சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே மக்களின் குடியுரிமையைப் பறிக்கும் கூட்டு சதி வாக்காளர் தீவிர திருத்தச் சட்டத்தையும், பாஜகவின் தேர்தல் ஆணையத்தையும் கண்டித்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார், விசிக சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷா நவாஸ், பனையூர் பாபு, விசிக துணை பொது செயலாளர் வன்னி அரசு என 500க்கும் மேற்பட்ட விசிகவினர் கலந்துகொண்டு ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராகவும், தேர்தல் ஆணையத்தை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர். வாக்காளர்களை திணறடிக்கும் SIR-ஐ திரும்பப் பெற வேண்டும். செய்யாதே செய்யாதே ஜனநாயக படுகொலையை மோடி அரசே செய்யாதே எனவும், வெட்கம் இல்லையா வெட்கம் இல்லையா மோடியே வெட்கம் இல்லையா என கண்டன கோஷங்கள் எழுப்பட்டது.
திருமாவளவன் மேடைப்பேச்சு

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கிற சூழலில் இது குறித்து இன்னும் விரிவாக விவாதிக்க வேண்டி இருக்கிறது. இந்த ஆட்சியாளர்கள் இதனை உள்நோக்கத்தோடு கையாளுகிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த ஆர்ப்பாட்டத்தால் SIR நிறுத்திவிட முடியாது. தீவிரமான உள்நோக்கம் என்பதை மக்களுக்கு அம்பலப்படுத்தவே இந்த ஆர்பாட்டம். விடுதலை சிறுத்தைகள் ஒவ்வொருவரும் அரசியல் புரிதலோடு காலமட வேண்டிய தேவை இருக்கிறது. SIR நிறுத்த வேண்டும். தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை தடைசெய்ய வேண்டும் என்று கோரி கட்சி சார்பில் SIR எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறோம்.
தேர்தல் வரப்போகிறது வாக்காளர் பட்டியலில் நம் பெயர்கள் இடம்பெற்றால் தான் வாக்களிக்க முடியும் நம்முடைய வாக்குகளை பறிகொடுத்துவிட்டு நடுத்தெருவில் நிற்க முடியாது நாமும் SIR நடவடிக்கையில் இறங்கித்தான் ஆக வேண்டும். இதனை மறுக்க முடியாது அப்படி ஒரு நெருக்கடியை பாஜக அரசு அரசியல் கட்சிகளுக்கு ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நேரத்தில் அறிவிப்பு செய்தால் இதனை எதிர்த்து அரசியல் கட்சிகள் ஒன்றும் செய்ய முடியாது. கட்டாயம் அவர்கள் விமர்சனங்களை செய்த கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தான் ஆக வேண்டும் தவிர்க்க முடியாது. SIR வேண்டாம் என சொல்கிறாரா? நாம் என் பெயரை வாக்காளர் பட்டியலில் என் பெயரை பதிவு செய்து தான் ஆக வேண்டும் எப்படியும் தேர்தல் வந்தே தீரும் நான் தேர்தலில் ஓட்டு போட்டே ஆகவேண்டும் வேறு வழியில்லை.
ஆதிதிராவிடர் வன்னியர் சமூகத்தில் அவர்களால் ஊடுருவ முடியவில்லை போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு மிகப்பெரிய தடுப்பு அறன்களாக இருப்பது வன்னியர் சமூகத்தில் உள்ள அரசியல் இயக்கமான பாட்டாளி மக்கள் கட்சி. ஆனால் அவர்களும் இன்று பாஜகவோடு உறவாடுகிறார்கள். தேர்தல் உறவை தொடர்ந்து வைத்திருக்கிறார்கள். அங்கேயும் இந்த ஊடுருவல் கூடிக் கொண்டு செல்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தடுப்பு அருணாக தமிழ்நாட்டில் விளங்கி வருகிறது. பாஜக ஆர்எஸ்எஸ் வகிக்கிற சதி திட்டங்களை முறியடிக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்தால் எஸ் ஐ ஆர் ஐ நிறுத்தி விட முடியாது. ஆனால் அவர்களின் சதித்திட்டத்தை முறியடிக்க முடியும் மக்களை அரசியல் படுத்துவதால், இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த மாநிலத்தில் வளருகிற கட்சியில் ஊடுருவி அந்தக் கட்சிகளோடு கூட்டணி வைத்து எந்த கட்சியோடு கூட்டணி வைக்கிறார்களோ அந்த கட்சியை காலி செய்வது பாஜக ஆர் எஸ் எஸ் செயல் திட்டங்களில் ஒன்று.
