தேர்தல் ஆணையம் ஒருதலை பட்சமாக இருக்கக் கூடாது – அப்பழுக்கற்ற அதிகாரிகளை மாற்றுகின்றனர் இது உண்மையிலேயே வருந்ததக்கது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.
ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்லப்பருந்தகை காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவரை ஆதரித்து காங்கிரஸ் மூத்த தலைவர் தங்கபாலு ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். குன்றத்தூர் ஒன்றியம் சிறுகளத்தூர், நந்தம்பாக்கம்,பூந்தண்டலம், நல்லூர் உள்ளிட்ட ஊராட்சியில் வாக்கு சேகரித்த வருகிறார்.

இந்த பிரச்சாரத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை, தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படக் கூடாது என்றும், நடுநிலையான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அப்பழுக்கற்ற அதிகாரிகளை மாற்றுவது வருந்தத்தக்கது என்றும் குறிப்பிட்டார்.
அதேவேளை, எம் ஜி ஆருக்கு பின்னர் ரஜினி மற்றும் அஜித் ஆகியோருக்கே துடிப்பான ரசிகர்கள் அதிகம் உள்ளனர் என கூறினார். குறிப்பாக, அஜித் சாலையில் சென்றால் தமிழ்நாடு முழுவதும் மக்கள் திரண்டு வருவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ரசிகர்கள் எந்த நடிகர் சென்றாலும் அவர்களை பார்க்கச் செல்வார்கள் என்றும் அவர் கூறினார்.
இதே நேரத்தில், விஜய் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், காங்கிரஸ் கட்சியின் மீது விமர்சனம் செய்வது நியாயமற்றது என தெரிவித்தார். 140 ஆண்டுகள் பழமையான காங்கிரஸ் கட்சி பல வெற்றிகளை கடந்து இன்னும் வலுவாக நிற்கிறது என்றும், கூட்டணி குறித்து முடிவு எடுப்பது கட்சி தலைமையின் அதிகாரம் என்றும் கூறினார்.
மேலும், சில புதிய அரசியல் முயற்சிகளை விமர்சித்த அவர், அது ஆபத்தான மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என தெரிவித்தார். மக்கள் நலனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
இறுதியாக, இளைஞர்கள் மற்றும் ரசிகர்களை குறித்து அவர் முக்கியமான எச்சரிக்கையும் விடுத்தார். பெற்றோர் தங்களது பிள்ளைகளை பாதுகாப்பாக கவனிக்க வேண்டும் என்றும், தவறான வழியில் வழிநடத்தும் நபர்களின் பின்னால் அனுப்பக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.
கொடநாடு வழக்கிலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தீர்ப்பை பெற்று தருவோம் – ஆர்.எஸ்.பாரதி
