spot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடரும் – கே.என்.நேரு உறுதி…

சட்டமன்ற தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடரும் – கே.என்.நேரு உறுதி…

-

- Advertisement -

திமுக காங்கிரஸ் கூட்டணி தொடரும் எனவும் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும் என்றும் கட்சியின் முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடரும் – கே.என்.நேரு உறுதி…

சென்னை ஆலந்தூரில் 32 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள மண்டல அலுவலக கட்டிடத்திற்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனுடன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு அடிக்கல் நாட்டினார்.

we-r-hiring

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நேரு, தனியார் வசம் இருந்த இந்த நிலத்தை அமைச்சர் தா.மோ அன்பரசன் மிகுந்த சிரமப்பட்டு மீட்டு, அரசு வசம் கொண்டு வந்துள்ளதாக கூறினார். தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ள இடத்தில் மண்டல அலுவலகம் மட்டுமல்லாமல், பேரிடர் மேலாண்மை துறை உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலகங்களும் செயல்படும் வகையில் கட்டிடங்கள் எழுப்பப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.  4 தளங்களுடன் கூடிய இக்கட்டிடத்துக்கான கட்டுமானப் பணிகள் 18 மாதத்தில் முடிவடையும் என்றும் அமைச்சர் நேரு விளக்கினார்.

மெட்ரோ பணிகளை முன்னிட்டு குடிநீர் தட்டுபாடின்றி பொதுமக்களுக்கு கிடைக்க, தண்ணீர் சேகரிப்பு குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர், அப்படி பற்றாக்குறை ஏற்பட்டாலும் லாரிகள் முலம் தேவைப்படும் இடங்களில் தண்ணீர் வழங்க ஏற்பாடுகள் தயாராக உள்ளன என்றார்.

சென்னை மாநகராட்சியில் 870 எம்.எல்.டி தண்ணீர் வழங்கப்பட்ட நிலையில், தற்போது 1300-க்கும் மேற்பட்ட எம்.எல்.டி  விநியோகிக்கப்படுவதாகவும் சென்னையில் எந்த பகுதியில் தட்டுபாடு இருந்தாலும் உடனடியாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

சட்டமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி தொடரும். எனக் கூறிய நேரு, திமுக கூட்டணி பலமான கூட்டணி என்றார்.  திமுக கூட்டணி வரும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறும் எனவும் ஆட்சியில் பங்கு குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என்றும் கே.என்.நேரு தெரிவித்தார்.

திண்டிவனம் பேருந்து நிலையம் பெயர் மாற்றம் விவகாரம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கண்டித்திருப்பது குறித்த கேள்விக்கு, சி.வி.சண்முகம் கண்டனம் தெரிவிக்காமல், திமுக அரசின் திட்டங்களுக்காக மாலையா அணிவிப்பார்? என்று நையாண்டியாக அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்தார்.

தைப்பூசம் – நாளை முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்

MUST READ