எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் கடைசியாக வந்து நின்று நானும் ரவுடிதான் என்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கூறுகிறார் என அமைச்சர் சேகர்பாபு விமர்சனம் செய்துள்ளாா்.
அம்பத்தூர் தொழில்பேட்டையில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிநவீன பேருந்து நிலையத்தை அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார். அதன் பின்னர் புதூரில் உருவாக்கப்படும் விளையாட்டு மைதானப் பணிகளையும் அவர் பார்வையிட்டார். பணிகளை தொடங்காத ஒப்பந்ததாரரை கடிந்து கொண்ட அவர், “வெள்ளிக்குள் பணிகளை மும்முரப்படுத்த வேண்டும், இல்லையெனில் சனிக்கிழமை ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்” என எச்சரித்தார். ஆய்வின்போது எம்.எல்.ஏ ஜோசப் சாமுவேல், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் சேகர்பாபு, “சேக்கிழாருக்கும் கம்பருக்கும் வித்தியாசம் தெரியாதவர் எடப்பாடி பழனிசாமி. எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் கடைசியாக வந்து நானும் ரவுடிதான் என்று விஜய் கூறிக் கொள்கிறார்,” என கடுமையாக விமர்சித்துள்ளாா்.

மேலும், திட்டங்களை சரியான நேரத்திற்கு கொண்டு வர வேண்டும் இல்லையென்றால் அது பயனற்றது என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். முதல்வரின் அறிவுரைப்படி அனைத்து துறைகளிலும் திட்டங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றப் படுகிறதா என்று ஆய்வு செய்து வருகிறோம்” என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளாா்.


