spot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்கண் மருத்துவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

கண் மருத்துவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

-

- Advertisement -

காரை விலைக்கு வாங்கி விட்டு பணம் தராமல் மோசடி செய்த புகாரில் குன்னூரைச் சேர்ந்த கண் மருத்துவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.கண் மருத்துவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!நீலகிரி மாவட்டம் குன்னூர் உழவர் சந்தை பகுதியைச் சேர்ந்தவர் முரளி (57). முன்னாள் அரசு கண் மருத்துவரான இவர், மவுண்ட் ரோடு பகுதியில் தனியாக கிளினிக் நடத்தி வருகிறார். இவருக்கும், கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த அபிமன்னன் என்பவருக்கும் இடையே கார் விற்பனை தொடர்பாக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ​அபிமன்னனிடம் இருந்து காரை பெற்றுக்கொண்ட டாக்டர் முரளி, அதற்காக வங்கிக்குச் செலுத்த வேண்டிய தவணைத் தொகையான 1.09 லட்சம் ரூபாயை நீண்ட நாட்களாகச் செலுத்தாமல் இழுத்தடித்துள்ளார். இது தொடர்பாக முரளிக்கு அவர் வழங்கிய காசோலையும் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பியது.

இதனால் அதிர்ச்சியடைந்த அபிமன்னன், தனது பணத்தைக் கேட்டுள்ளார். அப்போது டாக்டர் முரளி முறையாகப் பதிலளிக்காமல்,ஆபாசமாக பேசியதுடன் கொலை மிரட்டலும் விடுத்ததாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட அபிமன்னன் அளித்த புகாரின் பேரில் குன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

we-r-hiring

இந்த வழக்கு விசாரணை குன்னூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், நேற்றுமுன்தினம் நீதிபதி அப்துல் சலாம் தீர்ப்பு வழங்கினார். அதில் அபிமன்னனுக்கு பணம் தராமல் ஏமாற்றிய குற்றத்திற்காக டாக்டர் முரளிக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட புகார்தாரர் அபிமன்னனுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடாக வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

குடும்பமாக இரண்டு மனைவிகளுடன் நூதன திருட்டு!! விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!

MUST READ