spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஓபிஎஸ் புது கட்சி! யாருடன் கூட்டணி? திமுகவுடன் டீலிங்கா? பத்திரிகையாளர் இதயா நேர்காணல்!

ஓபிஎஸ் புது கட்சி! யாருடன் கூட்டணி? திமுகவுடன் டீலிங்கா? பத்திரிகையாளர் இதயா நேர்காணல்!

-

- Advertisement -

எடப்பாடியை வீழ்த்துவதற்காக ஓபிஎஸ், டிடிவி போன்றவர்கள் விஜயுடன் செல்வதற்கு தயாராக உள்ளனர். வேறு வழியில்லை என்றால் திமுகவிடம் சென்றுகூட, எடப்பாடிக்கு பாடம் கற்பிப்பார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் துக்ளக் இதயா தெரிவித்துள்ளார்.

we-r-hiring

அதிமுக, தவெக கூட்டணி பேச்சுவார்த்தைகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் துக்ளக் இதயா, பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- காங்கிரஸ், விஜயுடன் கூட்டணிக்கு செல்லும் என்று பேசப்பட்ட நிலையில், திமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த அக்கட்சி சார்பில் குழு அமைக்கப்பட்டதுடன் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது. ராகுலை பிரதமர் வேட்பாளராக இந்தியா கூட்டணி கட்சியின் தலைவர்கள் சொல்ல தயங்கியபோது, முதலில் அவரை பிரதமர் வேட்ளாராக அறிவித்தவர் ஸ்டாலின். திமுக உடனான கூட்டணியை காங்கிரஸ் முறித்தால், காங்சிரஸ் மீதான நம்பகத்தன்மை தேசிய அளவில் போய்விடும் என்கிற அச்சம் இருந்தது. அதேபோல், அவர்கள் விஜய் கூட்டணிக்கு செல்லவில்லை. அதேவேளையில் அமித்ஷா வந்து கையை முறுக்கினாலும் விஜய், அதிமுக கூட்டணிக்கு செல்ல மாட்டார். தற்போதும் விஜய், பொதுக்குழுவில் நான் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.

யார் கூட்டணிக்கு வந்தாலும்? தங்களுக்கு கீழேதான் இருக்க வேண்டும் என்று அவர் சொல்லிவிட்டார். எடப்பாடியே தன்னுடைய ஈகோவை கைவிட்டு, கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டாகிவிட்டது என்று சொன்னார். ஆனால் அதையும் மீறி விஜய் கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டார். விஜய் ஒருபோதும் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் என்று சொல்ல மாட்டார். வேண்டுமானால் அதிமுக, விஜயுடன் கூட்டணிக்கு செல்லலாம். அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டார். தான் முதலமைச்சராக வேண்டும் என்று தான் அவர் நினைப்பார் எனவே அதிமுக – தவெக கூட்டணிக்கும் சாத்தியம் கிடையாது.

இவர்கள் தவிர்த்து இருப்பது பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தான். அதேபோல் டிடிவி தினகரனும் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணிக்கு செல்லலாம். தற்போது கிடைத்திருக்கும் தகவல்களின்படி எடப்பாடி பழனிசாமி ஓரளவு இறங்கி விட்டதாகவும், என்டிஏ கூட்டணிக்குள் தினகரனை வைத்துக் கொள்ளலாம் என்கிற பேச்சுவார்த்தையை அவர் யோசிக்கலாம் என்று கூறியதாகவும் சொல்லப்படுகிறது. அதேநேரம், தினகரன், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் என்றால் கூட்டணிக்கு வர மாட்டேன் என்றும், முதலமைச்சர் வேட்பாளரை மாற்ற வேண்டும் என்றும் செக் வைக்கிறார். அப்போது அமித்ஷா முதலமைச்சர் வேட்பாளரை மாற்றுவாரா? அல்லது தேர்தல் முடிவுகளுக்கு பிறகு யார் முதலமைச்சரை முதலமைச்சர் என்று முடிவு செய்வோம் என்பாரா? என்று கேள்வி எழுகிறது.

அப்படி அமித்ஷா அறிவித்தால், அந்த கூட்டணியில் எடப்பாடி தொடர்வாரா? என்பதும் சந்தேகம் தான். அண்ணாமலையை பொருத்தவரை அதிமுக – பாஜக கூட்டணி தோல்வி அடைய வேண்டும் என்றுதான் விரும்புவார். தினகரனும், எக்காரணம் கொண்டும் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றுவிடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளார். எனவே அவர் நிச்சயமாக எடப்பாடியுடன் கூட்டணிக்கு செல்ல மாட்டார்.

