2026 திமுக தேர்தல் அறிக்கையில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு எந்தவித மீட்டரும், பொருத்தப்படாத நவீன மின்சார பம்பு செட்டுகள் வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு டெல்டா மாவட்ட விவசாயிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழகத்தின் 17-வது சட்டமன்றத் தேர்தலில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக 164 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 164 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அப்போது நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,500 ஆகவும், கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூ.4,500 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும். இலவச மின்சாரம் பெறும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு எந்தவித மீட்டரும், பொருத்தப்படாத நவீன மின்சார பம்பு செட்டுகள் வழங்கப்படும். கரும்பு விவசாயிகள் பயன்பெறும் வகையில் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ 4,500 வழங்கப்படும் என அறிவித்துள்ள செய்தி விவசாயிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் கூறுகையில், “திமுக 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று விவசாயிகளுக்கு தனி பட்ஜெட்டை அறிவித்து விவசாயிகள் நலனை பாதுகாத்து வந்தார் முதல்வர். அதுபோல இந்த ஆண்டு தேர்தல் அறிக்கையில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் இலவச மின்சாரம் பெறும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு எந்தவித மீட்டரும் பொருத்தப்படாத நவீன மின்சார பம்பு செட்டுகள் வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை முதல்வா் அளித்துள்ளார். இது தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என கூறினாா்.
முதல்வரின் சொத்து மதிப்பை விட விஜய்யின் சொத்து பலமடங்கு அதிகம் – மிரள வைக்கும் தவெக கோடீஸ்வரர்கள்

