புழல் ஏரியின் பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து மீண்டும் 100 கனஅடி உபரிநீர் திறக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரதாப் அறிவித்துள்ளாா்.
புழல் ஏரியின் பாதுகாப்பு கருதி ஏரியிலிருந்து நடப்பாண்டில் மீண்டும் 6வது முறையாக 100 கனஅடி உபரிநீர் திறக்கப்பட உள்ளதால், கால்வாய் ஓரங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரதாப் அறிவுறுத்தியுள்ளாா். மேலும், 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர் இருப்பு 2994 மில்லியன் கனஅடியாக நீர் நிரம்பியுள்ளது. 21.2 அடி ஆழம் கொண்ட புழல் ஏரியில் நீர்மட்டம் 19.91 அடியாக உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 3265 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. குடிநீருக்காக ஏரியில் இருந்து 184 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது எனவும் மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.
திமுக எம் எல் ஏ மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து – உயர்நீதிமன்றம் அதிரடி


