spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு”ஆளுநர் உரை தேவையில்லை” - எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்காக அரசியலமைப்பு திருத்தம் கோருவோம் -  முதல்வர்...

”ஆளுநர் உரை தேவையில்லை” – எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்காக அரசியலமைப்பு திருத்தம் கோருவோம் –  முதல்வர் மு.க.ஸ்டாலின்…

-

- Advertisement -

இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களுக்காக, ‘ஆளுநர் உரை தேவையில்லை’ என அரசியலமைப்பு திருத்தம் (ConstitutionalAmendment) கோருவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.”ஆளுநர் உரை தேவையில்லை” - எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்காக அரசியலமைப்பு திருத்தம் கோருவோம் -  முதல்வர் மு.க.ஸ்டாலின்…

இந்த ஆண்டின் முதல் தமிழக சட்டசபை கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வரும் நிலையில், அதன்படி இன்றைய கூட்டமும் கவர்னர் உரைக்காக ஏற்பாடு செய்யப்பட்டது.

we-r-hiring

சட்டசபை கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுவதற்காக, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, காலை 9.10 மணிக்கு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையான லோக் பவனில் இருந்து காரில் புறப்பட்டார். காலை 9.25 மணிக்கு தலைமைச் செயலகம் வந்த அவருக்கு, பேண்டு வாத்தியம் முழங்க போலீஸ் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கவர்னர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் மு.அப்பாவு, சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்று, சட்டசபை கூட்ட அரங்கத்துக்கு அழைத்துச் சென்றனர்.

சபை அரங்கத்துக்குள் வந்த கவர்னர் ஆர்.என்.ரவி, சபாநாயகரின் இருக்கை அருகே நின்றபடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வணக்கம் தெரிவித்தார். அவருக்கு வலதுபுறத்தில் சபாநாயகர் மு.அப்பாவும், இடதுபுறத்தில் கவர்னரின் செயலாளர் ஆர்.கிர்லோஷ் குமார் அமர்ந்தனர்.

சரியாக காலை 9.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதுடன் சட்டசபை கூட்டம் தொடங்கியது. ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றாமல் அவையிலிருந்து வெளியேறினார். இது, இந்த ஆண்டையும் சேர்த்து நான்காவது ஆண்டாக கவர்னர் உரையை அவர் புறக்கணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி, 2021 செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். 2022-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபையின் முதல் கூட்டத்தில் அவர் உரையை முழுமையாக வாசித்தார். அதன்பின்னர், தமிழக அரசு மற்றும் கவர்னர் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கவர்னர் தனது உரையை முழுமையாக வாசிப்பதைத் தவிர்த்து வருகிறார்.

2023-ம் ஆண்டு சட்டசபையின் முதல் கூட்டத்தில், கவர்னர் உரையில் இடம்பெற்றிருந்த மகளிர் முன்னேற்றம், மதச்சார்பின்மை, சுயமரியாதை, பெரியார், அம்பேத்கார், கலைஞர் ஆகிய வார்த்தைகளை வாசிக்க மறுத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த வார்த்தைகள் அரசு உரையில் இடம்பெறும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அவையில் கூறியதைத் தொடர்ந்து, கவர்னர் பாதியிலேயே அவையிலிருந்து வெளியேறினார்.

அதனைத் தொடர்ந்து, 2024-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபையின் முதல் கூட்டத்தில், தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் பாடப்படவில்லை எனக் கூறி, கவர்னர் உரையை வாசிக்காமல் ஆர்.என்.ரவி வெளியேறினார். அப்போது, அந்த உரையை சபாநாயகர் மு.அப்பாவு தமிழில் வாசித்து, அவைக்குறிப்பில் பதிவு செய்யப்பட்டது.

மேலும், 2025 ஜனவரி 6-ந் தேதி நடைபெற்ற சட்டசபையின் முதல் கூட்டத்திலும், தேசிய கீதம் பாடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி, கவர்னர் ஆர்.என்.ரவி அவையிலிருந்து வெளியேறினார்.

தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தில், அரசு தயாரித்த உரையை ஆளுநர் வாசிக்காமல் வெளியேறியதை தொடர்ந்து, தனது வலைதளப் பதிவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

அதில், ”இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களுக்காக, ‘ஆளுநர் உரை தேவையில்லை’ என அரசியலமைப்பு திருத்தம் (ConstitutionalAmendment) கோருவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

மேலும், அரசு தயாரித்தளித்த அறிக்கையை ஆளுநர் படிக்காமல் வெளியேறுவதால், திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனைகளைப் பயன்பெறும் மக்களிடம் மறைத்துவிட முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளாா்.

அரசியலமைப்புக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய சட்டப்பேரவைக்கும் மதிப்பளிக்காமல் மக்கள்நல நடவடிக்கைகளை முடக்கி வைத்து முரண்டு பிடிக்கும் தமிழ்நாடு ஆளுநரை ‘அடக்கமற்ற ஆளுநர்’ (‘Recalcitrant Governor’) என தி_இந்து தலையங்கத்தில் நேற்று குறிப்பிட்டிருந்தார்கள். அவரது இன்றைய செயல்பாடும் அதனை மெய்ப்பித்துள்ளது” என தனது பதிவில் முதலமைசர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

இந்திய இலக்கியங்களைக் காக்கும் முதலமைச்சர்!

MUST READ