spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகடலில் தொடரும் அட்டூழியம்… ராமேஸ்வரம் – தூத்துக்குடி மீனவர்கள் வேதனை…

கடலில் தொடரும் அட்டூழியம்… ராமேஸ்வரம் – தூத்துக்குடி மீனவர்கள் வேதனை…

-

- Advertisement -

கச்சத்தீவு மற்றும் தனுஷ்கோடி–தலைமன்னார் இடையிலான கடற்பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீதான கைது நடவடிக்கைகள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.கடலில் தொடரும் அட்டூழியம்… ராமேஸ்வரம் – தூத்துக்குடி மீனவர்கள் வேதனை…கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை, நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, அவர்களை கைது செய்ததோடு, ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல், தூத்துக்குடியைச் சேர்ந்த 30 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மறுபுறம், தடை செய்யப்பட்ட கச்சத்தீவு அருகே மீன்பிடித்ததாகக் கூறி, 49 மீனவர்களை இந்திய கடலோர காவல்படையும் கைது செய்துள்ளது. இந்நிலையில் இப்பிரச்சனைக்கு எப்போது விடிவுகாலம் பிறக்குமோ என மீனவர்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையையொட்டி, சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள்… போதிய விமானங்கள் இல்லாமல் கடும் அவதி…

we-r-hiring

MUST READ