித்து கொண்டிருந்த 30 மீனவர்களையும், 4 படகையும், அங்கு ரவுண்டுக்கு வந்த இலங்கை கடற்படையினா் சிறைபிடித்தனர். சிறைபிடித்த மீனவர்கள் 30 பேர் மீதும் எல்லை தாண்டுவது தொடா்பாக வழக்கு பதிவு செய்து, இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னா், 30 மீனவர்களையும் சிறையில் அடைத்தனா். 30 மீனவர்களுக்கும் நீதிமன்ற காவல் முடிந்த நிலையில், மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போது, நீதிபதி தாமாகவே முன் வந்து முதல்முறையாக எல்லை தாண்டி வந்ததாக வழக்கு பதிவு செய்த 26 மீனவர்களை விடுதலை செய்தனர்.

இந்த 26 பேரும் இலங்கை பணம் ரூ.2.30 லட்சம், இந்திய பணமாக ரூ.73,000 ஆயிரம் கட்டணத்தை  உடனடியாக செலுத்த இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் படி பணத்தை செலுத்தியதும் நீதிமன்றம் விடுதலை செய்தது.  30 பேரில் இரண்டாவது முறையாக 4 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அவா்களுக்கும் இலங்கை நீதிமன்றம் இலங்கை மதிப்பு ரூ.2.30 லட்சம், இந்திய மதிப்பு ரூ.80 ஆயிரம் அபாரதத் தொகையாக விதித்தது. இந்த பணத்தினை உடனே செலுத்தினால் தான் விடுதலை செய்யப்படுவாா்கள். அப்படி அபாரதத் தொகையை  செலுத்தத் தவறினால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘ஒன்றிய அரசின் நள்ளிரவு மனு’: நீதித்துறையின் சுதந்திரம் தகர்க்கப்படும் அபாயம் – செல்வப்பெருந்தகை எச்சரிக்கை!

we-r-hiring

MUST READ