spot_imgspot_img
Homeசெய்திகள்மாவட்டம்தூத்துக்குடியில் சோகம்!! 3 மாணவர்கள் பரிதாபமாக பலி!! கதறும் பெற்றோர்கள்!!

தூத்துக்குடியில் சோகம்!! 3 மாணவர்கள் பரிதாபமாக பலி!! கதறும் பெற்றோர்கள்!!

-

- Advertisement -

தூத்துக்குடி மாவட்டத்தில் கடலில் குளிப்பதற்காக சென்ற மாணவா்கள் கடலில் மூழ்கி பாிதாபமாக உயிரிழந்தனா்.தூத்துக்குடியில் சோகம்!! 3 மாணவர்கள் பரிதாபமாக பலி!! கதறும் பெற்றோர்கள்!!தூத்துக்குடி மாவட்டம் ஜாகீர் உசேன் நகரை சேர்ந்தவர்களான ஆறுமுகம் மகன் நரேன் ஸ்ரீகார்த்திக் (12), வனராஜன் மகன் திருமணி(13), கதிரேசன் மகன் முகேந்திரன் (12), முறையே 8, 9, 7 ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளனா். இவா்கள் மூன்று பேரும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தனா். இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு பள்ளி விடுமுறை என்பதால், இந்த மூன்று பேரும் கபடி விளையாடி வருவதாக பெற்றோா்களிடம் கூறிவிட்டு,  மேலும் 6 பேருடன் சோ்ந்து நேற்று மாலை  தாளமுத்துநகர் நகருக்கும், சிலுவைப்பட்டிக்கும் மிக அருகே மொட்டை கோபுரம் கடற்கரைக்கு பகுதிக்கு கடலில் குளிப்பதற்காக சென்றுள்ளனா். அங்கு கடலில் குளித்து விளையாடிக் கொண்டிருந்தனா்.

அப்போது கடலில் குளித்துக்கொண்டு இருந்த போது திடீரென ராட்சத அலையில் இழுத்து செல்லப்பட்டனர். இதில் சிறுவர்கள் 5 பேர் நீந்தியும், தத்தளித்தும் கரைக்கு வந்தனர். மீனவர் ஒருவர் சிறிய படகில் சென்று தத்தளித்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனை மீட்டு கரைக்கு அழைத்து வந்தார். மற்ற 3 பேரும் கடலில் மூழ்கினர்.

we-r-hiring

இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாளமுத்துநகா் போலீசாா் மற்றும் தருவைகுளம் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீசாா் வந்து மீனவா்களின் உதவியோடு 3 மாணவா்களின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் போலீசாா் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’…சென்சார் சான்று விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு…

 

MUST READ