அதிமுகவின் மீது உள்ள நன்மதிப்பின் காரணமாக அதிமுகவிற்கு ஆதரவான சில கருத்துக்களை பதிவு செய்தோம். ஆனால் அவர்கள் அதனை புரிந்து கொள்ளவில்லை அதனை ஏற்க அவர்கள் மனம் இசையவில்லை. வருங்காலத்தில் அதிமுகவை அவர்கள் பலவீனம் படுத்தி விடுவார்கள். பாஜகவின் செயல் திட்டங்களில் இதுதான் மிக முதன்மையானது. சிராஜ் பாஸ்வான் போட்டியிட்ட இடங்களில் அதிக இடங்கள் வெற்றி பெற்று இருக்கிறார். அதுபோன்று திருமாவளவனுக்கு அரசியல் செய்ய தெரியவில்லை என்று சிலர் சமூக ஊடகங்களில் எழுதி வருகிறார்கள். 29 இடங்களில் போட்டியிட்டு 20 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறார் அதில் நான்கு பேர் மட்டும் தான் தலித்.
அதிமுக தலைவர்கள் எப்படி கையாளப்படுகிறார்கள்? முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் என்ன சொல்கிறார் அமித்ஷா அழைத்து தான் நான் டெல்லி சென்றேன் எங்கள் கட்சி விவகாரத்தை தான் அவர்கள் பேசினார்கள். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கையை பிசைந்து கொண்டிருக்கிறார். ஓபிஎஸ் அவர்களை கையாண்டது யார்? அவரை ஜெயலலிதாவின் சமாதியில் அமர்ந்து தியானம் இருக்க வைத்தது யார்? சசிகலா அம்மையாரை தலையில் கை வைத்து கட்சியின் தலைவராக ஆக முடியாமல் செய்தது யார்? டிடிவி தினகரனை செயல்படவிடாமல் முடக்கி வைத்தது யார்? இன்று அதிமுக தலைமைக்கான இந்த நெருக்கடிக்கு பாஜக காரணமா இல்லையா? தமிழ்நாடு ஆட்சி செய்த கட்சிகள் பலமுறை வெற்றி பெற்ற கட்சிகள் எவ்வளவு இலகுவாக அவர்கள் ஆட்டிப்படைகிறார்கள்.
நாளைக்கு அதிமுகவில் இருந்து வெற்றி பெற்று வரும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருவேளை ஆட்சியைப் பிடித்தால் அமைச்சர் ஆக போகிறவர்கள் யாருடைய பேச்சை கேட்பார்கள்? வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் பல மாநிலங்களில் என் ஆர் சி சி ஏ போன்றவற்றை நேரடியாக பயன்படுத்துகிறார்கள். இங்கே அதுபோன்று பயன்படுத்த முடியாது என்பதால் எஸ் ஐ ஆர் பயன்படுத்துகிறார்கள். தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி வடிகட்டும் நடைமுறையை பயன்படுத்துகிறார்கள். எஸ் ஐ ஆர் ஐ நடைமுறைப்படுத்துவதால், 10 அல்லது 15 சதவீதம் பேர் வாக்குகளை செலுத்த முடியாத நிலை ஏற்படும். 19 BLO தற்கொலை கொண்டார்கள் தமிழ்நாட்டில் ஒருவர் கேரளாவில் ஒருவர் பல தற்கொலை செய்து கொண்டாலும் அழுத்தங்கள் இருந்தாலும், எதிர்கட்சிகள் விமர்சனம் செய்தாலும் பாஜகவின் ஆதரவாளர்கள் வாக்குகள் பறி போனாலும் அவர்களுடைய இறுதி இலக்கு குடிமக்கள் தேசிய பட்டியலை உருவாக்குவது.
