spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைதேர்தல் தேதி அறிவிப்பு! விஜய் தலைமையில் புதிய அணி! களம் யாருக்கு சாதகம்? தராசு ஷ்யாம்...

தேர்தல் தேதி அறிவிப்பு! விஜய் தலைமையில் புதிய அணி! களம் யாருக்கு சாதகம்? தராசு ஷ்யாம் நேர்காணல்!

-

- Advertisement -

தமிழ்நாட்டில் தற்போதைய அரசியல் சூழலில் நான்கு அணிகள் உள்ளதாகவும், இதில் திமுகவின் கைகள் மேலோங்கி இருப்பதாகவும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்  பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- அமித்ஷா தமிழ்நாட்டில் என்டிஏ கூட்டணி ஆட்சி வரும் என்று சொல்லியிருக்கிறார். அதற்கு உதாரணமாக பீகார் தேர்தலை காட்டியிருக்கிறார். அங்கு பாஜக, ஜேடியு ஒரே அளவிலான தொகுதிகளில் போட்டியிட்டன. ஆனால் தமிழ்நாட்டில் தேர்தலுக்கு முன்பாக கூட்டணி ஆட்சி என்று சொல்வதே, கூட்டணியை பலவீனப்படுத்துவதாகும். எடப்பாடி பழனிசாமியும், அமித்ஷாவின் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அவருக்கு பதிலடியாக தான் அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று சொல்கிறார்.

அதிமுகவில் 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனு வாங்கி, நேர்காணல் நடத்தப் போகிறார்கள். தொகுதி பங்கீடு நடைபெறாமல், நேர்காணல் நடத்துவதில் எந்த பயனும் கிடையாது. தேர்தல் அறிவிப்பு வெளியான பின்னர் தான் தொகுதி பங்கீடு இறுதியாகும். எனவே தற்போது நேர்காணல் நடத்துவது அவசியம் அற்றது. வேண்டுமென்றால் அரசியல் ரீதியாக திமுகவை விமர்சிக்கலாம். எதார்த்தத்தில் அதிமுகவில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் நிர்பந்தம் உள்ளது. பதிவு செய்யப்பட்ட கட்சி என்றால், அங்கீகாரம் பெற வேண்டும் என்கிற நிர்பந்தம் உள்ளது.

புதுக்கோட்டையில் நடைபெற்ற கூட்டத்தின் வாயிலாக தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் தேர்தல் என்று நாம் புரிந்து கொண்டோம். ஏப்ரல் முதல் அல்லது 2வது வாரத்தில் தேர்தல் என்றால், மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலின் முதற்கட்டத்தோடு பொருந்தி போய்விடும். பிப்ரவரி 25 முதல் 28ஆம் தேதிக்குள் சட்டப்பேரவை தேர்தல் தொடர்பான அறிவிக்கைகள் வெளியிடப்படும். அதன் பிறகு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். அதன் பிறகு நலத்திட்ட உதவிகளை வழங்கிட முடியாது. மேற்குவங்கத்தில் 5 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.

மேற்கு வங்கத்தின் முதற்கட்ட தேர்தலோடு சேர்த்து தமிழ்நாட்டிற்கோ, அல்லது தமிழ்நாட்டு உடன் புதுச்சேரிக்கோ சேர்த்து தேர்தல் நடைபெறும்.  எப்படி இருந்தாலும் மேற்குவங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும். எதிர்க்கட்சியாக உள்ள பாஜக, அம்மாநிலத்தில் ஆட்சிக்கு வர முயற்சிப்பார்கள். அமித்ஷா எதற்காக முன்னதாகவே தமிழ்நாட்டிற்கு வருகிறார், பொங்கல் கொண்டாடுகிறார் என்றால், பொங்கல் மீது இருக்கும் பற்றுதல் கிடையாது. அவருக்கு தற்போது தான் நேரம் உள்ளது.  அதற்கு பிறகு அவர் தமிழ்நாட்டிற்கு வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. பிரதமர் மோடி ஒரு சில முறை வரலாம். எனவே அதிமுகவின் தயவு இல்லாமல் பாஜகவால் வெற்றி பெற முடியாது.

அமித்ஷா, தன்னுடைய பேச்சில் எடப்பாடி பழனிசாமி என்று ஒருமுறை கூட சொல்ல வில்லை. அதற்கு காரணம் அவருக்கு அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் விருப்பம். ஆனால் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய சொந்த விறுப்பு வெறுப்புகளுக்காக அவர்களை கட்சியில் சேர்க்கவில்லை. டிடிவி, ஓபிஎஸ் உள்ளிட்ட பிரிந்து சென்றவர்களை எல்லாம் அதிமுகவில் சேர்க்காவிட்டால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவது கடினம் என்று அமித்ஷா நினைக்கிறார். அவர்கள் நாடு தழுவிய அளவில் உளவுத்துறை வைத்துள்ளனவர். அவர்கள் புள்ளி விபரங்களை கொடுத்திருப்பார்கள் அல்லவா?

