Homeசெய்திகள்தமிழ்நாடுசுகாதாரப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற முன்வர வேண்டும் - டி.டி.வி. தினகரன்...

சுகாதாரப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற முன்வர வேண்டும் – டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்

-

- Advertisement -

பல்நோக்கு மருத்துவம் மற்றும் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத் தன்னார்வலர்களின் போராட்டத்தால் பொதுமக்களின் மருத்துவ சேவைகள் பாதிப்பு, பேச்சுவார்த்தையின் மூலம் சுகாதாரப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற முன்வர வேண்டும் என டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.சுகாதாரப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற முன்வர வேண்டும்  - டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்இதுகுறித்து அ.ம.மு.க பொதுச்செயலாளா் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பணிநிரந்தரம் கோரி பல்நோக்கு மருத்துவப் பணியாளர்களும், ஊதிய உயர்வு கோரி மக்களைத் தேடி மருத்துவத் திட்டத் தன்னார்வலர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் கிராமப்புற சுகாதார சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. கர்ப்பிணிப் பெண்கள் பராமரிப்பு, குழந்தைகளுக்கான தடுப்பூசி, தொற்றுநோய் கண்காணிப்பு, குடும்ப நலச் சேவைகள், சுகாதார விழிப்புணர்வு போன்ற பணிகளில் ஈடுபட்டு வரும் தங்களை பணிநிரந்தரம் செய்வதாகக் கூறி தொடர்ந்து ஏமாற்றி வருவதாக பல்நோக்கு மருத்துவப் பணியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதைப் போலவே, 2 மணி நேரம் மட்டுமே வேலை எனக்கூறி பணியமர்த்தப்பட்டு பல்வேறு பணிச்சுமைகளுக்கு உள்ளாக்கியதோடு, ஊதிய உயர்வு கோரி போராடும் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத் தன்னார்வலர்களை காவல்துறையின் மூலம் அடக்குமுறையை ஏவி கைது செய்வது கடும் கண்டனத்திற்குரியது. ஏற்கனவே, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு, போதுமான உட்கட்டமைப்பு வசதியின்மை என ஒட்டுமொத்த அவலத்தின் உருவமாக அரசு மருத்துவமனைகள் மாறி வரும் நிலையில், தற்போது பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த மருத்துவப் பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்களுக்கான சுகாதார சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

we-r-hiring

எனவே, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்நோக்கு மருத்துவப் பணியாளர்கள் மற்றும் மக்களைத் தேடி மருத்துவ திட்ட பணியாளர்களின் பிரதிநிதிகளை உடனடியாக அழைத்துப் பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்திட வேண்டும் என சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்” என அ.ம.மு.க பொதுச்செயலாளா் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளாா்.

அஜித் பவாரின் இறுதிச் சடங்கு…அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்பு…

MUST READ