spot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசாதி பேதமற்ற சமத்துவப் பொங்கல் தமிழ்நாடெங்கும் பொங்கட்டும் - முதல்வர்

சாதி பேதமற்ற சமத்துவப் பொங்கல் தமிழ்நாடெங்கும் பொங்கட்டும் – முதல்வர்

-

- Advertisement -

சென்னை சங்கமம், நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மாலை 6 மணிக்கு தொடக்கி வைக்கிறார்.சாதி பேதமற்ற சமத்துவப் பொங்கல் தமிழ்நாடெங்கும் பொங்கட்டும் - முதல்வர்இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வலைதளப்பக்கத்தில், “சாதி பேதமற்ற சமத்துவப் பொங்கல் தமிழ்நாடெங்கும் பொங்கட்டும் கழகத்தினர் பொங்கல் விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள், கோலப் போட்டிகளை எழுச்சியோடு நடத்திப் பரிசுகள் வழங்கிடுங்கள்.

நாளை சென்னை சங்கமம் 2026 கலைவிழாவைச் சென்னையில் தொடங்கி வைக்கிறேன். 17-ஆம் நாள் மதுரை அலங்காநல்லூரில் ஏறுதழுவுதல் போட்டிகளைத் தொடங்கி வைக்கவுள்ளேன். 2026 பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலாக, திராவிடப் பொங்கலாக, நமக்கு வெற்றிப் பொங்கலாகப் பொங்கட்டும்!,” என்று தெரிவித்துள்ளார். சென்னையில் ஆண்டுதோறும் தை மாதம் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா என்ற நிகழ்ச்சி கடந்த 4 ஆண்டுகளாக நடத்தப்படுகிறது.

we-r-hiring

இந்த ஆண்டு கலை நிகழ்ச்சிகளை ஜனவரி 14ம் தேதி மாலை 6 மணிக்கு எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார். தமிழ்நாட்டின் புகழ் பெற்ற 250 கலைஞர்கள் இணைந்து நடத்தும் மாபெரும் இசை, நடன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. சென்னையில் 20 இடங்களில் ஜனவாி15 முதல் 18ம் தேதி வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

கரும்பு விற்பனை மந்தம்…வியாபாரிகள் வேதனை…

 

MUST READ