மூதாட்டிகளுக்கு பொன்னாடை அணிவித்து 3000 ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு பொருட்களை திருவொற்றியூர் எம்.எல்.ஏ K.P சங்கர் வழங்கினாா்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு 3000 ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து சென்னை திருவொற்றியூரில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள், அனைவருக்கும்
தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக் கரும்புடன் பொங்கல் பரிசாக ரொக்கம் 3000 ரூபாயை திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார். முன்னதாக முதல் பரிசுத் தொகை வாங்க வந்த மூதாட்டிக்கு பொன்னாடை அணிவித்து பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக் கரும்பு ரொக்கம் ரூபாய் 3,000 விலையில்லா வேட்டி சேலைகளை வழங்கினார். இதனை அடுத்து வரிசையில் காத்திருந்த மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

திருவொற்றியூர், திருநகர், பாரதிநகர், கே.வி.கே குப்பம் எர்ணாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று ஒவ்வொரு கடைகளிலும் மூதாட்டிகளுக்கு சால்வை அணிவித்து பொங்கல் பொருட்களை வழங்கினார். பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்திற்கான டோக்கன் வழங்கும் பணி நேற்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று காலை முதலே பெண்கள் ஆர்வமுடன் ரேஷன் கடைகளுக்கு முன்பு பொங்கல் பரிசுகளை வாங்குவதற்கு வரிசையில் காத்திருந்தனர்.
அப்பொழுது இயல்பாய் உற்சாகத்துடன் பேசிய மூதாட்டி, ”பெண்களுக்கு நல்ல திட்டங்களை தமிழக அரசு வழங்கி வருவதாகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காக பாதுகாப்பான ஆட்சியாக இருப்பதாக கூறினார். பெண்களுக்கு பிடித்த ஆட்சி திமுக தான் மீண்டும் திமுகவுக்கு தான் வரவேண்டும். பெண்கள் நன்றாக வாழ்வதே திமுக ஆட்சியில் தான். நடிகர் விஜய் நாற்பது வருடம் கழித்து வரட்டும் அவசரம் இல்லை. நாட்டை எப்படி ஆள வேண்டும் என்று கற்றுக் கொள்ள வேண்டும். மறைந்த தலைவர் கலைஞர் பெரியாரிடம் கற்றுக்கொண்டார். அவரது மகன் மு.க.ஸ்டாலின் கலைஞரிடம் கற்றுக் கொண்டார். உதயநிதி அவரது தந்தை மு.க.ஸ்டாலினிடம் கற்றுக் கொண்டார். இவர்கள் கற்றுக் கொண்டுதான் வந்தார்கள் அதே போன்று கற்றுக்கொள்ள வேண்டும். பெண்களுக்கு என்ன செய்ய வேண்டும் ஆண்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நன்றாக தெரியும். இவர்களுக்கு தெரியாது படத்தில் நடித்து அதில் மட்டும் வெற்றி பெற வேண்டும். நாட்டுக்கு வேண்டாம் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
இளைஞர்கள் நேற்று பிறந்தவர்கள் அவர்களுக்கு என்ன தெரியும் யார் வேண்டுமானாலும் பிறந்த குழந்தையை கூட முதலமைச்சராக இருக்க வைத்து அழகை பார்ப்பார்கள். நாங்கள் பொறுப்பல்ல. இளைஞர்கள் நன்றாக படித்து வேலைக்கு செல்ல வேண்டும் முதலில் அதை செய்யட்டும்” என்று மூதாட்டி கூறினாா்.