மாநிலத்திற்குள்ளாக இருந்து தான் அரசியல் நிலவரத்தை தெரிந்துகொள்ள வேண்டும் இல்லை. அவர்களுக்கு நிறைய வாய்ப்பு, வசதிகள் உள்ளன. இறுதியில் எப்படி பார்த்தாலும் அதிமுக தனிப் பெரும்பான்மை வராது. நாம் அதிக இடங்களில், நிறைய சீட்டுகள் வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி அமைக்கலாம் என்று அமித்ஷா கணக்கு வைத்துள்ளார். எஸ்.ஐ.ஆர். காரணமாக அனைத்துக் கட்சிகளுக்கும் ஏதோ ஒரு வகையில் பயம் வந்துவிட்டது. காரணம் அனைத்துக்கட்சிகளுக்கும் வாக்குகள் குறைகிறது என்கிற எண்ணம் வந்துவிட்டது. எவ்வளவு வாக்குகள் குறைந்துள்ளன என்று கணக்கிடவும் முடியவில்லை. விடுபட்ட வாக்காளர்களை குறைந்த அளவே சேர்க்க முடியும்.

காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர்கள்

அதேவேளையில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கும், திமுக கூட்டணியில் காங்கிரசுக்கும் எவ்வளவு சீட்கள் தருவார்கள் என்று கணித்துவிடலாம். அதிமுகவுக்கு பாஜக தேவைப்படுகிறது. அதனால்தான் அதிக சீட்டுகள் கேட்கிறார்கள். அமித்ஷா கூட்டத்தில் ஓங்கி அடிக்க அதுதான் காரணம். ஆனால் காங்கிரஸ் கட்சி அந்த நிலைமையில் இல்லை. தேசிய அளவில் பாஜகவை எதிர்க்க காங்கிரஸ் வேண்டும் என்பது மட்டும் தான் திமுகவின் நிலைப்பாடு. காங்கிரசில் உள்ள சிட்டிங் எம்எல்ஏக்கள் திமுக உதவி இல்லாமல் எப்படி வெற்றி பெறுவார்கள்?

மாணிக்கம் தாகூரே 2,500 வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றார். திமுக தயவு இல்லாமல் அவரால் எம்.பி. ஆகி இருக்க முடியாது. அவர் ஏதோ தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது போல ட்வீட் போடுகிறார். கூட்டணியை உடைத்துவிட்டார்கள் என்றால், அந்த 25 தொகுதியை மற்ற கட்சிகளுக்கு பிரித்துக்கொடுப்பார்கள். என்னுடைய கணிப்பு படி தவெகவுக்கு 10 முதல் 15 சதவீதம் வாக்குகள் வரை வரலாம். அதிமுக, திமுகவில் வாய்ப்பு கிடைக்காதவர்கள் தவெகவில் சேர்கிறபோது, விஜய் வாக்குகளுடன் சேர்த்து தங்களால் வெற்றி பெற முடியும் என்று நினைக்கிறார்கள்.

செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி தினகரன் போன்றவர்கள் தவெக கூட்டணிக்கு வருவார்கள் என்று சொல்கிறார். அப்படி நடக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஜே.சி.டி.பிரபாகர், தவெகவில் சேர்ந்தது ஓபிஎஸ்க்கு சிறிது தயக்கம் அளிக்கலாம். ஆனால் அவர் நீண்ட காலமாகவே ஓபிஎஸ் உடன் தொடர்பில் இல்லை. மேலும் திமுக கூட்டணியில் சேர்ந்தால், ஓபிஎஸ்க்கு அதிக இடங்கள் கிடைக்காது. இனி அவர் அதிமுகவுக்கு உரிமை கோர முடியாது.

அதே நேரம் டிடிவி தினகரன் கண்டிப்பாக திமுக கூட்டணிக்கு செல்ல மாட்டார். அவர் தவெக கூட்டணிக்கு தான் செல்வார். ஆனால் எவ்வளவு தொகுதிகள் ஒதுக்குவார்கள் என்பதுதான் கேள்வி. தவெக – ஓபிஎஸ், தினகரன் கூட்டணி தொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் ஓபிஎஸ் 20 இடங்கள் கேட்பதாகவும், 12 இடங்களை தர விஜய் தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 இடங்கள் வரை பேச்சுவார்த்தை வரும் என்கிறார்கள்.

அதேநேரம் ஓபிஎஸ் அணியில் ஒரு பகுதியினர் திமுக ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளனர். ஒருவேளை ஓபிஎஸ் தவெக உடன் கூட்டணி சென்றால், அவரது அணி இரண்டாக உடையும். ஆனால் டிடிவி அணி உடையாது. அவர்கள் விஜய் கூட்டணியை எதிர்பார்க்கிறார்கள். இது தவிர்த்து மேலும் சில கட்சிகள் வர வாய்ப்பு உள்ளது. அப்போது தவெக அணி உருவாகும். சீமான் மட்டும் நாதக உடன் தனிக்கட்சியாக இருப்பார். இதனால் போட்டி தீவிரமாகும்.

அதே நேரம் திமுகவின் கைகள் மேலோங்கும். போட்டியில் அவர்கள் தான் முன்னிலை வகிப்பார்கள். இன்றைய தேதிக்கு 4 அணிகள் உள்ளன. இதில் முதல் அணிக்கு 35 சதவீதம் கிடைத்தால், 2வது அணிக்கு 30 சதவீதம் வாக்குகள் தான் கிடைக்கும். 3வது அணிக்கு 20 சதவீதம் வரும். எனவே 35 சதவீதம் வாக்குகளை எடுக்கும் கட்சிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