Homeசெய்திகள்மாவட்டம்பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரனம் – மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா...

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரனம் – மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா அறிவிப்பு

-

- Advertisement -

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூபாய் 5 லட்சம் நிவாரனமாக வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளாா்.பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரனம் – மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா அறிவிப்பு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு சார்பில் தலா 5 லட்சம் ரூபாயும் படுகாயம் அடைந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாயும் லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாயும் நிவாரணமாக வழங்கப்பட உள்ளது என்றார்.

we-r-hiring

மேலும் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களை கைது செய்ய காவல் துறையினர் தீவிரமாக தேடி வருவதாகவும் அவர் தெரிவித்ததாா். வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையை முறையாக கண்காணிக்காத அலுவலர்கள் மீது  தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினாா்.  மேலும், 25 பேர் உயிரிழந்த பட்டாசு ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்றாா்.

விதிகளை மீறி செயல்படும் பட்டாசு ஆலைகளை கண்காணிக்க அதிக குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படும். ஒரு பட்டாசு ஆலை உரிமையாளர் செய்யும் தவறால் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு தொழில் பாதிக்கப்படும் எனவும் எனவே விதிகளை மீறி செயல்படும் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மீது எடுக்கும் நடவடிக்கைக்கு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் ஆதரவு தருவதாக  அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக கூறினாா்.

கட்டனார்பட்டி வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையின் உரிமையாளர்கள் மீது குண்டாஸ் சட்டம் போடுவதற்கான ஆலோசனை செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். பட்டாசு வெடி விபத்தால் பாதிக்கப்படும் குடும்பத்தில் உள்ள குழந்தைகளின் கல்விச் செலவை அரசு ஏற்கும் என்றும், அவர்களு உயர்கல்விகளுக்கான வழிகாட்டு முறைகளை அரசு ஏற்படுத்திக் கொடுத்து வருவதாகவும் மாவட்ட ஆட்சியல் சுகபுத்ரா தெரிவித்தார்.

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: ஏன் இழப்பீடு இன்னும் வழங்கப்படவில்லை? – நீதிபதிகள் கேள்வி

MUST READ