Homeசெய்திகள்தேர்தல் 2026வானதி சீனிவாசன் ICU-வில் அனுமதி – தேர்தல் பிரசாரம் ரத்து…இதனால் வெற்றியை பாதிக்குமா?

வானதி சீனிவாசன் ICU-வில் அனுமதி – தேர்தல் பிரசாரம் ரத்து…இதனால் வெற்றியை பாதிக்குமா?

-

- Advertisement -

அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் வானதி சீனிவாசன் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் மருத்துவ மனையில் அனுதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதனால் தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்துள்ளாா்.

வானதி சீனிவாசன் ICU-வில் அனுமதி – தேர்தல் பிரசாரம் ரத்து…இதனால் வெற்றியை பாதிக்குமா?

we-r-hiring

​கோவை வடக்கு தொகுதியல் பாஜக சார்பில் போட்டியிடும் வானதி சீனிவாசன் கடந்த சில தினங்களாக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தாா். அவரது கால் வீக்கம் அடைந்த காரணமாக கோவை அவிநாசி சாலையில் உள்ள கே.எம்.சி.எச் (KMCH) தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

​ அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார். எனினும், அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் ​ அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் 48 மணி நேரம் கட்டாயம் ஓய்வெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

​​மருத்துவர்களின் இந்த அறிவுறுத்தலைத் தொடர்ந்து, வானதி சீனிவாசன் கலந்து கொள்ளவிருந்த அடுத்த இரண்டு நாட்களுக்கான தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் வானதி சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இந்த நிலையில் அவருடைய வெற்றி பாதிப்படையலாம் என்று கூறப்படுகிறது.

வீட்டை விட்டு வெளியே வராத விஜய் – வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க தொண்டர்களிடம் கோரிக்கை…

MUST READ