Homeசெய்திகள்தேர்தல் 2026தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் தலையிட முடியாது – சென்னை உயர்நீதி மன்றம்

தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் தலையிட முடியாது – சென்னை உயர்நீதி மன்றம்

-

- Advertisement -

அரசியல் கட்சிகள் சார்பில் அமைக்கப்படும் தேர்தல் பணிமனைகளை  நிரந்தர கட்டிடங்களில் அமைக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் தலையிட முடியாது – சென்னை உயர்நீதி மன்றம்

we-r-hiring

சட்டமன்ற தேர்தலை ஒட்டி, அரசியல் கட்சிகள் சார்பில் அமைக்கப்படும் பணிமனைகளை நிரந்தர கட்டிடங்களில் மட்டுமே அமைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் ஆர்.இளங்கோ சார்பில் அவரது பிரதிநிதி முத்துக்குமார பார்த்திபன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு,  அனைத்து வேட்பாளர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும் வகையில் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது எனவும்,  குறுகிய காலத்திற்கு தேர்தல் பணிக்காக மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட கட்டிடத்தை  பெற முடியாது என மனுதாரர் தரப்பில் கூறினாலும்,  கரூரில் பல உயிர்கள் பலியான  விரும்பத்தகாத சம்பவம்  உள்ளிட்ட அனைத்து சூழ்நிலைகளையும் தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டு உத்தரவு பிறப்பித்துள்ளதாக  குறிப்பிட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டில் கூட, நியாயமான தேர்தல் நடைமுறைக்கு இடையூறாக, பல சட்டவிரோத செயல்களைச் செய்யும் நோக்கில் கொட்டகைகள் அமைக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில்,  பல கொட்டகைகள்  மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மக்கள் பாதுகாப்பு, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் ஆகியவற்றை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் அறிவுத்தல்களை வழங்கி வரும் நிலையில், ஒருவேளை மனுதாரரின் விண்ணப்பத்தை ஏற்று  கொட்டகையை பயன்படுத்த அனுமதித்தால்,  கட்சியினர், பொதுமக்கள் என ஏராளமானோர் வருகை தரும் போது  அசம்பாவித சம்பவங்கள் நிகழும் அபாயம் இருந்திருக்கும் எனக் கூறிய நீதிபதிகள்,  வேட்பாளர்கள், தொண்டர்கள், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகளை  தன்னிச்சையானது என்று கருத முடியாது என தெரிவித்துள்ளனர்.

நிரந்தர கட்டடங்களில் பணிமனை அமைப்பது பாதுகாப்பானது மட்டுமல்லாமல், எந்தவொரு அசம்பாவிதங்களிலிருந்தும் கட்சியினரையும், பொதுமக்களையும் பாதுகாப்பதாக அமையும் என்பதால், தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் தலையிட எந்த முகாந்திரமும் இல்லை என கூறி,  வழக்கை தள்ளுபடி செய்து  நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

”சகோதரா் ஜேதஸ்வியை தமிழ்நாடு சார்பில் வரவேற்கிறேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

MUST READ