Homeசெய்திகள்தமிழ்நாடு189 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் - அர்ச்சனா பட்நாயக் தகவல்

189 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் – அர்ச்சனா பட்நாயக் தகவல்

-

- Advertisement -

தமிழகத்தில் இதுவரை உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட 189 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல் தெரிவித்துள்ளாா்.189 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் - அர்ச்சனா பட்நாயக் தகவல்தமிழகத்தில் இதுவரை உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட 189 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல் தெரிவித்துள்ளாா்

மேலும், இதுகுறித்து அர்ச்சனா பட்நாயக், “பணமாக மட்டும் 4.7 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சிவிஜில் மூலமாக மட்டும் 1262 புகார்கள் பெறப்பட்டுள்ளன. அவை உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. 16 புகார்கள் மட்டும் இன்னும் உள்ளன. தவெக சார்பில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்வதற்கான அனுமதி அந்தந்த தேர்தல் அலுவலரிடம் கேட்கப்பட்டுள்ளன.

we-r-hiring

தமிழ்நாட்டிலிருந்து ஐ ஏ எஸ் அதிகாரி அஸ்ஸாம், மேற்குவங்கம் மாநிலத்திற்கு தேர்தல் பணிக்காக சென்றுள்ளனர். தமிழகத்திலிருந்து 4 ஐபிஎஸ் அதிகாரிகள் காவல் பார்வையாளர்களாகவும், 42 ஐ ஏ எஸ் அதிகாரிகள் பொதுப்பார்வையாளர்களாகவும் வெளிமாநிலங்களுக்கு சென்றுள்ளனர். இன்று இரவு வரை வாக்காளர் பட்டியலில் புதியதாக இணைய விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.

வேட்புமனுக்களின் போது என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறதோ ? அதே நடைமுறை தான் பின்பற்றப்படும். அது குறித்து விரிவான செய்தி குறிப்பு வெளியிடப்படும். 30 ஆம் தேதிக்கு பின்னர் பதற்றம் மிகுந்த வாக்குச்சாவடிகள் குறித்த விவரங்கள் தெரியவரும். மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர்கள் பதற்றம் மிகுந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் கவனம் செலுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் . சிசிடிவி ஏற்கனவே போடப்பட்டுள்ளது. வெப்காஸ்டிங் செய்ய ஏற்பட செய்யப்பட்டுள்ளது. நுண் பார்வையாளர்களும் அங்கு நியமிக்கப்படுவார்கள்.

காஞ்சிபுரத்தில் திருமணத்திற்காக பட்டு சேலை வாங்க பெண்ணிடம் இருந்த பணத்தை பறக்கும்படையினர் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, பறக்கும் படையினருக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்” என கூறியுள்ளாா்.

“உரிய ஆவணங்களுடன் ரூ.50,000க்கு மேல் கொண்டு செல்லலாம்” -அர்ச்சனா பட்நாயக்

 

MUST READ