கரூர் சம்பவத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் முதல்முறையாக ஈரோடு மாவட்டத்தில் இன்று நடக்கும் பிரச்சார கூட்டத்தில் திறந்தவெளி வாகனத்தில் நின்று விஜய் மக்களிடையே பேச உள்ளார்.
தவெக தலைவர் விஜய், அனைத்து மாவட்டங்களிலும் வாகன பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதில், கரூர் மாவட்டத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடந்து வருகிறது. கரூர் சம்பவத்திற்கு பிறகு, தமிழ்நாட்டில் முதல்முறையாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை விஜயமங்கலம் சுங்கசவாடி அருகே இன்று காலை நடக்கும் பிரச்சார கூட்டத்தில் திறந்தவெளி வாகனத்தில் நின்று விஜய் மக்களிடையே பேச உள்ளார். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரசார கூட்டம் நடைபெறும் இடத்தை நேற்று செங்கோட்டையன் பார்வையிட்டாா்.
டெல்லியை குளிர்விக்க எடப்பாடி அறிக்கை – முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்


