Homeசெய்திகள்தேர்தல் 2026சேப்பாக்கம், திருவல்லிக்கேணியில் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் உதயநிதி ஸ்டாலின்

சேப்பாக்கம், திருவல்லிக்கேணியில் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் உதயநிதி ஸ்டாலின்

-

- Advertisement -

சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீடு வீடாக சென்று தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.சேப்பாக்கம், திருவல்லிக்கேணியில் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, திருவல்லிக்கேணி 116வது வட்டத்தில் காலையில் வீதிகளில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.

we-r-hiring

மாட்டாங்குப்பம் பகுதியில் துவங்கி தொடர்ந்து வி.ஆர். தெரு, கற்பக கன்னியம்மன் கோவில் தெரு 1 முதல் 6 தெருக்கள், பழனி அம்மன் கோவில் தெரு 1 முதல் 6 தெருக்கள், பழைய கட்டை தொட்டி தெரு, புதிய கட்டை தொட்டி தெரு, சுங்குவார் தெரு ஆகிய இடங்களில் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

அனைத்து வீதிகளில் நடந்து சென்றும் ஆட்டோவில் சென்றும் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு உதயநிதி ஸ்டாலினுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மலர்களை தூவியும், ஆரத்தி எடுத்தும் பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்

பிரச்சார நடைப்பயணத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மாவட்ட செயலாளர் சிற்றரசு, மரசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தோழமை கடை பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

விஜயை விட அரசியலில் அனுபவம் மிக்கவன் நான்தான் – திமுக வேட்பாளர் கருணாஸ் பேட்டி

MUST READ