spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுரயில் நிலையங்களில் பொது மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

ரயில் நிலையங்களில் பொது மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

-

- Advertisement -

கடந்த சில நாட்களுக்கு முன் திருத்தணி ரயில் நிலையத்தில் வடமாநிலத்தவர் ஒருவா் தாக்கபட்டதை தொடா்ந்து, இன்று அதே ரயில் நிலையத்தில் புடவை வியாபாரி தாக்கப்பட்டதற்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளாா்.ரயில் நிலையங்களில் பொது மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,“திருத்தணி ரயில் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் வடமாநில இளைஞர் ஒருவரை 4 சிறார்கள் காட்டுமிராண்டித்தனமாக கொடூரமாக தாக்குதல் நடத்தினார்கள். இன்று அதே ரயில் நிலையத்தில் புடவை வியாபாரி ஒருவரை சில இளைஞர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். தொடர்ச்சியாக அந்த ரயில் நிலையத்தில் இத்தகைய தாக்குதல் நடைபெறுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லாத ரயில் நிலையமாக திருத்தணி ரயில் நிலையம் உள்ளது. இவ்வளவு நடந்தும் அந்த பகுதிகளில் பாதுகாப்பிற்கு காவலர்கள் இல்லாமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. எந்தவகையிலும் இத்தகைய குற்ற செயல்கள் ஏற்றுக்கொள்ளமுடியாது. வரும் காலத்தில் இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க அப்பகுதியை ரயில்வே நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து, காவலர்களை நியமித்து பொதுமக்கள் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்” என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.

பொங்கல் பண்டிகை… அரசுப் பேருந்துகளில் பயணம் செய்ய 77,392 பேர் முன்பதிவு…

MUST READ