ஓபிஎஸ், தற்போது அதிமுகவை ஒருங்கிணைக்க டிசம்பர் 15ஆம் தேதி வரை கெடு விதித்து விட்டார். இதற்கு எடப்பாடி பழனிசாமி நிச்சயம் எந்த விதமான பதிலும் அளிக்க மாட்டார். அவரை பொறுத்தவரை எடப்பாடியை முழுமையாக பலவீன படுத்திவிட்டோம் என்று நினைக்கிறார். எனவே ஓபிஎஸ் கெடு விதித்ததை பொருட்படுத்த மாட்டார். எனவே ஓபிஎஸ், என்டிஏ கூட்டணிக்கு செல்வதன் மூலமாக எடப்பாடியை பலப்படுத்த விரும்ப மாட்டார். மேலும் ஓபிஎஸ் தனிக்கட்சி தொடங்கினார் என்றால் அவர் அதிமுகவை உரிமை கோர முடியாது. எனவே அவர் தனிக்கட்சி தொடங்குவாரா? என்பது சந்தேகத்திற்குரியதாகும்.

செங்கோட்டையன், விஜய் உடன் சேர்ந்துவிட்டார் என்றால், விஜய்க்கு அது பெரிய திருப்புமுனையாக இருக்கும். காரணம் விஜயை யாரும் நெருங்க முடியாத அளவுக்கு, புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ஜான் ஆரோக்கியசாமி போன்றவர்கள் அவரை இரும்பு கோட்டைக்குள் வைத்துள்ளனர். செங்கோட்டையன் தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகளுடன் தொடர்பில் உள்ளவர். அவர் விஜயிடம் பேசுகிறபோது வெளிக் கட்சியினரை உள்ளே கொண்டு வருவதற்கான கதவுகள் திறக்கப்படும். அந்த ஒரு வாய்ப்பு விஜய்க்கு வரும்.

செங்கோட்டையன், ஓபிஎஸ் , டிடிவி தினகரன் போன்றவர்கள் விஜய் உடன் இணையும் போது, அவர்களுக்கு ஒரு அரசியல் அங்கீகாரம் கிடைக்கும். விஜய் கட்சியின் முகம் மாறும். அதேவேளையில் திமுக, அதிமுகவுக்கு மாற்று விஜய் என்று நினைத்தவர்கள் மத்தியில் அதிமுக ஊழல் முகங்களை கொண்டு வருவதாக விமர்சனம் எழும். விஜய்க்கு அரசியல் முகம் தேவைப்படுகிறது. அதற்கு சில சீனியர்கள் தேவையாகும். விஜயகாந்த் எப்படி பண்ருட்டி ராமச்சந்திரனை உடன் வைத்திருந்தாரோ அதேபோல, ஓரிரு தலைவர்கள் அவருக்கு தேவை என்று நினைக்க வாய்ப்பிருக்கிறது. அப்படி நினைக்கிறபோது செங்கோட்டையன், டிடிவி, ஓபிஎஸ் போன்றவர்களை சேர்த்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.

தங்களிடம் இருந்து கட்சியை அபகரித்த எடப்பாடி பழனிசாமியை பழிவாங்க டிடிவி, ஓபிஎஸ் போன்றவர்கள் விஜயிடம் செல்வதற்கு தயங்க மாட்டார்கள். அதையும் மீறி எடப்பாடியை அழிக்க அவரகள் திமுகவுக்கு சென்றால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படி அவர்கள் சேர்ந்தாலும் தென் மாவட்டங்களில் அதிமுக வென்ற இடங்களில் அவர்களுக்கு வாய்ப்பு தருவார்கள். திமுகவை பொறுத்தவரை ஒரு வாக்குகள் கூட விடக்கூடாது என்று நினைக்கிறார்கள்.

டிடிவி தினகரனை பொறுத்தவரை விஜயுடன் கூட்டணி செல்ல விரும்புகிறார். வேறு வழியில்லாவிட்டால் திமுக உடன் சென்றாவது எடப்பாடியை அழிக்க வேண்டும் என்று நினைக்கிறார். விஜய் தரப்பில் டிசம்பருக்கு பிறகு கூட்டணி பேசப் போவதாக சொல்கிறார்கள். விஜய், அதிகாரத்தில் பங்கு தருவதாக சொல்கிறார். ஆட்சியை பிடிக்க கூட்டணி கட்சிகளின் ஆதரவு விஜய்க்கு தேவையாகும். எதிர்க்கட்சியாக வேண்டுமெனில் கூட்டணி வைக்காமல் இருக்கலாம். ஓபிஎஸ், டிடிவி, விஜய் என்று ஒரு அணி அமைந்தால் அந்த அணிக்கு அண்ணாமலை செல்வதற்கு வாய்ப்புகள் கிடையாது. அவர் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிந்த உடன் தனக்கு பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பு வழங்குவார்கள் என்று எதிர்பார்ப்பில் இருக்கிறார். டிடிவி, ஓபிஎஸ் போன்றவர்களும், எடப்பாடிக்கு 2026 தேர்தல் தோல்வி படுதோல்வியாக அமையும். அதிமுக தலைமையில் நிச்சயமாக மாற்றம் வருகிறபோது, நமக்கு வாய்ப்பு இருக்கும் என்கிற நம்பிக்கையும் அவரிடம் இருக்கும். அதனால் எடப்பாடியை வீழ்த்த வேண்டும் என்பதில் அவர்கள் தீவிரமாக இருப்பார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