spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமாநிலத்தில் இரண்டு அதிகார அமைப்புகள் செயல்படுவதை ஏற்க முடியாது-மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தான் முதன்மையானது –...

மாநிலத்தில் இரண்டு அதிகார அமைப்புகள் செயல்படுவதை ஏற்க முடியாது-மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தான் முதன்மையானது – உச்சநீதி மன்றம் அதிரடி தீர்ப்பு!

-

- Advertisement -

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு தான் ஒரு மாநிலத்தை முழுமையாக அதிகாரம் செலுத்தக்கூடிய அமைப்பாக இருக்க வேண்டும் என்றும், ஒரு மாநிலத்திற்கு இரண்டு அதிகார அமைப்புகள் செயல்படுவதை எங்களால் ஏற்க முடியாது என்றும், மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் ஒவ்வொரு முறையும் நீதிமன்ற கருத்தை கேட்க  வேண்டிய அவசியம் இல்லை என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.மாநிலத்தில் இரண்டு அதிகார அமைப்புகள் செயல்படுவதை ஏற்க முடியாது-மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தான் முதன்மையானது – உச்சநீதி மன்றம் அதிரடி தீர்ப்பு!

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலவரம்பு நிர்ணயித்த விவகாரம்  தொடர்பாக குடியரசுத் தலைவர் விளக்கம் கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

we-r-hiring

தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல்.S.சந்தூர்கர் ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது.

மசோதாக்கள் மீது 3 மாத காலத்துக்குள் முடிவெடுக்க வேண்டும் என ஆளுநர் மற்றும் குடியரசு தலைவருக்கும் ஒரு கால வரம்பை நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்திருந்தது.

குடியரசு தலைவர் அந்த தீர்ப்பு விவகாரம் தொடர்பாக 14 கேள்விகளை எழுப்பி அதற்கான விளக்கத்தை உச்சநீதிமன்றத்திடம் கோரியிருந்தார். அந்த கேள்விகள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில்  10 நாட்கள் விவாதம் நடைபெற்றது. அந்த வழக்கின் தீர்ப்பு கடந்த செப்டம்பர் 11ம் தேதி ஒத்திவைக்கபட்டது.

இந்நிலையில், உச்சநீதிமன்றம் அந்த வழக்கின் தீர்ப்பு வழங்கியது. அதில் ஆளுநராகப்பட்டவர் மாநில அமைச்சரவை ஆலோசனையின் படியும் அவர்களின் வழிகாட்டுதலின் படியும் நடக்க வேண்டும் என்று அரசியல் சாசனம் தெளிவுபடுத்தி உள்ளது என்று கூறியுள்ளனர்.

மேலும் நீதிபதிகள் கூறும் போது, ஆளுநருக்கு அரசியல் சாசனம் 200 மற்றும் 201ல் இருக்கும் அதிகாரம் குறித்து விவாதம் வைக்கப்பட்டது. மசோதாவுக்கு ஒப்புதல் எவ்வாறு அளிக்க வேண்டும் உள்ளிட்ட அந்த  வழிமுறையில் குறித்து விரிவாக விவாதம் செய்யப்பட்டது.

குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் மீது அனைத்து தரப்பிலிருந்தும் விரிவான வாதங்கள் முன்வைக்கப்பட்டது. ஆளுநர் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கலாம் அல்லது நிறுத்தி வைக்கலாம் அல்லது குடியரசு தலைவருக்கு அனுப்பலாம் அல்லது சட்டப்பேரவைக்கு குறிப்பு எழுதி திருப்பி அனுப்பலாம் என்ற வழிமுறைகள் உள்ளன, அது தொடர்பாக விரிவாக வாதம் வைக்கப்பட்டது.

அரசியல் சாசன பிரிவு 200ன் கீழ் ஆளுநருக்கு உள்ள அதிகாரங்கள் மசோதா மீது முடிவெடுக்க அவருக்கு உள்ள உச்சவரம்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஒரு மசோதா அமைச்சரவை மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுடைய ஆதரவு இல்லாமல் சட்டமன்றத்தில் நிறைவேறி இருக்காது என வாதம் வைக்கப்பட்டது.

முதல் பிரச்சனை, மசோதா மீது ஆளுநர் என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்துதான். ஒரு மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டவுடன் அதன் மீது முடிவெடுக்க நான்கு விருப்பங்களை அவருக்கு வழங்குகிறது என ஒரு தரப்பினர் கூறியிருக்கிறார்கள்.

