spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைதவெக டுபாக்கூர் பார்ட்டி! மொழிப்போர் பற்றி விஜய்க்கு என்ன தெரியும்? அய்யநாதன் நேர்காணல்!

தவெக டுபாக்கூர் பார்ட்டி! மொழிப்போர் பற்றி விஜய்க்கு என்ன தெரியும்? அய்யநாதன் நேர்காணல்!

-

- Advertisement -

விஜய்க்கும், தமிழர்களுடைய பண்பாட்டிற்கும், தமிழர்களுடைய அரசியலுக்கும், மொழி பக்திக்கும் எந்த வித தொடர்பும் கிடையாது என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

தவெக செயல்வீரர்கள் கூட்டம் குறித்து மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- தவெக சார்பில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் மொழிப்போர் குறித்து விஜய் பேசியுள்ளார் என்று அவரது கட்சியினர் சொல்லி வருகிறார்கள். விஜய்க்கும், அவருடன் இருக்கும் ஆதவ் அர்ஜுன ரெட்டி, ஆர்எஸ்எஸ்-ல் இருந்து வந்த நிர்மல்குமார், புஸ்ஸி ஆனந்த், ஜான் ஆரோக்கியசாமி, அருண்ராஜ் போன்றவர்களிடம் எங்கே இருக்கிறது தமிழ். தமிழ் மொழி குறித்து இவர்களுக்கு என்ன தெரியும்? அல்லது விஜய்க்கு தான் தமிழ் குறித்து என்ன தெரியும்? திமுகவினர் அரசியல் பேசுவது போர் அடிப்பதாகவும், விஜய் ஒருநாள் பேசினாலும் செய்தியாக மாறும், தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்கிறார்கள். விஜய் பேசுவதில் எவ்வளவு சிந்தனை உள்ளது? எவ்வளவு இலக்கியம் உள்ளது? எவ்வளவு பொருட்செறிவு உள்ளது?

ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த் போன்றவர்கள் தமிழ்பேசுவதை பார்த்தாலே புரியும். மோடிக்கு பிறகு விஜயுடன் இருப்பவர்கள் தான் நன்றாக தமிழ் பேசுகிறார்கள். இவர்கள் மொழிப் போராட்டம் நடத்துகிறார்கள். தமிழ் இனத்திற்கு சுத்தமாக ஒவ்வாத ஒருவர் கட்சி தொடங்கியுள்ளார் என்றால் அது நடிகர் விஜய் தான். என்றைக்கு ஆதவ் அர்ஜுனாவையும், நிர்மல்குமாரையும் கட்சியில் சேர்த்தாரோ அன்றைக்கே புரிந்து கொண்டேன் விஜய்க்கு அறிவோ, சிந்தனையோ, எந்த பற்றுதலோ கிடையாது என்று அவருக்கு ஒன்றே ஒன்றுதான்.

பனையூரில் இருந்து வெளியே வந்து கிழக்கு கடற்கரை சாலையில் வந்து வலதுபுறம் திரும்பினால், தலைமை செயலகத்திற்கு நேரடியாக சென்று அவர் நேரடியாக முதல்வராக கையெழுத்து போடுவார். தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் எப்படி எப்படி பேசிய இவர்கள், கரூர் சம்பவத்திற்கு பிறகு 72 நாட்கள் ஓடிப்போய் தலைமறைவாக இருந்தனர். வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட பிறகு தான் வெளியே வந்து மூச்சு விட்டனர். மொழிப்போர் தியாகிகள் தினம் உள்ளிட்ட எதுவுமே அவர்களுக்கு தெரியாது. நாங்கள் மொழிப்போர் தியாகிகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவோம். இவர்கள் ஆட்டம் போடுவார்கள், மாலை போடுவார்கள். கடைசியில் அப்படியே எழுதி கொடுத்துவிட்டு வந்து விடுவார்கள். விஜயை போட்டுக்கொடுத்து விட்டு அவர் படாதபாடு படுகிறார். நீங்கள் விஜயை தேர்ந்தெடுத்தால் அவர் தமிழ்நாடை தூக்கி கொடுத்துவிடுவார். அதற்கு பிறகு நீங்கள் படாதபாடு படுவீர்கள். இவர்களுக்கும் தமிழர்களுடைய பண்பாட்டிற்கும், தமிழர்களுடைய அரசியலுக்கும், மொழி பக்திக்கும் எந்த வித தொடர்பும் கிடையாது. இவர்கள் எல்லாம் சுத்த ஏமாற்று பேர்வழிகள். இதற்கு மேல் அவர்களை சொல்வதற்கு கூசுகிறது.

திமுகவே, அதிமுகவாக தான் இருக்கிறது. ஏனென்றால் அதிமுகவில் இருந்த பல பேர் இன்றைக்கு திமுகவில் தான் இருக்கின்றனர். கோழி பிடிப்பது போல தலைவர்களை பிடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று விஜய் சொல்கிறார். அவர் பிடிக்க நினைக்கவில்லையா? அவரிடம் இரண்டு பேர் வந்தார்கள். வேறு யாரும் வரவில்லை. செங்கோட்டையன் பெரிதாக பட்டியல் எல்லாம் சொன்னார். இவர்கள் பெரிய டுபாக்கூர் பார்ட்டிகள். விஜயை சினிமாவில் ரசியுங்கள். தவெகவை அரசியலில் ரசியுங்கள். இவர்கள் அடிக்கப்போகிற கூத்து, பெருங்கூத்தாகும். கரூரில் கூட்டநெரிசல் மரணங்கள் நடைபெறாமல் இருந்திருந்தால் தாங்கள் தான் தமிழ்நாட்டை காக்க வந்தவர்கள் என்று சொல்லியிருப்பார்கள். கரூர் சம்பவத்திற்கு பிறகு இவர்கள் ஓடிப்போய் பதுங்கிய உடன் மக்களுக்கு இவர்களைப் பற்றி தெரிந்துவிட்டது. மொழிப்போர் என்பது நம்முடைய பண்பாட்டை, நம்முடைய மண்ணை, நம்முடைய மாண்பை காப்பாற்றிக் கொள்ளக் கூடிய ஒரு மாபெரும் போராட்டம். வேறு எந்த மண்ணிலாவது மொழிக்காக கொளுத்திக்கொண்டு செத்தவர்கள் உண்டா? தமிழர்களின் மொழிப்போர் குறித்து எந்த நாட்டில் சென்று பேசினாலும் எழுந்து நின்று கைத்தட்டுவார்கள். அதனால் தான் சொல்கிறேன் இவர்களை எல்லாம் தூக்கி எறியுங்கள்.

இந்தி எதிர்ப்பு கூட்டத்தில் பேசிய யாரும் விஜயை விமர்சிக்காமல் இருப்பதற்கு காரணம் அவர் முக்கிய நபர் என்பதற்காக அல்ல. விஜயை தற்போது கிடையில் வைத்திருக்கிறார்கள். இன்னும் இவரும் முடிவு எடுக்கவில்லை. அவர்களும் முடிவு எடுக்கவில்லை. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடலில் வருவது போல, குட்டி ஆடு தப்பி வந்தால் குள்ளநரிக்கு சொந்தம். குள்ளநரி மாட்டிக்கொண்டால் குறவனுக்கு சொந்தம். அதுபோன்று தற்போது குட்டி ஆடு, குள்ளநரியிடம் மாட்டிக் கொண்டுள்ளது. தற்போது கிடையில் கட்டி வைத்துள்ளார்கள். அது குருமா ஆகுமா? பிரியாணி ஆகுமா? என்று தெரியாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

MUST READ