தன்னுடைய ஜனநாயகன் திரைப்பட பிரச்சினைக்கே குரல் கொடுக்காத விஜய், நாளை முதல்வரானால் மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பாரா? என்கிற கேள்வி எழுவதாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.


எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்:- கரூர் விவகாரத்தில் விஜயை சிபிஐ விசாரணைக்கு கூப்பிட்டிருக்கிறார்களே, அவரை கையை முறுக்குவார்களா? மரியாதையாக நடத்துவார்களா? என்று விஜயை மையப்படுத்தி தான் ஊடகங்கள் பேசுகின்றன. ஆனால் அந்த பறிபோன 41 பேர் உயிரை பற்றி நாம் விவாதிக்கவில்லை. தற்போது விஜய், நாம் அவசரப்பட்டு சிபிஐ விசாரணை கேட்டுவிட்டோமோ என்று யோசித்திருப்பார். மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள பாஜக அரசு அனைத்து தன்னாட்சி அமைப்புகளையும் தங்களுடைய கைப்பாவைகளாக மாற்றி வைத்துள்ளனர் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றுவதாலே, தமிழக காவல்துறையே விசாரிப்பதாலோ பைன்டிங்ஸ் ஒன்றும் இருக்காது.
சம்பவத்திற்கு பொறுப்பு யார்? என்ன செய்திருக்கக் வேண்டும்? இனிமேல் என்ன பன்ன வேண்டும்? என்றுதான் சொல்ல முடியும். செந்தில் பாலாஜிதான் குற்றவாளி என்றார்கள், யாராவது ஆதாரத் போய் கொடுத்தார்களா? விஜய் தாமதமாக வந்தார் என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. இந்த வழக்கு சட்டரீதியாக நடக்கிறது. நாங்கள் அதில் தலையிடவில்லை என்று விஜய் சொன்னாலும், அரசியல் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்று நாம் நம்புகிறோம்.

மதுரை மாநாட்டிற்கு பிறகு நடந்த செயற்குழுவில் தங்கள் முதலமைச்சர் வேட்பாளர் விஜய்தான் என்று அவர்கள் சொன்ன பிறகு, அதிமுக உடன் கூட்டணிக்கான கதவு மூடப்பட்டு விட்டது. ஒருவேளை எடப்பாடி பழனிசாமி நான் முயற்சித்துவிட்டேன், நீங்கள் முயற்சித்து பாருங்கள் என்று எடப்பாடி பழனிசாமி சொல்லி இருக்கலாம். இதில் மூடி மறைப்பதற்கு எதுவும் இல்லை. அவர்கள் சிபிஐ, அமலாக்கத்துறையை அதற்காக தான் பயன்படுத்துகிறார்கள். சமீபத்திய உதாரணம் அன்புமணி ராமதாஸ். அதற்கு முன்பாக கூட்டணி அமைச்சரவையில் 3 பாமகவினர் இருப்பார்கள் என்று சொன்னார்.
அதை எடப்பாடி ஏற்றுக்கொண்டாரா? என்று சொல்லவில்லை. அதற்கு காரணம் மத்திய பிரதேசத்தில் அவர் மீது இருக்கும் 2 எப்.ஐ.ஆர்கள் தான். அதை காண்பித்து அவசரப்படுத்தி இருப்பார்கள். இதே மிரட்டலை தினகரன் வரை அவர்கள் காட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்தார் என்ற வழக்கு அவர் மீது உள்ளது. அத்தகைய பாஜகவின் கீழ் உள்ள சிபிஐ விசாரணைக்கு அழைத்துள்ளது என்றால்? விஜயிடம் அவர்கள் அரசியல் பேசியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

