Homeசெய்திகள்தமிழ்நாடுசெம்மண் குவாரி முறைகேடு வழக்கு - அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 7 பேர் விடுவிப்பு

செம்மண் குவாரி முறைகேடு வழக்கு – அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 7 பேர் விடுவிப்பு

-

- Advertisement -

முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி உள்ளிட்ட 7 பேர் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் இன்று (ஏப்ரல் 2, 2026) விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் அனைவரையும் விடுதலை செய்வதாக நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.செம்மண் குவாரி முறைகேடு வழக்கு - அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 7 பேர் விடுவிப்புஇந்த வழக்கின் முக்கிய விவரங்கள் வருமாறு:

​இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 7 பேரையும் நீதிபதி மணிமொழி  விடுதலை செய்து அதிரடி தீர்ப்பு அளித்துள்ளார்.

we-r-hiring

வழக்கின் பின்னணி:

கடந்த 2006-2011 திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த பொன்முடி, விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக (சுமார் 2.64 லட்சம் லோடு) மண் எடுத்து அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக 2012-இல் அதிமுக ஆட்சியில் வழக்குத் தொடரப்பட்டது.  இந்த வழக்கில் மொத்தம் 57 சாட்சிகள் சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்களில் 33 சாட்சிகள் அரசுத் தரப்புக்கு எதிராகப் பிறழ் சாட்சியம் அளித்திருந்தனர்.

​ “அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகப் போடப்பட்ட பொய் வழக்கு இது” என்று பொன்முடி தரப்பில் வாதாடப்பட்டது. இருதரப்பு வாதங்களும் கடந்த மார்ச் மாதம் நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

​ஏற்கனவே சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து உச்ச நீதிமன்றம் மூலம் தற்காலிகமாகப் பதவி தப்பிய பொன்முடிக்கு, இந்தச் செம்மண் குவாரி வழக்கின் விடுதலை பெரிய நிம்மதியைத் தந்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

தனது மகன்களுடன் அமைச்சர் பொன்முடி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்

 

MUST READ