அது அவர்கள் விரும்புகின்ற இந்தியாவை உருவாக்க பயன்படும். ஆச்சாரியாரத்தில் பகிர்ந்து கொள்வது பின்பு கைப்பற்றுவது என்கிற செயல்முறையில் செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு பல மாநிலங்கள் சான்றாக இருக்கின்றன. பீகார் மாநிலத்தில் 200, 300 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். தேர்தல் ஆணையமும் பிஜேபியும் இன்று ஒரே நிறுவனம் என்று சொல்லக்கூடிய ஒரே நோக்கத்திற்காக செயல்படக் கூடியவர்களாக வெளிப்படையாக இருக்கிறார்கள்.
விசிக சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷா நவாஸ் மேடைப் பேச்சு
தேர்தல் ஆணையத்தின் பாதை திருடர் பாதை, ஜனநாயகத்திற்கு விரோதமாக இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் உள்ளதாகவும், தேர்தல் ஆணையம் மக்களை வாக்களிக்க தூண்ட வேண்டும், மக்கள் வாக்கை அது பாதுகாக்க வேண்டும். ஆனால் இந்திய தேர்தல் ஆணையம் நேர் எதிராக செயல்படுகிறது. மக்கள் வாக்களிக்கக் கூடாது என்பதற்காக என்னென்ன செய்ய வேண்டுமோ அதனை தேர்தல் ஆணையம் செய்கிறது என்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டில் எந்த வெளிப்படை தன்மையும் இல்லை என்றும் குற்றம்சாட்டினார்.
மேலும் பேசிய அவர் தேர்தல் ஆணையம் அனைத்திலும் குளறுபடி செய்து வருவதாகவும், ராகுல் காந்தி கேள்விக்கு இதுவரை தேர்தல் ஆணையம் விடை சொல்லவில்லை என கூறிய அவர் ராகுல் காந்தியை தேர்தல் ஆணையம் பாராட்டிருக்க வேண்டும் என்ற அவர்தேர்தல் ஆணையம் பித்தலாட்டம் செய்து வருகிறது. தன்னுடைய தவறை மறைப்பதற்காக ஒட்டுமொத்தமாக மக்கள் மீது சுமையை தேர்தல் ஆணையம் சுமத்தியுள்ளது என்றும் தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளை பறிக்கும் வேலையை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது எனவும் இந்திய தேர்தல் ஆணையத்தின் பாதை திருடர் பாதை என காட்டமாக கூறினார்.
விசிக துணை பொது செயலாளர் வன்னியரசு மேடைப் பேச்சு
SIR- ஐ கண்டித்து நவம்பர் 2ஆம் தேதி முதலமைச்சர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டதாகவும், பீகாரில் 65 லட்சம் வாக்குகள் பறிபோனது, ஜனநாயக விரோத அரசு பீகாரில் அமைந்துள்ளது என கூறிய அவர் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சிறுபான்மையின மக்கள் வாக்குகளை பறித்து விட்டு இந்துராஸ்டிரம் படைக்க வேண்டும் என இலக்கை நோக்கி பாஜக இந்த நகர்வை செய்து வருகிறது என்ற அவர் பாஜகவிற்கு எதிராக யார் வாக்களிப்பார்கள் என்று கண்டறியும் திருட்டு வேலையை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது என்றார். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை அமல்படுத்த பாஜக பல்வேறு குறுக்கு வழிகளை தேடி வருகிறது என்றும் பாஜகவின் கூலிப்படையாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நானேஷ்குமார் தேர்தல் ஆணையத்தை நடத்தி வருவதாகவும் நாளை இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டமே செல்லாது என்று பாஜக அறிவிக்கும் என்ற அவர் பாஜக ஒரு பயங்கரவாத கட்சி, தேச விரோத சட்டங்களை பாஜக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது என்றும் பாஜக முன்னெடுப்பதை அதிமுக ஆதரிக்கிறது, பாஜகவின் அஜெண்டாக்களை செயல்படுத்தக்கூடிய ஒட்டுப்புழுக்களாக நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் உள்ளிட்டவைகள் உள்ளன என்று கூறினார்.