இன்னொரு தரப்பு மூன்று வாய்ப்புகள் மட்டும் தான் அவருக்கு இருக்கிறது அது ஒப்புதல் அளிப்பது,நிறுத்தி வைப்பது அல்லது சட்டமன்றத்திற்கு திருப்பி அனுப்புவது. அதேபோல இரண்டாவது முறை மறு  நிறைவேற்றம் செய்து ஆளுநருக்கு அனுப்பும்போது அந்த மசோதாவை கட்டாயம் ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது என்று விவாவதம் நடந்தாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் காலவரையின்றி ஒப்புதலை நிறுத்தி வைக்க முடியாது என்று தெளிவுபடுத்தியுள்ளனர்.

இந்தியாவின்  கூட்டாட்சியில், ஆளுநர்கள் ஒரு மசோதா தொடர்பாக அவையுடனான வேறுபாடுகளைத் தீர்க்க பேச்சுவார்த்தை செயல்முறையை மேற்கொள்ள வேண்டும் என்றும், இடையூறு விளைவிக்கும் அணுகுமுறையை மேற்கொள்ளக் கூடாது என்றும் தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளனர்.

அரசியல் சாசன பிரிவு 200 இன் கீழ் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு மூன்று வாய்ப்புகள் தான் இருக்கிறது. மத்திய அரசு சொல்வது போல நான்காவது வாய்ப்பு இல்லை என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெளிவு படுத்தியுள்ளனர்.

அரசியல் சாசன பிரிவு 200 இன் கீழ் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு 3 வாய்ப்புகள் மட்டுமே இருக்கிறது. மசோதாக்கள் மீது ஒப்புதல் அளிக்க வேண்டும் அதை அரசுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் இல்லையென்றால் நிராகரிக்க வேண்டும் அதை விடுத்து கால வரம்பின்றி மசோதாக்களை முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டு வைக்க ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்று கூறியுள்ளனர்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, அமைச்சரவைதான் முதன்மையாக இருக்க வேண்டும். மாநிலத்தில் இரண்டு நிர்வாக அதிகாரங்கள் இருக்க முடியாது என்பதை உறுதிப்படுத்துகிறோம் என்று தீர்ப்பளித்தனர்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு தான் ஒரு மாநிலத்தை முழுமையாக அதிகாரம் செலுத்தக்கூடிய அமைப்பாக இருக்க வேண்டும் என்றும், ஒரு மாநிலத்திற்கு இரண்டு அதிகார அமைப்புகள் செயல்படுவதை எங்களால் ஏற்க முடியாது என்றும், மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் ஒவ்வொரு முறையும் நீதிமன்ற கருத்தை கேட்க  வேண்டிய அவசியம் இல்லை என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், ஆளுநருக்கு மசோதாக்களை நிறுத்திவைக்க அதிகாரம் இல்லை. குறிப்பிட்ட கால அளவில் ஆளுநர் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும். மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க ஒரு குறிப்பிட்ட ஒரு கால வரம்பை நிர்ணயிப்பது என்பது அரசியல் சாசனம் வழங்கியுள்ள நெலிவு சுளிவுகளுக்கு முரணாக உள்ளது என கருத்து தெரிவித்துள்ளனர். அதேவேளையில் வழக்கின் முந்தைய  தீர்ப்புக்குள்  நீதிமன்றம் செல்ல விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். ஒரு மசோதாவை நிறுத்தி வைக்கும் பொழுது அதற்கான காரணத்தை தெரிவிக்காமல் இருந்தால் அது கூட்டாச்சி தத்துவத்திற்கு எதிரானதாக இருக்கும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆளுநர்களின் செயல்பாடுகளை அரசியலமைப்பு நீதிமன்றங்கள் கேள்வி கேட்க முடியாது இருப்பினும், ஒரு மசோதா மீது காரணமே இல்லாமல் நீண்ட காலத்திற்கு எந்த முடிவும் எடுக்கப்படாமல் ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்தால் அதை நீதிமன்றங்கள் ஆய்வுக்கு உட்படுத்த முடியும்.

ஆளுநர் மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் இருக்கும் போது, ​​அரசியலமைப்பு, நீதித்துறை மறு ஆய்வு செய்ய முடியும். ஆளுநருக்கு வரையறுக்கப்பட்ட உத்தரவை பிறப்பிக்க முடியும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மாநில அரசுடன் இணக்கமாக செயல்பட வேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு உள்ளது – உச்சநீதிமன்றம் தீர்ப்பு 

MUST READ