விஜயின் கடைசிப்படம் என்று சொல்லப்பட்ட ஜனநாயகன் படத்திற்கு வழக்கத்திற்கு மாறாக சென்சார் போர்டு தடை விதித்தார்கள். தாங்கள் சார்ந்த அரசியல் கட்சியின் காரணமாக எஸ்.வி.சேகர், சரத்குமார் போன்றவர்கள் இது வழக்கமானது என்று சொல்கிறார்கள். படத்தை பார்த்து திருத்தங்கள் எல்லாம் செய்து யுஏ சான்றிதழ் கொடுத்துவிட்டனர். அடிப்படி சான்றிதழ் கொடுத்த பிறகு தணிக்கை வாரிய தலைவர் நிறுத்துகிறார். அதை ரிவியூவுக்கு அனுப்புகிறார்கள். தணிக்கை வாரியம் நீக்க சொன்ன காட்சிகளை நீக்கிவிட்டனர். மியூட் போட சொன்ன இடத்தில் போட்டுவிட்டார்கள். அதை ஒப்புக்கொண்ட பிறகே சான்றிதழ் கொடுத்தார்கள். அதன் பிறகே புகார் வந்துள்ளதாக சொல்லப்பட்டது. சரத்குமார் வெட்கப்பட வேண்டும். ஒரு நடிகராக இருந்து அவர் பார்க்க வேண்டும்.
இன்றைக்கு விஜய்க்கு நடந்தது, நாளைக்கு யோகி பாபு வரை நடைபெற்றது. நீதிமன்றம் கேட்கிறபோது தணிக்கை வாரிய உறுப்பினர்களில் ஒருவர் புகார் அளித்தது தெரியவந்தது. அந்த நபர் நினைத்திருந்தால் அந்த காட்சியை நீக்கி இருக்கலாம். ஆனால் தனி நீதிபதி கொடுத்த உத்தரவுக்கு அவசர அவசரமாக சென்று தடை வாங்கினார்கள். அப்போது அரசியல் வன்மத்தை, தனிநபர் வன்மத்தை காட்டுவது சென்சார் போர்டுதான். முழுக்க முழுக்க பாஜக பின்னால் இருக்கிறது என்று சொன்னால் நான் மறுக்கவே மாட்டேன்.

திமுக ஆட்சியை வீழ்த்த நான் எதுவும் செய்வேன் என்று சபதம் போட்ட விஜய்க்கு ஆதரவாக திமுக தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு ட்வீட் போட்டார். ஒரு அநியாயம் நடக்கிறபோது எவர் பாதிக்கப்பட்டாலும், எவரும் குரல் கொடுக்கலாம் என்ற அடிப்படையில் இதை நான் வரவேற்கிறேன். ஆனால் இன்று வரை விஜய் வாய்திறக்கவில்லை. இதற்கு பெயர் பயம் இல்லாமல் வேறு என்ன? கள்ள மௌனம் இது. ஆபத்தான மௌனம் இது. உங்களுக்கே ஒரு பிரச்சினை வருகிறபோது, விஜய் குரல் கொடுக்கவில்லை என்றால், நாளை மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கவில்லை என்றால் நாளைக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு பிரச்சினை வருகிறபோது எப்படி குரல் கொடுப்பார்?
அந்த நியாயமான கேள்வி ஒவ்வொரு தமிழர்களின் மனதிலும் வருமா? இல்லையா? இதை யாராவது அவரிடம் சொல்கிறார்களா? இல்லையா? தனது படத்திற்கு தடை விதித்த சென்சார் போர்டை எதிர்த்து ஒரு விஜய் நான்கு வார்த்தைகள் பேச மாட்டார் என்றால்? விஜய் ஆபத்தானவர் தான். விஜயை ஆதரிக்க பல லட்சம் பேர் தயாராக உள்ளபோது, விஜய்க்கு அந்த பொறுப்புணர்வு உள்ளது. அனுபவம் பெற்ற செங்கோட்டையன் போன்றவர்களிடம் ஆலோசனை கேட்டிருந்தால், அவர் சொல்லியிருப்பார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


