தமிழகத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்ததில், முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் பலர் மீது கடுமையான குற்றவழக்குகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதிமுக, தவெக மற்றும் திமுக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் மீதுள்ள கடுமையான குற்றவழக்குகள் இருப்பது தெரிய வருகிறது. அதிமுக (AIADMK): ஆய்வு செய்யப்பட்ட 170 வேட்பாளர்களில் 60 பேர் மீது கடுமையான குற்றவழக்குகள் உள்ளன.
திமுக (DMK): ஆய்வு செய்யப்பட்ட 175 வேட்பாளர்களில் 32 பேர் மீது கடுமையான குற்றவழக்குகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் (TVK): ஆய்வு செய்யப்பட்ட 231 வேட்பாளர்களில் 43 பேர் மீது கடுமையான குற்றவழக்குகள் உள்ளன.
தமிழகம் முழுவதும் போட்டியிடும் மொத்த வேட்பாளர்களில் 722 பேர் (18%) மீது குற்றவழக்குகளும், 404 பேர் (10%) மீது மிகத் தீவிரமான குற்றவழக்குகளும் உள்ளன.
குற்றப்பின்னணி இல்லாதவர்களை வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தல்கள், இந்தத் தேர்தலில் கட்சிகளால் பெரிய அளவில் பின்பற்றப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும் இதனுடன் வெளியான மற்றொரு தகவலில், தமிழக வேட்பாளர்களில் 25% பேர் (981 பேர்) கோடீஸ்வரர்களாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
